Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்

ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.

உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்


நேர்மறைத் தாக்கம்

ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.

வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.

உலகமயமாக்கல் வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.

புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்

இது பண்டங்களை தடையற்றதாகவும் தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.

 

எதிர்மறைத் தாக்கம்

நாடுகளுக்கிடையே மிக அதிகமான மூலதனமானது நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.

தேசிய ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.

முக்கிய உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை அதிகரிக்கும்.

அந்நிய செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.

சுற்றுச்சூழல் பற்றிய தரங்களும், கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

 

உலகமயமாக்கலின் சவால்கள்

உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.

வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.

உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.

இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.

உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல் நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.

உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச்சட்டம் 1974 (Foreign Exchange Regulation Act) : இந்த சட்டம் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை நேரடியாக குறிப்பிடுகிறது.

அந்நிய செலாவணி மேலாண்மைச்சட்டம் 1999 (Foreign Exchange Management Act): இது பாராளுமன்றத்தால் 1999ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டுக்கு மாறாக நிர்வாகத்தை” FEMAவின் கீழ் வலியுறுத்தியது.


10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade : Impact and Challenges of Globalization in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் : உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும் - : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்