தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு - தகவல் செயலாக்கம் | 8th Maths : Chapter 7 : Information Processing
UNIT 7
தகவல் செயலாக்கம்
கற்றல் நோக்கங்கள்
• வெவ்வேறு எண்ணிக்கையிலான பொருட்களின் அனைத்து சாத்தியமான வரிசைகளைத் தீர்மானித்து, அவ்வரிசைகளின் பட்டியல் மற்றும் எண்ணுதல் கொள்கைகளை விவரித்தல்.
• தருக்க சிந்தனைகளை வளர்க்க உதவும் சேர்ப்பு (SET) விளையாட்டைக் கற்றுக்கொள்ளுதல்.
• கணிதக் கருத்துகளைக் குறித்துக்காட்டவும் மற்றும் உருவகப்படுத்தவும் நிலவரைபட வண்ணமிடுதலின் பங்கை ஆராய்தல்.
• பிபனோசி எண் அமைப்பை உடல் மற்றும் உயிரியல் அமைப்புகளில் கண்டுணர்ந்து கற்றுக்கொள்ளுதல்.
• கொடுக்கப்பட்ட எண்களின் மீப்பெரு பொதுக்காரணியைக் (மீ. பொ. கா.) கண்டுபிடிக்கும் சிறந்த முறையினை ஆராய்ந்து அறிதல்.
• கொடுக்கப்படும் தகவல்களை மறைகுறியாக்கம் (Encryption) மற்றும் மறைகுறிவிலக்கம் (Decryption) செய்யும் முறையினைப் புரிந்துகொள்ளுதல்.
• பொருள்களை விலைக்கு வாங்குவதற்கு முன் பல்வகை வாய்ப்புகளை கருத்தில் கொள்ளவும், ஒரு பொருளுக்கான (Unit) விலையைக் கணக்கிட்டு, வரையறுக்கப்பட்ட தொகைக்குள் பொருள்களை வாங்கவும் கற்றுக்கொள்ளுதல்.
• கொடுக்கப்பட்ட இடத்தில் பொருள்களை எவ்வாறு திறம்பட நிரப்புவது என்பதற்கான உகந்த தீர்வை அறிந்து கொள்ளுதல்.
மீள்பார்வை
கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் பட்டியலிடுதல், எண்ணுதல், பிபனோசி எண் தொடர்களின் அமைப்பு மற்றும் ஒரு பொருளுக்கான (Unit) விலையைக் கணக்கிடுதல் போன்ற பாடக் கருத்துகளை நினைவுகூர்வோம்.
1. கொடுக்கப்பட்ட முக்கோணத்திலிருந்து எத்தனை முக்கோணங்களை உருவாக்க முடியும் எனக் காண்க?
விடை: ………………..
2. பின்வரும் படத்திலுள்ள எண்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி 3 × 3 என்ற மாயச்சதுரத்தை அமைக்க.
3. கீழ்கண்ட மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுக..
விடை: ……………..
4. (i) A இலிருந்து E இக்கு B, C மற்றும் D வழியாகச் செல்வதற்கு ஆகும் மொத்த நேரத்தைக் காண்க.
(ii) A இலிருந்து E இக்கு செல்லக் குறைந்த அளவு நேரத்தை எடுத்துக் கொள்ளும் வழித்தடம் எது?
5. படத்தில் காட்டியுள்ளதுப்போல் பிபனோசி சதுரங்களின் மூலைவிட்டங்களை ஒன்றோடொன்று வளைவுக் கோட்டினால் இணைப்பதன் மூலம் தங்கச் சுருளை (Golden Spiral) வரைக.
6. நீங்கள் ஒரு மேல்சட்டை வாங்கத் திட்டமிடும்போது, ஓர் அங்காடியில் விற்பனை விலை ₹1000 இக்கு ₹200 தள்ளுபடி செய்யப்படுகிறது மற்றொரு அங்காடியில் அதே விற்பனை விலைக்கு 15% தள்ளுபடி செய்யப்படுகிறது எனில், நீங்கள் எங்கே மேல் சட்டையை வாங்குவீர்கள்?
7. ஒரு பூங்காவானது, ஒருவர் 5 சவாரிகளை விளையாடுவதற்கு ₹130 எனச் சிறப்பு சலுகையினையும், 1 சவாரி விளையாடுவதற்கு ₹30 எனவும் நுழைவு சீட்டின் விலையை நிர்ணயித்துள்ளது எனில், நீங்கள் சிறப்புச் சலுகையினை ஏற்றுக் கொண்டு சவாரிகளை விளையாட விரும்பும் போது எவ்வளவு தொகையினை சேமிப்பீர்கள்?
அறிமுகம்
கணிதத்தில் தேர்ச்சி பெறுவது என்பது எண் அறிவு, விவாதத்திறன், அறிவார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதாகும். நாம் இந்த வகுப்பில் பல்வேறு முறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் வழிகள், குறைந்தபட்ச வண்ணங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட நில வரைபடத்தை வண்ணமிடல் போன்ற செயல்களுக்கு நடைமுறை தீர்வுகளை காண்போம். மேலும் நாம் பிபனோசி எண் தொடர் எவ்வாறு உயிரியல் மற்றும் உடலியல் அமைப்புகளில் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பதையும், மேற்சிந்தனை யுக்திகளை வளர்த்துக் கொள்ள உதவும் சைபர் இரகசிய குறியீடுகள் பற்றியும் நாம் அறிந்து கொள்வோம். இது, போட்டித் தேர்வுகளை எளிதாக நாம் எதிர்கொள்ளப் பயன்படும். மேலும், அங்காடிகளில் பொருள்களை வாங்கும் போதும், பொதித்தல் அணுகு முறைகளின் படி குறிப்பிட்ட எடையுள்ள கொள்கலனில் பொருள்களை நிரப்பும் போதும் நாம் ஒரு அறிவார்ந்த நுகர்வோராக இருப்பது எப்படி என்றும் விவாதிப்போம். இதற்கிடையில் உங்களுடைய மனகிளர்ச்சியை அதிகரிக்கும் செயலாக தருக்க சிந்தனைகளை வளர்க்க உதவும் சேர்ப்பு விளையாட்டை விளையாடுவோம். மேற்கண்ட அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எங்கும் கணிதம் − அன்றாட வாழ்வில் தகவல் செயலாக்கம்
உயிரியலில் பிபனோசி எண்களுக்கான எடுத்துக்காட்டு
கட்டடத் தொழிலாளி இரு தூண்களுக்கிடையில் உகந்த முறையில் செங்கற்களை நிரப்பிச் சுவரைக் கட்டுதல்