உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - இனக்கூட்டம் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population
இனக்கூட்டம் (Population)
தங்களுக்குள் அகக்கலப்பு செய்து கொள்ளக்கூடிய, ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற மற்றும் ஒரு உயிரின சமுதாயத்தின் பகுதியாகச் செயல்படும் உயிரினங்களின் தொகுப்பே இனக்கூட்டம் எனப்படும். இனக்கூட்டத்தின் அடர்த்தி, பிறப்பு வீதம், இறப்பு வீதம், வயது பகிர்வு, உயிரியல் திறன், பரவல் மற்றும் r மற்றும் K ஆல் தேர்வு செய்யப்பட்ட வளர்ச்சி வடிவங்கள் ஆகியவை இனக்கூட்டத்தின் பல்வேறு பண்புகளாகும். ஒரு இனக்கூட்டத்தின் மரபுப் பண்புகள், அவற்றின் தகவமைப்பு, இனப்பெருக்க வெற்றி, ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் திறன் ஆகிய காரணிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு உயிரினத்தின் வாழ்க்கை வரலாறு அதன் தனிப்பட்ட பண்புகளைப் பொறுத்தது ஆகும். காலத்தோடு கொண்ட தொடர்பை விளக்கும் வகையில் தெளிவான அமைப்பையும், செயலையும் இனக்கூட்டம் பெற்றுள்ளது.