Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள்

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population

   Posted On :  24.03.2022 06:44 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள்

இனக்கூட்டத்தின் வளர்ச்சி ஒரு தனித்துவமான குறிப்பிட்ட வடிவங்களில் அமைகிறது.

வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள் 

இனக்கூட்டத்தின் வளர்ச்சி ஒரு தனித்துவமானகுறிப்பிட்டவடிவங்களில் அமைகிறது. வரைபடத்தில் இதனை வரையும் போது வடிவ வளர்ச்சி மற்றும் S வடிவ வளர்ச்சி (சிக்மாய்டு) என இரு வடிவங்கள் கிடைக்கின்றன.



'j' வடிவிலான வளர்ச்சி வடிவம்

ஒரு இனக்கூட்டத்தின் அளவு விரைந்து பெருகிக் கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் தடை அல்லதுதிடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. இவை J வடிவிலான வளர்ச்சியைக் கொடுக்கின்றன. மழைக்காலங்களில், நிறைய பூச்சி வகைகளின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்கும், மழைக்காலங்களின் முடிவில் அவை மறையும் (படம் 11.11).


உயிரினத் திறன் அல்லது இனப்பெருக்கத் திறன் (r) (Biotic potential or reproductive potential) : சாதகமான சுற்றுச் சூழலில் ஒரு உயிரினத்தின் அதிகபட்ச இனப்பெருக்கத் திறன் உயிரினத் திறன் எனப்படும். 

தாங்கும் திறன் (k) (Carrying capacity) : சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் ஒரு நிலப்பகுதியில் வாழக்கூடிய சிற்றினத்தின் அதிகபட்ச எண்ணிக்கையே தாங்குதிறன் எனப்படும்.  

சுற்றுச்சூழல் தடைகள் (Environmental resistance): ஒரு உயிரியின் உயிரினத் திறன் கைவரப் பெறுதலைத் தடுக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளின் மொத்த தொகுப்பு சுற்றுச் சூழல் தடைகள் எனப்படும்.


S வடிவிலான வளர்ச்சி வடிவம்

சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்கள் எண்ணிக்கை மிக மெதுவாகவும், பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. இவ்வகை வளர்ச்சி S வடிவத்தைக் கொடுக்கின்றது. 


Tags : Organisms Reproductive and Population உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்.
12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population : Growth Models / Curves Organisms Reproductive and Population in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகள் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்