தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சேர்ப்பு விளையாட்டு (SET Game) | 8th Maths : Chapter 7 : Information Processing
சேர்ப்பு விளையாட்டு (SET Game)
எந்த ஒரு விளையாட்டின் கூறுகளும் கணிதத்தின் தனித்துவமான எண்ணங்களை வெளிக் கொண்டு வருவதற்கும், விவாதிக்கும் சிந்தனையை தூண்டுவதற்கும், ஆர்வம் மற்றும் சவாலானச் சூழல்களை எதிர்கொள்ளுவதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.
இனி சேர்ப்பு (SET) விளையாட்டுப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சேர்ப்பு (SET) விளையாட்டானது பொருட்களின் பண்புகள் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். சேர்ப்பு (SET) விளையாட்டு அறிவுச்சார்ந்த, விவாதம் மற்றும் வெளிச்சார்ந்த பகுத்தறியும் திறன்களையும், காட்சி மூலம் உள்வாங்கும் திறனையும் வளர்க்க உதவுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சேர்ப்பு (SET) விளையாட்டு என்பது ஒரு புதிர் விளையாட்டாகும். அதில் நான்கு வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட அட்டைகளைப் பயன்படுத்துகிறோம். அவைகள் வடிவங்கள், வண்ணங்கள், நிழல்கள் மற்றும் வடிவங்களின் எண்ணிக்கைக் கொண்டவையாக உள்ளன.
ஒரு முழு சேர்ப்பு அட்டைத் தொகுப்பில் வட்டம், நட்சத்திரம், சதுரம் என 3 வடிவங்களில், சிவப்பு, பச்சை, நீலம் என 3 வண்ணங்களில் அட்டைகள் உள்ளது. மேலும் இந்த 9 அட்டைகள் (3 வடிவங்கள் × 3 வண்ணங்கள் ) திண்மம் (Solid), எல்லைக்கோடு (Outline), சுருள் வடிவம் (Spiral) என 3 நிழல் உருவங்களைக் கொண்ட ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கைகளில் மொத்தமாக 81 அட்டைகள் (3 வடிவங்கள் × 3 வண்ணங்கள் × 3 நிழல் உருவங்கள் × 3 எண்ணிக்கைகள்) படம்7.12 இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு முழு சேர்ப்பு என்பது 3 அட்டைகளைக் கொண்ட தொகுப்பாகும். இத்தொகுப்பானது, பின்வரும் நான்கு நிபந்தனைகளையும் நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.
(i) 3 அட்டைகளும் ஒரே விதமான வடிவத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும் அல்லது அனைத்தும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டும்.
(ii) 3 அட்டைகளும் ஒரே விதமான வண்ணத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும் அல்லது அனைத்தும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டும்.
(iii) 3 அட்டைகளும் ஒரே விதமான நிழல் உருவத்தைக் கொண்டவையாக இருக்கவேண்டும் அல்லது அனைத்தும் வெவ்வேறு நிழல் உருவங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டும்.
(iv) 3 அட்டைகளும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும் அல்லது மூன்று எண்களும் வெவ்வேறு எண்களாக இருக்க வேண்டும்.
சூழ்நிலை:
ஆசிரியர், படம் 7.13 − இல் கொடுக்கப்பட்டுள்ளதுப் போன்று 12 அட்டைகளை மேசை மீது பரப்பி ஒரு முழுமையான சேர்ப்பினை (SET) மற்றும்
என்ற இந்த இரு அட்டைகளை எடுத்துக்கொண்டு இவற்றுடன் எந்த அட்டையினை சேர்க்கும் போது ஒரு முழுமையான சேர்ப்பாகிறது (SET) என்பதை விளக்குகிறார். இப்போது இந்த சேர்ப்பினை முழுமையாக அமைக்க மூன்றாவதாக எந்த அட்டையை இணைக்க வேண்டுமென்பதை பின்வரும் படிப்படியான வழிமுறைகள் மூலம் நாம் காணலாம்.
மூன்று அட்டைகள் அவற்றிற்கான நான்கு பண்புகளையும் பெற்றிருந்தால் மட்டுமே சேர்ப்பு (SET) என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
படி 1: வடிவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, முதல் அட்டையும் இரண்டாவது அட்டையும் நட்சத்திரமாக
உள்ளதால் நிபந்தனையின் படி மூன்றாவது அட்டையும் நட்சத்திரமாகவே
இருக்க வேண்டும்.
படி 2: வண்ணத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, முதல் அட்டை பச்சை வண்ண நட்சத்திரமாகவும் இரண்டாவது அட்டை சிவப்பு வண்ண நட்சத்திரங்களாகவும்
உள்ளதால் நிபந்தனையின் படி அடுத்தது மூன்றாவது வண்ணமான நீல வண்ண நட்சத்திரங்களாகவே
இருக்க வேண்டும்.
படி 3: நிழல் உருவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, முதல் அட்டையும் இரண்டாவது அட்டையும்
திண்மமாக (solid) உள்ளதால் நிபந்தனையின் படி மூன்றாவது அட்டையும்
திண்மமாகவே (solid) இருக்க வேண்டும்.
படி 4: எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது, முதல் அட்டையில் ஒரு பச்சை வண்ண நட்சத்திரமும் , இரண்டாவது அட்டையில் இரண்டு சிவப்பு வண்ண நட்சத்திரங்களும்
உள்ளதால் நிபந்தனையின் படி அடுத்து மூன்றாவது அட்டையும் மூன்று நீல வண்ண நட்சத்திரங்களாக
இருக்க வேண்டும்.
முடிவாக,
வடிவம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை✓
வண்ணம் : அனைத்தும் வெவ்வேறானவை✓
நிழல் உருவம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை✓
எண்ணிக்கை : அனைத்தும் வெவ்வேறானவை✓
ஆக, இம் மூன்று அட்டைகளும் இணைந்து அனைத்து நிபந்தனைகளின் படி ஒரு முழுமையான சேர்ப்பை (SET) உருவாக்குகிறது.
அடுத்ததாக, ஆசிரியர் படம் 7.12 இல் கொடுக்கப்பட்டுள்ள அட்டைகளிலிருந்து மேலும் இரு சேர்ப்புகளை (SETS) அமைத்து மாணவர்களைச் சரிபார்க்கச் சொல்கிறார்.
1.
வடிவம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை ✓
வண்ணம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை ✓
நிழல் உருவம் : அனைத்தும் வெவ்வேறானவை ✓
எண்ணிக்கை : அனைத்தும் ஒரே மாதிரியானவை ✓
எனவே, இது ஒரு முழுமையான சேர்ப்பு (SET) ஆகும். ✓
2.
வடிவம் : அனைத்தும் வெவ்வேறானவை ✓
வண்ணம் : அனைத்தும் வெவ்வேறானவை ✓
நிழல் உருவம் : அனைத்தும் வெவ்வேறானவை✓
எண்ணிக்கை : அனைத்தும் வெவ்வேறானவை ✓
எனவே இதுவும், ஒரு முழுமையான சேர்ப்பு (SET) ஆகும்.
மறுபடியும் ஆசிரியர், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள 3 அட்டைகளை வரிசைப்படுத்தி, அவை சரியானவை தானா என சரிபார்க்கக் கூறுகிறார்.
சிந்திக்க
கொடுக்கப்பட்ட படம் 7.13−இல் உள்ள 12 அட்டைத் தொகுப்பிலிருந்து முழுமையாக 7 சேர்ப்புகளை (SETS) உருவாக்க இயலும். ஆராய்க. (அட்டைகளை மறுபடியும் பயன்படுத்தலாம்)
3.
வடிவம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்லது அனைத்தும் வெவ்வேறானவை ×
வண்ணம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்லது அனைத்தும் வெவ்வேறானவை ×
நிழல் உருவம் : அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்லது அனைத்தும் வெவ்வேறானவை ×
எண்ணிக்கை : அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்லது அனைத்தும் வெவ்வேறானவை ×
மேற்காணும் அட்டைத் தொகுப்பு நிபந்தனைகளின்படி அமையாததால் இது ஒரு முழுமையான சேர்ப்பு(SET) அல்ல.
இதிலிருந்து, ஒரு முழுமையான சேர்ப்பு (SET) என்பது, அனைத்து பண்புகளும் ஒரே மாதிரியானவையாகவோ அல்லது அனைத்து பண்புகளும் வெவ்வேறானவையாகவோ அமைந்துள்ள 3 அட்டைகளைப் பெற்றிருக்கும் என்பதை அறிந்து கொள்கிறோம்.
செயல்பாடு
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான அட்டையினைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுமையானச் சேர்ப்பினை (SET) உருவாக்கவும்.
இவற்றை முயல்க
1. இந்த அட்டை தொகுப்பிலிருந்து ஏதேனும் 5 சேர்ப்புகளை (SETS) அமைக்க. (அட்டைகளை மறுபடியும் பயன்படுத்தலாம்)
2. இது ஒரு சேர்ப்பில்(SET) உள்ள மாயச் சதுரத்திற்கான எடுத்துக்காட்டாகும். இதே போன்று, மேலும் இரண்டு மாயச் சதுரங்களை உருவாக்க முயல்க