கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.3 (எளிய நேரிய சமன்பாடுகள்) | 7th Maths : Term 1 Unit 3 : Algebra
பயிற்சி : 3.3
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை __________ என்பர்.
விடை : சமம்
ii) a = 5, எனில் 2a + 5 ன் மதிப்பு __________
விடை : 15
iii) மாறி x ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் __________
விடை : 6x
2. சரியா, தவறா எனக் கூறுக
i) ஒவ்வொரு இயற்கணிதக் கோவையும் ஒரு சமன்பாடு ஆகும்.
விடை : தவறு
ii) xன் மதிப்பறியாத நிலையில் 7x + 1 என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது.
விடை : சரி
iii) இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.
விடை : சரி
3. தீர்க்க :
i) x + 5 = 8
ii) p – 3 = 7
iii) 2x = 30
iv) m / 6 = 5
v) 7x + 10 = 80
தீர்வு :
i) x + 5 = 8
x = 8 – 5 = 3
x = 3
ii) p – 3 = 7
p = 7 + 3
p = 10
iii) 2x = 30
x = 30 / 2
x = 15
iv) m / 6 = 5
m = 5 × 6
m= 30
v) 7x + 10 = 80
7x = 80 - 10
7x = 70
x = 70 / 7
x = 10
4. 5x + 8y என்னும் கோவையைப் பெற 3x + 6y உடன் எதனைக் கூட்ட வேண்டும்?
தீர்வு :
அந்த கோவை p என்க.
(3x + 6y) + p = 5x + 8y
p = 5x + 8y - 3x - 6y
p = 2x + 2y
5. ஒரு முழு எண்ணின் மூன்று மடங்குடன் 9-ஐக் கூட்ட, 45 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க
தீர்வு :
அந்த எண் x என்க.
3x + 9 = 45
3x = 45 - 9
3x = 36
x = 36 / 3
x = 12
ஃ அந்த எண் 12.
6. இரண்டு அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் 200 எனில் அவ்வெண்களைக் காண்க.
தீர்வு :
அடுத்த அடுத்த எண்கள் x மற்றும் x + 2 என்க
x + (x + 2) = 200
2 x + 2 = 200
2x = 200 - 2
2x = 198
x = 198 / 2 ⇒ x = 99
அந்த எண்கள் 99 மற்றும் 101.
7. வாடகை மகிழுந்தின் (Taxi) வாடகைக் கட்டணமாக, முதல் 5 கி.மீ தொலைவிற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ₹100ம், 5 கி.மீக்கு மிகும் தொலைவிற்கு கி.மீக்கு ₹16 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது பயணத்திற்காக வழங்கிய மொத்த தொகை ₹740 எனில், அவர் பயணித்த தொலைவைக் காண்க.
தீர்வு :
பயணித்த தொலைவு y என்க
ஃ x = y + 5 கிமீ
நிபந்தனை :
100 + 16y = 740
16y = 740 - 100
16y = 640
y = 40
ஃ x = y + 5 கிமீ
= 40 + 5 ⇒ x = 45 கிமீ
கொள்குறி வகைவினாக்கள்
8. 3, 6, 9, 12, ...... என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்
i) n
ii) 2n
iii) 3n
iv) 4n
விடை : iii) 3n
9. 3x + 5 = x + 9 என்பதன் தீர்வு
i) 2
ii) 3
iii) 5
iv) 4
விடை : i) 2
10. y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?
i) 0
ii) -1
iii) 1
iv) -2
விடை : ii) -1
விடைகள்
பயிற்சி -3.3
1. (i) சமம் (ii) 15 (iii) 6x
2. (i) தவறு (ii) சரி (iii) சரி
3. (i) x = 3 (ii) p = 10 (iii) x = 15 (iv) m = 30 (v) x = 10
4. 2x+2y
5. x = 12
6. 99 மற்றும் 101
7. x = 45கிமீ
8. (iii) 3n
9. (i) 2
10. (ii) −1