Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 8 : Peruvali

   Posted On :  22.07.2022 04:18 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8 : பெருவழி : திறன் அறிவோம்


பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. மேன்மை தரும் அறம் என்பது ..................

) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

) மறு பிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

) புகழ் கருதி அறம் செய்வது

) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது?

[விடை: கைம்மாறு கருதாமல் அறம் செய்வது]

 

2. வீட்டைத் துடைத்துச் சாரல் அடித்தல் - இவ்வடி குறிப்பிடுவது ..................

) காலம் மாறுவதை

) வீட்டைத் துடைப்பதை

) இடையறது அறப்பணி செய்தலை

) வண்ணம் பூசுவதை

[விடை: இடையாறது அறப்பணி செய்தலை]

 

3. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

) உதியன்; சேரலாதன்

) அதியன்; பெருஞ்சாத்தான்

) பேகன்; கிள்ளிவளவன்

) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

[விடை : அதியன்; பெருஞ்சாத்தான்]

 

4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்..................

() இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது

() இகழ்ந்தால் இறந்தவிடாது என்மனம்

() என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

() என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

[விடை : இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது]

 

5. சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் அமைந்த பாவினம் ..................

() அகவற்பா

() வெண்பா

() வஞ்சிப்பா

() கலிப்பா

[விடை : அகவற்பா]

 

குறுவினா


1. ‘கொள்வோர் கொள்க, குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

) அடியெதுகையை எடுத்தெழுதுக.

) இலக்கணக் குறிப்பு எழுதுக. - கொள்க, குரைக்க

கொள்வோர் உள்வாய்

கொள்க, குரைக்க - வியங்கோள் வினைமுற்றுகள்

 

2. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டு தருக.

ஈற்றடி முச்சீராய் ஏனைய அடி நாற்சீராய் வரும்

இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.

இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.

செப்பலோசை பெற்று வரும்.

இரண்டு அடிகளைப் பெற்று வரும்.

ஈற்றுச் சீர் நாள், மலர், காசு பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.

(.கா.) "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது''

 

3. குறிப்பு வரைக அவையம்.

• அறம் கூறும் அவையம் பற்றி அறம் அறங்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு.

• அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிகின்றன.

• மதுரையில் இருந்த அவையம் துலாக் கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது மதுரைக் காஞ்சி.

 

4. காலக் கழுதை கட்டெறும்பானாலும் கவிஞர் செய்வது யாது?

காலக்கழுதை கட்டெறும்பானதும் கையில் வாளித் தண்ணீர் எடுத்த சன்னலைக் கழுவினார்.

சாயக்குவளையில் வர்ணத்தை நிரப்பினார்

கந்தையான துணியால் சன்னலைத் துடைத்தார்.

கட்டைத் தூரிகை கொண்டு வர்ணத்தால் பூசினார்.

 

5. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பா தூங்கல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும் பெற்று வரும்.

 

சிறுவினா


1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை :

அன்றைய அரசியல். வாணிகம் ;

அரசியல் :

அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்க கூடாது என்பது சங்க கால மக்களின் கருத்தாக இருந்தது.

வணிகம் :

இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயன் மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் இருக்கக் கூடாது.

இன்றைய அரசியல் வணிகம்:

அரசியல் :

இன்றைய அரசியலில் நாம் நல்லாட்சியை எதிர் நோக்கி வாழ வேண்டிய அவல நிலையில் வாழ்கிறோம்.

வணிகம் :

இக்காலத்தில் பொருட்களில் கலப்படம், விலை அதிகமாக விற்றல் போன்ற நேர்மையற்ற செயல்கள் நடைபெறுகின்றன.

போரில் தமிழனின் நிலை :

அன்றைய போர்முறை:

• தமிழர் அன்றைய போரில் அறநெறிகளைப் பின்பற்றினர். பசு (ஆநிரை), பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்குவராமல் போர் புரிய வேண்டும். என்று ஒரு பாடல் கூறுகிறது.

• தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய போர் முறை

• இன்று போர் நடைபெறாவிட்டால் மக்களுக்கு ஏற்படும் சாதி, மத, இன சண்டைகள் அறநெறி காட்டும் வழியில் அமைந்திருக்கிறதா என்பது கேள்விக்குறி!

 

2. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் எழுதுக.

அளவடிகளைப் பெற்று வரும்

இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்) பயின்று வரும்.

ஆசிரியத் தளைகள் பயின்று வரும்.

மூன்றடிச் சிற்றல்லையுடன் பாடும் புலவரின் மனக் கருத்திற்கேற்ப பல அடிகளைப் பெற்று வரும்.

இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும்.

அகவல் ஓசை பெற்று வரும்.

 

3. ‘சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு - சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்தில் ஏற்படும் மாற்றமே சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும்)

உரைகுறிப்பு

சுற்றுச் சூழல் என்றால் என்ன? சுற்றுச் சூழலின் அவசியம் - மாசுபடுதற்கான காரணம் - அரசின் திட்டங்கள் - விழிப்புணர்வு வேண்டும் - விழப்புணர்விற்கு எனது பங்கு - நாளை உலகிற்கு தேவையான இன்றைய அறம்.

தவிர்க்க வேண்டுவன - கடைப்பிடிக்க வேண்டியவை - நம்பிக்கை - உறுதி மொழி

 

4. வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை - இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

ஒவ்வொரு வீட்டிலும் அவ்வப்போது நிகழும் நிகழ்வை கவிஞர் அழகாக எடுத்துரைக்கிறார்.

வீட்டினைப் புதுப்பித்தல் பணி தொடர்ச்சியாக அவ்வப்போது நடைபெற்றால்தான் வீடு தூய்மையாக விளங்கும்.

வாளியிலிருந்து தண்ணீரைத் தெளித்து சன்னலைத் தூய்மைப்படுத்த வேண்டும்

சாயக்குவளையில் வர்ணக் கலவையை நிரப்ப வேண்டும்.

கந்தையான துணியால் துடைத்து விட்டு கட்டைத் தூரிகையால் வர்ணம் அடித்து சன்னலை புதிதாக்க வேண்டும்.

 

நெடுவினா


1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததை யும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்கு மடல்

மதுரை,

10.03.2021

அன்புள்ள சித்தப்பாவிற்கு ரவி எழுதுவது,

நலம். நலம் அறிய ஆவல்.

நான் இன்று மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏன் தெரியுமா? நேற்று வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் பயம்! ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே. பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டுவிட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

‘பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று, மறுநாளே காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையைப் பாராட்டி, சன்மானத் தொகையைப் பரிசாகவும் வழங்கினார். அது மட்டுமில்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு ரவியே’ சான்று என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடனும், சித்தி, தங்கையுடனும் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,

ரவி.க

உறைமேல் முகவரி:

ந. ராம் குமார்

12, நேரு நகர்,

திருச்சி – 1.

 

2. காலக் கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்

இவை சரியென்றால் இயம்புதென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்ப தென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை அறிக!

- கவிஞர் கண்ணதாசன்

முன்னுரை

கவிஞர் கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர். ஏராளமான திரைப்படப் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர். சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர். அவரது பாடல்கள் சந்த நயமும், பொருள் நயமும் கொண்டு எளிய மக்களும் சுவைத்து இன்புறும் வகையில் இருக்கும்.

பாடலின் திரண்ட கருத்து

கவிஞனாகிய நான் ஒரு காலத்தை கனிக்கும் கவிஞனாவேன். உள்ளத்தில் தோன்றும் உண்மைப் பொருளை எல்லோருக்கும் தெரியும்படி வெளிப்படுத்துவேன். இந்தப் பூமியில் நான் எல்லோராலும் போற்றப்படும் தெய்வமாவேன். பொன்னை விட விலை மிகுந்த செல்வம் என்னுடையது. இவையெல்லாம் சரி என்று சொன்னால் அதை கூறுவது என் பணி. இவை தவறு என்று சொன்னால் அதைக் கூறுவது என் பணி. இவை தவறு என்று சொன்னால் எதிர்ப்பது என் பணி. ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய மூன்று பணிகளையும் இறைவனும் நானும் மட்டும் அறிந்தவையாகும். அதனை நீங்களும் அறிவீர்களாக.

தொடை நயம்:

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பதைப் போல் இப்பாடலில் எதுகை, மோனை நயங்கள் நிறம்பட அமைந்துள்ளன.

மோனைத்தொடை

அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை.

சீர் மோனை

விஞன் - காலக் - ணிதம்

பொன்னிலும் - பொருளென்

புவி - புகழுடைய

வை - யம்புவதென்

வனும் - அறிந்தவை

அடி மோனை

விஞன் புவியில் வை க்கல்

ருப்படு பொன்னிலும் வை வனும்

எதுகைத் தொடை

அடித்தோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும்.

சீர் எதுகை

ருப்படு, ருப்பட பொருளை, பொருளென் அறிந்தவை, றி

அடி எதுகை

வைவை

சொல் நயம்

“அர்ச்சுனனுக்கு வில்லு பாடலுக்கு சொல்லு'' கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் சொல் நயம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

.கா : "யானோர் காலக்கணிதம்

நானேர் புகழுடைத் தெய்வம்"

என்ற அடிகளில் சொல் நயம் மிளிர்வதைக் காணலாம்.

சுவை நயம்

"புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்என்னும் அடிகளில் பெருமிதச்சுவை மிகுந்துள்ளதைக் காணலாம்.

அணிநயம்

கவிஞர் கண்ணதாசன் தன்னையே "யானோர் காலக் கணிதம்" என்றும் "நானோர் புகழுடைத் தெய்வம்" என்றும் உருவகப் படுத்திக் கூறியுள்ளமையைக் காணலாம்.

முடிவுரை

காலக் கணிதம் எனும் கண்ணதாசன் பாடலில் பொருள் நயம், தொடை நயம், சுவைநயம், சொல் நயம் உருவகம் போன்ற பல்வேறு நயங்கள் அழகுபட மிக எளிமையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலை நாமும் படித்து பிறகு மீண்டும் படிக்கத் தூண்டும் அளவுக்கு இனிமை மிகு பாடலாக இருக்கிறது.

 

3. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி .

நாடகம் எழுதுதல்

காட்சி ஒன்று

இடம் : வகுப்பரை

பங்கு பெறுவோர் : தமிழாசிரியர், மாணவர்கள்

நேரம் : முற்பகல்

தமிழாசிரியர் வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவர்கள் அனைவரும் எழுந்து வணக்கம் ஐயா சொல்கிறார்கள்.

தமிழாசிரியர் : மாணவர்களை! வணக்கம் ! அமருங்கள். நான் நேற்று வகுப்பறையில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும் அல்லவா?

மாணவர்கள் : ஆமாம் ஐயா! எந்தப் பொருளையும் இழிவாகக் கருதக் கூடாது என்பது தானே ஐயா!

ஆசிரியர் : நன்றி நினைவில் வைத்துள்ளீர்கள். ஆண்டவர் எந்தப் பொருளையும் இழிவுடன் படைத்தது இல்லை. கொக்கென்றாலும், கோழியென்றாலும் உப்பென்றாலும் வேறு எது என்றாலும் அதையும் ஏழு காரணத்தோடு படைத்துள்ளான்.

மாணவர்கள் : புரியவில்லையே ஐயா!

ஆசிரியர் : ஒற்றைக் காலில் நிற்கும் கொக்கு நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது? வாய்ப்பு வரும் வரை காத்திரு. வந்தவுடன் பயன்படுத்த - வேண்டும், என்பதைத்தானே?

மாணவர்கள் : ஆமாம் ஐயா! அருமை! அருமை

ஆசிரியர் : குப்பையைக் கிளறுகிறது கோழி! அது நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது.

மாணவர்கள் : அதில் என்ன இருக்கிறது ஐயா?

ஆசிரியர் : குப்பையைக் கிளறு கிளறு என்று கிளறினாலும் தனக்கு எது உணவோ அதை மட்டும் தான் உண்ணும் மற்றவற்றைக் கண்டு கொள்ளாது.

மாணவர்கள் : இது எல்லாம் எப்படி ஐயா?

ஆசிரியர் : குடலைப் புறட்டும் உப்பு நமக்குக் கற்றுக் கொடுப்பது என்ன?

மாணவர்கள் : ஆமாம். உப்பு தான் !

உப்பில்லா உணவை யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனாலும் உணவோடு உப்பினைக் கலக்கும் போது அது உணவோடு கலந்து மறைந்து போனாலும், உணவுக்குச் சுவையைக் கொடுக்கும். அது போல மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தி தனது மறைவுக்குப் பின்னர் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படித் திகழ வேண்டும்.

மாணவர்கள் : சரி ,ஐயா!

ஆசிரியர் : இப்போது உண்மைக்கு வருகிறேன். கொக்கு, கோழி, குடலைப்புரட்டும் உப்பு என்ற இந்த மூன்றையும் போலவும் மாணவர்கள் விளங்க வேண்டும். வாய்ப்பு வருகின்றவரை கொக்கு போலக் காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் உடனே வேகமாகச் செயல்பட்டு வெற்றி அடைய வேண்டும். குப்பையை கிளறிக் கொண்டு இருந்தாலும் உணவை மட்டும் கண்டு உண்டு மகிழ்கிறதே கோழி. அது போல நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதில் மனதைச் செலுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். நீரில் கரைந்த உப்பு கண்ணுக்குத் தெரியாது ஆனால், சுவைத்துப் பார்த்தவர்கள் உப்பை உணர்ந்தும் கொள்வார்கள். அது போல மாணவர்கள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் திறமையால் தங்கள் உழைப்பைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கொக்கும், கோழியும், உப்பும் என்றும் நமக்கு ஆசிரியர்கள். அது போல நாம் வாழ வேண்டும் வாழ்வீர்கள் அல்லவா?

மாணவர்கள் : வாழ்வோம், ஐயா!

எளிமையான பொருளுக்குள்ளே இத்தனை உண்மைகளா ஐயா! மகிழ்ச்சி நாங்களும் நீங்கள் கூறியது போல் வாழ்வோம். பள்ளி மணி ஒலிக்கிறது, உணவு இடைவேளை வகுப்பு கலைகிறது.


Tags : Chapter 8 | 10th Tamil இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 8 : Peruvali : Questions and Answers Chapter 8 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி