தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 7.3 | 8th Maths : Chapter 7 : Information Processing
பயிற்சி 7.3
1. பின்வருவனவற்றுள் பொருள்களை வாங்குவதற்கான சிறந்த வழியைக் காண்க.
(i) ₹175 இக்கு 5 இனிப்புக் கட்டிகள் அல்லது ₹114 இக்கு 3 இனிப்புக் கட்டிகள்.
(ii) பாஸ்கர் 1½ டசன் முட்டைகளை ₹81 இக்கு வாங்குவது அல்லது அருணா 15 முட்டைகளை ₹64.50 இக்கு வாங்குவது.
2. பின்வரும் பொருள்களை வாங்குவதற்கு, புதிய அடுமனை மற்றும் இனிப்புத் தயாரிப்புகளின் சிறப்புச் சலுகை விலையில் வாங்கினால் மொத்தமாக நீங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு? ½ கிலோ லட்டு, 1 கிலோ கட்டிகை (cake), 6 ரொட்டித் துண்டுகள்.
3. கொடுக்கப்பட்டப் படத்திலிருந்து விலைப் பட்டியலைத் தயார் செய்க.
1 ½ கிலோ ஆப்பிள், 2 கிலோ மாதுளை, 2 கிலோ வாழைப்பழம், 3 கிலோ மாம்பழம், வாங்கத் திட்டமிட்டு அவை அங்காடி 1 இல் ½ கிலோ பப்பாளி, 3 கிலோ வெங்காயம், 1 ½ கிலோ தக்காளி, 1 கிலோ கேரட், ஆகியவற்றை அங்காடி 2 உடன் ஒப்பிடும்போது எவ்வளவு சேமிப்பீர்கள்.
4. படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மளிகைப் பொருள்களை கையில் வைத்திருக்கும் ₹1000 இக்குள் வாங்க விரும்புகிறீர்கள். மேலும் உங்களிடம் 7 கிலோ எடையை சுமக்கும் கை பை உள்ளது எனில், 1 கி.கி பொருளுக்கான அதிகபட்ச விலையின் அடிப்படையில் பொருள்களை அட்டவணைப்படுத்தி 7 கிலோவிற்கு மிகாமல் நீங்கள் கையில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிகபட்சமாக செலவிடும் தொகை எவ்வளவு எனக் கணக்கிடுக.
கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் தேவைப்பட்டியல்
1. 2 கி.கி சிவப்பு மிளகாய்
2. 2 கி.கி கொத்தமல்லி
3. 1 கி.கி பூண்டு
4. 1 கி.கி புளி
5. 2 கி.கி துவரம் பருப்பு
கொள்குறி வகை வினாக்கள்
5. இணையம் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் வணிகர்கள் பொருள்களை வாங்க வைக்கக் கையாளும் யுக்திகள்
(அ) சிறப்பு இசையைப் பயன்படுத்துதல்
(ஆ) கவர்ச்சிகரமான படங்களைப் பயன்படுத்துதல்
(இ) இப்பொருள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தைத் தூண்டுவது
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: (ஈ) மேற்கூறிய அனைத்தும்
6. நான் பொருள்கள் வாங்க அங்காடிக்குச் சென்றால்,
(அ) கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் பொருள்களை வாங்குவேன்
(ஆ) எனது நண்பரிடம் இருக்கும் பொருள்களைப் போல வாங்குவேன்
(இ) நான் வாங்க வேண்டிய பொருள்களை வாங்குவேன்
(ஈ) நான் கடையில் முதலில் பார்க்கும் பொருள்களை வாங்குவேன்
விடை: (ஆ) எனது நண்பரிடம் இருக்கும் பொருள்களைப் போல வாங்குவேன்
7. சிறந்த முறையில் பொருள்களை வாங்குதல் என்பது
(அ) எப்போதும் சிறந்த பெயர் பெற்ற அங்காடிகளில் பொருள்களை வாங்குதல்
(ஆ) வாங்குவதற்கு முன் சில அங்காடிகளில் பொருள்களை ஒப்பிடுதல்
(இ) எனது நண்பர்கள் வாங்கிய பொருள்களைப் போல வாங்குதல்
(ஈ) எப்போதும் வாங்கும் ஒரு வழக்கமான கடையில் பொருள்களை வாங்குதல்
விடை: (இ) எனது நண்பர்கள் வாங்கிய பொருள்களைப் போல வாங்குதல்