தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu
V. குறுகிய விடை தருக.
1. விவசாயத் துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
• நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் குறைவதால் வேளாண் உழைப்பாளர்களின்
உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவதில்லை .
• பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நம்பியிருப்பதால்
ஊதியம் குறைவாகவே உள்ளது.
2. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்து
கொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.
3. தொழில் தொகுப்புகள் உருவாதற்கான வழிகள் யாவை?
ஒரு சில தொழிற் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி
நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
• கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
• சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம்
நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக்
கொள்வதற்காக ஒரு தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றக்கூடும்.
• ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தியை
ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம்.
4. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு
நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக்கழகம் (SIPCOT -1971)
1971 இல் தொழில் முன்னேற்றத்திற்காக தொழிற்தோட்டங்களை
அமைத்தது.
தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக்கழகம் (TANSIDCO - 1970)
புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற்நுட்ப உதவிகளை செய்கிறது.
தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் (TIDCO)
தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும்
உதவும் நிறுவனமாகும்.
5. தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
• வேதிப்பொருட்கள், ஜவுளித்
துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
• இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர்நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள
விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
• உலகளாவிய அளவில் போட்டி போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை
பயன்படுத்துவதால் நிலையான வேலைவாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது.
• பணியாளர்களின் தரமானது, இன்றைய
காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்துவதால் குறை ஏற்படுகிறது.
6. தொழில் முனைவோர் என்பவர் யாவர்?
• ஒரு ‘தொழில் முனைவோர்' என்பவர்
புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம்
புனைபவர் ஆவார்.
• இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையான
தலைமைக்கான பண்புகளும் இருக்கும்.
7. தொழில் முனைவு என்றால் என்ன?
• தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே
தொழில் முனைவு எனப்படும்.
• இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன்
ஆகும்.