இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 8 : Peruvali
மொழியை ஆள்வோம்!
படித்துச் சுவைக்க.
மரம் தேடிய களைப்பு
மின்கம்பியில்
இளைப்பாறும் குருவி.
- நாணற்காடன்
விற்பனையில்
காற்றுப் பொட்டலம்
சிக்கனமாய் மூச்சு விடவும்
......
- புதுவைத் தமிழ் நெஞ்சன்
மொழி பெயர்க்க.
Once
upon a time there were two beggers in rome. the first beggar used to cry in the
streets of the city, “He is Helped whom God helps”. The second beggar used to
cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The
Emperor of Rome heard is so often that he decided to help the beggar who
popularized him in the sreets of Rome. He ordered a loaf of bread to be basked
and filled with piece of gold. When the beggar felt the heavy weight of the
bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it
home. When he cut the loaf of bread he found sparkling piece of gold. Thanking
God, He stopped beggig from that day. But the other continued to beg through
the city. Puzzled by the beggar's behavior the Emperor summoned him to his
presence and asked him.” what have you done with the loaf of bread that I had
sent you lately?” The man replied,” I sold it to my friend, because it was
heavy did not seem well baked” Then the emperor said.” Truly he whom God helps
is helped indeed,” and turned the beggar out of his palace.
முன்னோரு காலத்தில் இரண்டு பிச்கைக்காரர்கள் ரோம்
நகரில் வாழ்ந்து வந்தனர். அதில் முதல் பிச்சைக்காரர்
உதவி பெறுபவன். கடவுளால் உதவி பெறுகிறான் என்று கூறி பிச்சை எடுத்து
வந்தான். ஆனால், மற்றொரு பிச்சைக்காரன்
"உதவி பெறுபவன் மன்னரால் உதவி பெறுகிறான்" என்று கூறி பிச்சை எடுத்து வந்தான். இதைக் கேள்விப்பட்ட
மன்னர் அவர் புகழைப் பரப்பிய பிச்சைக்காரனுக்கு உதவி செய்ய முடிவெடுத்து ஒரு ரொட்டித்
துண்டில் மின்னும் தங்கக் கட்டிகளை வைத்து தயார் செய்ய உத்தரவிட்டார். பின்னர் அதனை அவரைப் புகழ்ந்த பிச்சைக்காரனுக்கும் பரிசளித்தார். அதனைப் பெற்ற பிச்சைக்காரன் ரொட்டித் துண்டு மிகவும் கனமாக இருந்ததால் தன்னோடு
பிச்சையெடுத்த பிச்சைக்கார நண்பனுக்கு விற்று விட்டார். அதை வீட்டில்
துண்டாக்கும் போது தங்கக் கட்டிகள் ஒளிர்வதைக் கண்டு மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி
அன்றிலிருந்து பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டான். முதலாம் பிச்சைக்காரன்
தொடர்ந்து பிச்சை எடுக்க அவனை அரசவைக்கு வரவழைத்து மன்னர் விசாரித்தார்.
"நான் வழங்கிய ரொட்டித் துண்டை என்ன செய்தாய்?'' என்று மன்னர் கேட்டார். அதற்கு அவன் தாங்கள் வழங்கிய
ரொட்டித் துண்டு மிகவும் கனமாகவும் நன்கு வேகாமலும் இருந்ததால் அதனை என்னுடன் பிச்சை
எடுத்த நண்பனுக்கு விற்றுவிட்டேன் என்று கூறினான். அதற்கு மன்னர்
'உண்மையாகவே உதவி பெறுபவனுக்கு கடவுள் உதவி செய்கிறார்"
எனக் கூறி முதலாம் பிச்சைக்காரனை தனது அரசவையில் இருந்து வெளியேற்றினார்.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து
எழுதுக.
மரபுத்தொடர்
மனக்கோட்டை கண்ணும் கருத்தும்
அள்ளி இறைத்தல் ஆறப்போடுதல்
மணக் கோட்டை - மதியழகன் தான் பெரிய அமைச்சராக வேண்டும் என்ற மனக்
கோட்டை கட்டினான்.
கண்ணும் கருத்துமாக - தாய் தன் குழந்தையே கண்ணும் கருத்துமாக
பார்த்துக் கொண்டார்.
அள்ளி இறைத்தல் - தனக்கு அதிக பணம் இருக்கு
என்று அள்ளி இறைத்தல் கூடாது.
ஆறப் போடுதல் - ஒரு சில பிரச்சனைகளை
ஆறப் போட்டு செய்தல் வேண்டும்.
பின்வரும் உரையாடலில் பேச்சு வழக்கினை எழுத்து வழக்கமாக
மாற்றுக.
"தம்பி? எங்க நிக்கிறே?"
"நீங்க சொன்ன எடத்துலதாண்ணே!” எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால்
இருக்குது அங்ஙனக்குள்ளேயே பேப்பர் படிச்சிக்கிட்டு இரு "நா வெரசா வந்துருவேன்"
"அண்ணே! சம்முவத்தையம் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே அவனெப்
பாத்தே ரொம்ப நாளாச்சு"
"அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக்
கூட்டிக்கிட்டு வர்றேன்.''
"ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு
மூணு வயசு இருக்கும்.''
"இப்ப ஒசரமா வளர்ந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது!
ஊருக்கு எங்கூட வருவாம்பாரேன்! சரி, போனை
வையி. நாங் கெளம்பிட்டேன்". சரிங்கண்ணே.
விடை
"தம்பி! எங்கே நிற்கிறாய்
"நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணா!
எதிர் பக்கத்தில் ஒரு தேனீர்க் கடை இருக்கிறது.
"அந்த இடத்திற்குள்ளே தேனீர் அருந்தி விட்டு செய்தித்
தாளைப் படித்துக் கொண்டு இரு நாட்களில் விரைவாக வந்து விடுவேன்.''
"அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக்
கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து வெகு நாட்களாகியும்
விட்டன.''
"அவன் பாட்டியோடு வெளியூர் போய் இருக்கிறான்.
உங்க ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்.''
"மிகச்சிறிய வயதில் பார்த்தது அண்ணா அப்பொழுது அவனுக்கு
மூன்று வயது இருக்கும்!"
"இப்போது உயரமாக வளர்ந்து விட்டான் உனக்கு அடையாளமே
தெரியாது! ஊருக்கு எங்களுடன் வருவான் பார். சரி தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன்
"சரி அண்ணா,”
கடிதம் எழுதுக.
உங்கள் தெருவில் மின் விளக்குகள்
பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையுறுகளை எழுதி ஆவண
செய்யும் படி மின் வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர் :
மு. அன்பரசன்,
34/27 இ பாரதியார் தெரு,
கமுதி அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம்.
பெறுநர்
மின் வாரிய அலுவலர் அவர்கள்,
தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம்,
கமுதி அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம்.
பொருள் :
எங்கள் தெருவில் பழுதடைந்த மின் விளக்குகளை சீர் செய்து தருமாறு வேண்டுதல்
தொடர்பாக
மதிப்பிற்குரிய ஐயா :
நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் உள்ள இரண்டாவது மூன்றாவது வார்டுக்குச் சொந்தமான தெருவில்
மின் விளக்குகள் பழுதாகி உள்ளன. இதனால் இரவு நேரங்களில்
மக்கள் சாலைகளில் அச்சமுடன் செல்ல வேண்டியுள்ளது. வழிப்பறி திருட்டு
பயம் அதிகமாக இருப்பதால் விரைவாக மின் விளக்குகளை மாற்றித்தருமாறு வேண்டுகிறோம்.
நன்றி
பாரதியார் தெரு,
25.06.20xx
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
மு. அன்பரசன்.
உறைமேல் முகவரி :
பெறுநர்,
மின் வாரிய அலுவலர் அவர்கள்,
தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம்,
கமுதி அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம்.
நயம் பாராட்டுக.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்தே
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சு வைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே
- வள்ளலார்
ஆசிரியர் குறிப்பு
"இறையருள் பெற்ற குழந்தை" என்று பிறந்தவுடனே பாராட்டப்பட்ட இராமலிங்கர் என்ற வள்ளலார் தன் அன்பு அறப்பணிகள்
மூலம் சமுதாயத்திற்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.
மையக்கருத்து
இறைவனின் உண்மைத் தன்மையை இப்பாடல் அழகாக எடுத்துரைக்கிறது.
திரண்ட கருத்து
"வாழைக்கு குருத்து அழகு
கவிதைக்குக் கருத்து அழகு"
என்பது போல இப்பாடல் கருத்து நயத்துடன் விளங்குகின்றது.
வறண்ட கோடைக்காலத்தில் நான் ஒய்வெடுக்க கிடைத்த குளிர்ச்சி வழங்கும்
மரமே
மரம் வழங்கும் சுவை மிகுந்த கனியே. நீர் ஓடுகின்ற ஒடையில் ஊறுகின்ற சுவைதரும் தண்ணீரை அந்த நீரினிடையில்.
மலர்ந்து மணம் வீசும் மலரே, மென்மையான காற்றே அந்தத்
தென்றல் காற்றினால் ஏற்படும் இன்பமே என்னை மணந்த மணவாளா அம்பலத்தில் ஆடுகின்ற அரசே
என் பூமாலையை அணிந்து கொள்வாயாக.
தொடை நயம்
"தொடையற்ற பாட்டு நடையற்று போகும்"
என்பதனைக் கருத்தில் கொண்டு இப்பாடல் எதுகை, மோனைகளைத்
திறம்பட அமைத்துள்ளார்.
சீர் மோனை
கோடையிலே - கொள்ளும் வகை
மேடையிலே - மெல்லிய
ஆடுகின்ற - அரசே - அலங்கள்
அடிமோனை
கோடையிலே - குளிர் தருவே
ஓடையிலே - உகந்த
மேடையிலே - மென் காற்றில்
ஆடையிலே - ஆடுகின்ற
எதுகை நயம்
"எது-கை கொடுக்காவிட்டாலும்
எதுகை கை கொடுக்கும்" என்பதற்கேற்ப இப்பாடலில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.
அடி எதுகை
கோடையிலே - ஓடையிலே
மேடையிலே - ஆடையிலே
இயைபு நயம்
செய்யுளில் கடைசிச்சீர் ஒன்றி வரத் தொடுப்பது இயைபு நயமாகும்
தண்ணீரே
காற்றே
சொல் நயம்
செய்யுளில் சொல் நயம் சிறப்பாக அமைந்துள்ளது
குளிர் தருவே, தரு நிழலே
அணிநயம்
"பெண்ணுக்கு சிரிப்பழகு என்பது போல கவிதை மலருக்கு
அணியழகு". என்பதற்கேற்ப இப்பாடல் இயல்பாக அமைந்து இன்பம்
பயப்பதால் இயல்பு நவிற்சி அணியாயிற்று
முடிவுரை
வள்ளலாரின் பாடலைப் படித்துணர்ந்த நாம் இப்பாடல் தரும் இனிய கருத்துகள்
வாழ்வில் பின்பற்றி வாழ்வோமாக.
மொழியோடு விளையாடு
கண்டுபிடித்து எழுதுக.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,
ஐந்து, ஆறு, ஏழு,
எட்டு, பத்து ஆகிய எண்ணுப்
பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.
1. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்னுந் துணையும் புகழ் குறள் 156
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு குறள் 392
3. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு குறள் 383
4. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர் கொளி குறள் 330
5. பொறிவாயில் ஐந்து வித்தான் பொய்தீர்
ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் குறள் - 6
6. படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு குறள் 381
7. ஒருமைக் கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து குறள் - 398
8. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை குறள் - 9
9. பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக.
1. கானடை 2. வருந்தாமரை 3.
பிண்ணாக்கு 4. பலகையொலி
1. கானடை
கான் அடை - காட்டைச் சேர்
கான் நடை - காட்டுக்கு நடத்தல்
கால் நடை - காலால் நடத்தல்
இவ்வாறு மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறலாம்.
2. வருந்தாமரை
வரும் + தாமரை - வருகின்ற தாமரை (தாமரை மலர்)
வரும் + தா + மரை - தாவுகின்ற மான் வருகிறது.
வருந்தா + மரை - துன்புறாத மான்
3. பிண்ணாக்கு
பிள் + நாக்கு - பிளவுப்பட்ட நாக்கு
பிண்ணாக்கு - புண்ணாக்கு என்பது
கடலை, எள் அரைக்கும் போது கிடைப்பது
4. பலகையொலி
பல + கையொலி - பல கைகளால் சேர்ந்த ஒலி
பலகை + ஒலி - பலகையால் ஏற்படும் ஒலி
செயல்திட்டம்
ஔவையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் ஆத்திசூடி ஆகிய இரண்டின் முதல் பத்துத்
தொடர்களை ஒப்பிட்டு, நாள்தோறும்
ஒரு தொடர் என்னும் அடிப்படையில் கருத்துகளைக் காலை வழிபாட்டு நிகழ்வில் வழங்குக.
அகராதியில் காண்க.
ஆசுகவி - விரைவில்
கவி இயற்றுவோன், பிறப்புக் கவிஞன்
மதுரகவி - இலக்கண முறைப்படி கவிதை இயற்றுபவர் அமுதமுறப் பாடும்
கவி, இனிய கவி
சித்திரக்கவி - இறைக்கவி, 21 நயங்களோடு கவிதை
இயற்றுபவர்
வித்தாரக்கவி - இறை நயங்களில் கவிதை இயற்றுபவர், விரித்து கவிதை இயற்றுபவர்
கலைச்சொல் அறிவோம்
Belief
- நம்பிக்கை
Philosopher
- மெய்யியலாளர்
Renaissance - மறுமலர்ச்சி
Revivalism
– மீட்டுருவாக்கம்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
ஈயென இரத்தல் இழிவானது
இரக்கம் இல்லா மனிதன்
ஈனம் உள்ள மனிதனாவான்
போதும் என்ற மனமே
பொருள் பெற வழியாகும்
ஏழைக்கு இரக்கம் காட்டு
ஏங்கும் மக்களை வாழ்வை
ஏற்றமுடன் இருக்கும் உன்வாழ்வு
நிற்க அதற்குத் தக...
நாம்
எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி
நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன்பயில் பலருடனோ,
உடன் பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம். கேட்கிறோம். கைகலப்பில் ஈடுபடுகிறோம் இதுகாறும் கற்ற
அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற
வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும்...
நாம் செய்ய வேண்டுவன (அறங்கள்)
நல்ல
சொற்களை தேர்ந்தெடுத்துப் பேசுதல்
ஒருவரைப்
பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல்
பழி
வாங்கும் எண்ணத்தைக் கைவிடல்
எப்போதும் பிறருக்கு உதவத் தயாராக இருத்தல்
அறங்கள் தரும் நன்மைகள்
நட்புடன்
நலமாய் வாழலாம்
தேவையற்ற சண்டையைத் தவிர்த்து ஒற்றுமையுடன் வாழலாம்
அனைவரிடத்தும் நண்பர்களாகப் பழகி, மன அமைதியுடன் வாழ்ந்தால் நற்பெயரை எடுக்கலாம்
எல்லாரும் விரும்புவர்
எதையும் தாங்கும் மனவலிமை பெறலாம்
தனக்குரிய செயலை உடனே முடிக்கும் வலிமை வளரும்.
அறிவை விரிவு செய்
அறமும்
அரசியலும் – மு. வரதராசனார்
அபி
கவிதைகள் - அபி
எண்ணங்கள்
– எம்.எஸ். உதயமூர்த்தி
இணையத்தில் காண்க.
https://ta.wikipedia.org/wiki/சங்க_இலக்கியம்
http://tndipr.gov.in/memorials/tamil/
kaviarasar
kannadasanmanimandapam.html
http://www.ramanujam1000.com/
2016/09/blog-post_16.html