விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population
உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
பாடம் 11
இயற்கையைக் காத்து நம் எதிர்காலம் காப்போம்
பாட உள்ளடக்கம்
11.1 உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல்
11.2 வாழிடம்
11.3 முக்கிய உயிரற்ற ஆக்கக் கூறுகள் அல்லது காரணிகள்
11.4 உயிர்த் தொகை மற்றும் பரவல் குறித்த கோட்பாடுகள்
11.5 உயிரற்ற காரணிகளுக்கான துலங்கல்கள்
11.6 தகவமைப்புகள்
11.7 இனக்கூட்டம்
11.8 இனக்கூட்ட இயல்புகள்
11.9 இனக்கூட்டம் - வயது பரவல்
11.10 வளர்ச்சி மாதிரிகள்/வளைவுகள்
11.11 இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல்
11.12 இனக்கூட்டச் சார்பு
கற்றலின் நோக்கங்கள்:
கீழ்க்கண்ட பொருள் குறித்த அறிவைப் பெறுதல்.
* உள்நாட்டு மற்றும் புவியியல் சார்ந்த பரவல் - உயிரினங்களின் செறிவு.
* உயிரினங்களின் இருப்பு, செறிவு மற்றும் செயல்கள் ஆகியவற்றால் பூமியில் ஏற்படும் மாற்றங்கள்.
* இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும் சமுதாயங்களுக்கிடையே உள்ள இடையுறவு.
* உயிரினங்களின் இயற்சூழலுக்கேற்ப அவற்றின் அமைப்பு சார்ந்த தகவமைப்புகள் மற்றும் செயல் சார்ந்த சீரமைவு.
* அனைத்து வகை இடையுறவுகளுக்குமான பரிணாம வளர்ச்சி.
* இனக்கூட்ட வளர்ச்சி, மாதிரிகள் மற்றும் நெறிப்படுத்துதல்.
* விலங்கினத் தொடர்புகள் - சிற்றினங்களுக்குள் மற்றும் சிற்றினங்களுக்கிடையில் உள்ள தொடர்புகள்.
சுற்றுச்சூழலியல் (Ecology) என்ற சொல் கிரேக்க மொழியில், இருந்து உருவானது. 'oikos' என்றால் 'வீட்டில் உள்ள' என்றும் மற்றும் 'logos' என்றால் 'படித்தல்' என்றும் பொருள். எனவே, சுற்றுச்சூழல் 'வீடு' குறித்த படிப்பில், அதில் உள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் அவ்வீட்டினை வாழத் தகுதியுள்ளதாக்கும் செயற்பாட்டு நிகழ்வுகள் ஆகியவை அடங்கியுள்ளன.
சுற்றுச்சூழலியலானது, உயிரினங்கள், இனக்கூட்டம், சமுதாயம், சூழ்நிலை மண்டலம் போன்ற பல படிநிலைகளை உள்ளடக்கியது. சுற்றுச்சூழலியலில், 'உயிரினக்கூட்டம்' என்ற சொல் தொடக்கத்தில் ‘மனிதர்களின் தொகுப்பு’ என்பதைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சொல் தற்போது எந்தவொரு உயிரினத்தையும் சார்ந்த 'உயிரினங்களின் தொகுப்பு' என்ற சொல்லாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சூழலியல் நோக்கில் சமுதாயம்' என்பது (உயிரியச் சமுதாயம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டங்களையும் குறிக்கிறது. உயிரியச் சமுதாயமும், உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளும் ஒருங்கே இணைந்து சூழ்நிலை மண்டலமாகச் (Ecosystem) செயலாற்றுகிறது. உயிர்த் தொகை (Biome) என்ற சொல், முக்கிய தாவர வகைகளைக் கொண்ட பெரிய பகுதி அல்லது துணைக் கண்ட அளவிலான பகுதியைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படும். மிகப் பெரிய, ஓரளவிற்கு தன்னிறைவு பெற்ற உயிரியல் மண்டலத்தை ‘சுற்றுச்சூழல் கோளம்' (Ecosphere) என்றும் குறிப்பிடலாம். இதில் பூமியில் உள்ள அனைத்து உயிரிகளும் அடங்கும். இவை இயற்பியல் காரணிகளுடன் இணைந்து செயலாற்றி அவற்றின் பரவல், செறிவு, உற்பத்தி மற்றும் பரிணாமத்தை ஒழுங்குபடுத்துகின்றன.