இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 3 : Algebra
பாடச்சுருக்கம்
● மாறாத எண் மதிப்பைக் கொண்டது மாறிலி. மாறுபடும் பல எண் மதிப்புகளைக் கொண்டது மாறி.
● கூட்டல், கழித்தல் செயலிகள் மூலம் மாறிகளையும், மாறிலிகளையும் இணைப்பதே இயற்கணிதக் கோவையாகும்.
● இயற்கணிதக் கோவையின் மூலம் எந்தவொரு கணிதச் சூத்திரம், விதி அல்லது அமைப்பையும் பொதுமைப்படுத்த முடியும்.
● ஓர் இயற்கணிதக் கோவையில், '+' மற்றும் '-' குறியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள், அதன் உறுப்புகள் எனப்படும்.
● இயற்கணிதக் கோவையின் ஓர் உறுப்பின் ஒவ்வொரு காரணிக்கும் அல்லது காரணிக்கூட்டத்திற்கும் கெழு என்பது மீதமுள்ள பிற காரணிகளாகும். ஒரு உறுப்பின் மாறிலியை அதன் எண்கெழு என்பர்.
● ஒரு கோவையில் மாறுபட்ட எண் கெழுக்களுடன், ஆனால் ஒரே மாறியைக் கொண்ட உறுப்புகளை ஒத்த உறுப்புகள் எனவும், அவ்வாறு இல்லாதவற்றை மாறுபட்ட உறுப்புகள் எனவும் அழைப்பர்.
● ஒத்த உறுப்புகளை மட்டும் கூட்டவோ, கழிக்கவோ முடியும். மாறுபட்ட உறுப்புகளைக் கூட்டவோ, கழிக்கவோ இயலாது.
● ஒரு சமன்பாடு என்பது ஒரு மாறிலிக்கோ அல்லது மற்றொரு இயற்கணிதக் கோவைக்கோ சமப்படுத்தப்பட்ட ஓர் இயற்கணிதக் கோவையாகும்.
● ஒரு சமன்பாட்டைத் தீர்க்க, அதன் இருபுறமும் ஒரே எண்ணைக் கூட்டவோ, கழிக்கவோ, பெருக்கவோ அல்லது வகுக்கவோ செய்யலாம்.
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - இயற்கணிதம்” என்னும் பணித்தாளிற்குச் செல்லவும் "புதிய கணக்குகள்” என்பதைச் சொடுக்கி புதிய கேள்விகளைப் பெறுக.
படி 2
சரியான எண்ணை உள்ளீடு செய்து, உள்நுழை (Enter) பொத்தானை அழுத்தவும். விடை சரியானது எனில், "சிறப்பான பணி” எனத் திரையில் தோன்றும். மேலும் பல கணக்குகளைப் பயிற்சி செய்யவும்.
செயல்பாட்டிற்கான உரலி
இயற்கணிதம் : https://ggbm.at/tb●usqg7
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.