பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - நீளம், காலம், பணம் ஆகியவற்றின் அலகுகளின் சூழல்களில் பின்னங்களைப் பயன்படுத்துதல் | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept
நீளம், காலம், பணம் ஆகியவற்றின் அலகுகளின் சூழல்களில் பின்னங்களைப் பயன்படுத்துதல்.
நீளம் (பின்னங்களில்)
எடுத்துக்காட்டு
2 கி.மீ 500 மீ = 2 ½ கி.மீ
1 கி.மீ 250 மீ = 1 ¼ கி.மீ
7 கி.மீ 750 மீ = 7 ¾ கி.மீ
8 கி.மீ 500 மீ = 8 ½ கி.மீ
தெரிந்து கொள்வோம்
1 கி.மீ = 1000 மீ
½ கி.மீ = 500 மீ
¾ கி.மீ = 750 மீ
¼ கி.மீ = 250 மீ
நேரம் (பின்னங்களில்)
15 நிமிடங்கள் = ¼ மணி நேரம்
30 நிமிடங்கள் = ½ மணி நேரம்
45 நிமிடங்கள் = ¾ மணி நேரம்
60 நிமிடங்கள் = 1 மணி நேரம்
அறிந்து கொள்வோம்
60 நிமிடங்கள் = 1 மணி நேரம்
60 நிமிடங்களில் அரைப்பகுதி = 30 நிமிடங்கள்
60 நிமிடங்களில் காற்பகுதி = 15 நிமிடங்கள்
60 நிமிடங்களில் முக்காற்பகுதி = 45 நிமிடங்கள்
1 மணி நேரம் = 60 நிமிடங்கள்
எடுத்துக்காட்டு
1. நிமிடங்களில் மாற்றுக.
i) 2 மணி நேரம் = 2 × 60 = 120 நிமிடங்கள்
ii) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் = (3 × 60) + 20 = 200 நிமிடங்கள்
iii) 4 மணி நேரம் = 4 × 60 = 240 நிமிடங்கள்
iv) 5 மணி நேரம் 15 நிமிடங்கள் = (5 × 60) + 15 = 300 + 15 = 315 நிமிடங்கள்
2. மணி நேரங்களில் மாற்றுக.
i) 75 நிமிடங்கள் = 60 நிமிடங்கள் + 15 நிமிடங்கள்
= 1 மணி நேரம் + ¼ மணி நேரம் = 1 ¼ மணி நேரம்
ii) 90 நிமிடங்கள் = 60 நிமிடங்கள் + 30 நிமிடங்கள்
= 1 மணி நேரம் + ½ மணி நேரம் = 1 ½ மணி நேரம்
பணம் (பின்னங்களில்)
₹ 1 = 100 பைசா
எடுத்துக்காட்டு
₹ 1 இல்
எடுத்துக்காட்டு
₹ 100 இல்
எடுத்துக்காட்டு
₹ 2000 இல்