தொழில்மயமாதலின் முக்கியத்துவம்
தொழிற்சாலைகளின்
முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் முன் நாம் ஏன் வேளாண்மையின் வளர்ச்சியுடன் அதன்
பொருளாதார வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு குறைகிறது என்பதனைப் புரிந்து கொள்ள
வேண்டும். முதலாவதாக உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது. எனவே, ஒரு
நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வோர் வேளாண்மை
உற்பத்திப் பொருள்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும்
செலவிடுகிறார்கள்.
இரண்டாவதாக, நுகரப்படும்
உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. உணவுப் பொருள்கள் நீண்ட
தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது. இதன் விளைவாக
நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக உள்ளது.
மூன்றாவதாக, நிலத்தின்
இறுதி நிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு
தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் சில வரையறைகளை பின்பற்ற நேரிடுகிறது. பெருமளவிலான
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை
அதிகரிக்க வாய்ப்பில்லாததாலும் வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.
இந்த அனைத்து காரணிகளின்
விளைவாக வேளாண்துறையில் இருந்து விலகி,
பொருளாதாரமானது உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பின்
அடிப்படையில் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது.
முன்னர் கூறியது போல்
ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது
அவசியம். வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற
தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது.
இரண்டாவதாக, உற்பத்தியாளர்கள்
மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது. அதே
போல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள்
தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது.
மூன்றாவதாக, நவீன
உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை
அளிக்கின்றன. இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும்
குறைகிறது. இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும்
அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.
நான்காவதாக, அத்தகையப்
பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும்
அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவது
"தொழில் மயமாதலின்" ஒரு முக்கிய நோக்கமாகும்.
ஐந்தாவதாக, தொழில்மயமாதலுக்கு
நன்மை தருவது "தொழில்நுட்ப மாற்றமே" ஆகும். நவீன தொழில் நுட்பங்களைப்
பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து
கொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின்
உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.
ஆறாவதாக, வருமானம்
அதிகரிப்பு பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழி வகுக்கிறது.