Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: பா - வகை, அலகிடுதல்

இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: பா - வகை, அலகிடுதல் | 10th Tamil : Chapter 8 : Peruvali

   Posted On :  22.07.2022 03:02 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி

இலக்கணம்: பா - வகை, அலகிடுதல்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : இலக்கணம்: பா - வகை, அலகிடுதல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம்

கற்கண்டு

பா - வகை, அலகிடுதல்


எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன. யாப்பின் உறுப்புகள் குறித்து கடந்த ஆண்டில் கற்றதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம். பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஓசையானது செப்பல், அகவல், துள்னல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.

செப்பல் ஓசை

செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

அகவல் ஓசை

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

துள்ளல் ஓசை

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.

தூங்கல் ஓசை

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.

முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.

பா வகைகள்

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா , இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.

இனி வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் பொது இலக்கணத்தை அட்டவணையில் காணலாம்.


மேற்சொன்னவற்றுள் குறள் வெண்பாவின் இலக்கணத்தையும் அலகிடும் முறையினையும் தெரிந்து கொள்வோம்.

குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.

அலகிடுதல்

செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.

அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து. அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்,

யாப்போசை தரும் பாவோசை

1. செப்பலோசை - இருவர் உரையாடுவது போன்ற ஓசை

2. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

3. துள்ளலோசை - கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.

4. தூங்கலோசை - சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது.

யாப்பதிகாரம், புலவர் குழந்தை

அலகிடுதல் எ.கா.

உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.


நினைவில் கொள்க.


 

கற்பவை கற்றபின்....

1. பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்திப் பட்டியல் இடுக.

2. வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.

 

 

Tags : Chapter 8 | 10th Tamil இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 8 : Peruvali : Grammar: Pa.Vakai, alagiduthal Chapter 8 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : இலக்கணம்: பா - வகை, அலகிடுதல் - இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி