பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 (நேரம், பணம் மற்றும் தொலைவு) | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept
பயிற்சி 5.2
1. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
2. i. 20 மைல்/மணி வேகத்தில் 2 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு :
ii. 65 மைல்/மணி வேகத்தில் 4 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
iii. 48 கி.மீ/மணி வேகத்தில் 5 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
iv. 80 கி.மீ/மணி வேகத்தில் 6 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
v. 42 கி.மீ/ மணி வேகத்தில் 3 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு :
i. 20 மைல்/மணி வேகத்தில் 2 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு :
தீர்வு :
தொலைவு = வேகம் × நேரம்
= 20 × 2
= 40
விடை : 40 மைல்கள்
ii. 65 மைல்/மணி வேகத்தில் 4 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
தீர்வு :
தொலைவு = வேகம் × நேரம்
= 65 × 4
= 260
விடை : 260 மைல்கள்
iii. 48 கி.மீ/மணி வேகத்தில் 5 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
தீர்வு :
தொலைவு = வேகம் × நேரம்
= 48 × 5
= 240
விடை : 240 கி.மீ
iv. 80 கி.மீ/மணி வேகத்தில் 6 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
தீர்வு :
தொலைவு = வேகம் × நேரம்
= 80 × 6
= 480
விடை : 480 கி.மீ
v. 42 கி.மீ/ மணி வேகத்தில் 3 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு :
தீர்வு :
தொலைவு = வேகம் × நேரம்
= 42 × 3
= 126
விடை : 126 கி.மீ
3. கோபி என்பவர் 14 கி.மீ/மணி நேர வேகத்தில் 12 மணி நேரம் ஓடினால், அவர் கடந்த தொலைவு எவ்வளவு?
தீர்வு :
கோபி என்பவரது வேகம் = 14 கி.மீ/மணி
நேரம் = 12 மணி
தொலைவு = வேகம் × நேரம்
அவர் கடந்த தொலைவு = 14 கி.மீ/மணி × 12 மணி
= 168 கி.மீ
விடை :
அவர் கடந்த தொலைவு 168 கி.மீ
4. இராஜா 30 கி.மீ/மணி நேர வேகத்தில், உந்து வண்டியில் (Motor Cycle) பயணம் செய்கிறார் எனில், 4 மணிநேரத்தில் அவர் கடந்த தொலைவு எவ்வளவு?
தீர்வு :
இராஜா என்பவரது வேகம் = 30 கி.மீ/மணி
நேரம் = 4 மணி
தொலைவு = வேகம் × நேரம்
4 மணிநேரத்தில் அவர் கடந்த தொலைவு = 30 கி.மீ/மணி × 4 மணி
= 120 கி.மீ
விடை :
4 மணிநேரத்தில் அவர் கடந்த தொலைவு 120 கி.மீ
செயல்பாடு 3
கோள்களுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டத் தொலைவு.
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
* பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டத் தொலைவு …………………
விடை : 14,96,00,011கி.மீ
* சூரியனிலிருந்து மிகத்தொலைவில் உள்ள கோள் ……………………..
விடை : நெப்டியூன்
* சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் …………………
விடை : புதன்
* சூரியனிலிருந்து கோள்களின் தொலைவிற்கேற்றவாறு கோள்களை ஏறுவரிசையில் எழுதுக.
விடை :
ஏறுவரிசை : புதன் , வெள்ளி , பூமி , செவ்வாய் , வியாழன் , சனி , யுரேனஸ் , நெப்டியூன்
* சூரியனிலிருந்து கோள்களின் தொலைவிற்கேற்றவாறு கோள்களை இறங்குவரிசையில் எழுதுக.
விடை :
இறங்குவரிசை: நெப்டியூன் , யுரேனஸ் , சனி , வியாழன் , செவ்வவாய் , பூமி , வெள்ளி , புதன்