Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னோட்டத்தின் வெப்ப விளைவு,ஜுலின் விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
   Posted On :  03.10.2022 05:25 pm

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு,ஜுலின் விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்,ஜுலின் விதி:தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு,ஜுலின் விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 2.27

10 மின்தடையாக்கி வழியாக 5 A மின்னோட்டம் 5 நிமிட நேரம் பாய்வதால் தோன்றும் வெப்ப ஆற்றலின் மதிப்பை காண்க.

தீர்வு

R = 10 , I = 5A, t = 5 நிமிடங்க ள் = 5x 60S

H = I2 Rt

= 52 X 10 X 5X 60

= 25X 10 X 300

= 25 X 3000

= 75000 J (அல்லது) 75 Kj


எடுத்துக்காட்டு 2.28

10  மின்தடை கொண்ட மின் சூடேற்றி 220 V மின்திறன் மூலத்துடன் இணைக்கப்பட்டு 1 kg நிறையுள்ள நீரில் மூழ்க வைக்கப்பட்டுள்ளது. நீரின் வெப்பநிலையை 30°C லிருந்து 60°C க்கு உயர்த்த மின் சூடேற்றி எவ்வளவு நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும்?

(நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் S = 4200 J kg-1K-1)

தீர்வு

ஜுலின் வெப்ப விதிப்படி H = I2 Rt

மின் சூடேற்றி வழியேபாயும்மின்னோட்டம் = 220V/10 = 22A

மின் சூடேற்றி 1 விநாடியில் உற்பத்தி செய்யும் வெப்பம் H = I2 R

H = (22)2 x 10 = 4840 J = 4.84 kJ.

உண்மையில் இந்த மின் சூடேற்றியின் திறன் மதிப்பு 4.84 k W ஆகும்.

1kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 30°C லிருந்து 60°C க்கு உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு

Q= ms T (பார்க்க வகுப்பு XI தொகுதி 2, அலகு 8)

இங்கு m = 1 kg.

s=4200 J kg-1K-1T = 30 K,

எனவே Q = 1 x 4200 x 30 = 126 kJ

இந்த வெப்ப ஆற்றலை தோற்றுவிக்கத் தேவைப்படும் நேரம்

t= Q/I2R= 126x103/4840 ≈ 26.03S 

12th Physics : UNIT 2 : Current Electricity : Heating Effect of Electric Current, Joule’s law: Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : மின்னோட்டத்தின் வெப்ப விளைவு,ஜுலின் விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்