Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள்
   Posted On :  27.07.2022 02:41 pm

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள்

கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் 

கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

கல்வி

திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும். இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.

உள்கட்டமைப்பு

மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது.

தொழில்துறை ஊக்குவிப்பு

கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலைவிரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.

 

தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள்

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு. தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

 

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO - Tamil Nadu Small Industries Development Corporation) 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation) நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIC - Tamil Nadu Industrial Investment Corporation Ltd) புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் வரையறுக்கப்பட்டது (TANSI - Tamil Nadu Small IndustriesCorporationLtd) சிறுநிறுவனங்க ளுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில் துறை நிறுவனமாகும்.


தொழில்மயமாதலின் பிரச்சனைகள்

தமிழகம்நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வேதிப்பொருள்கள்நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது. இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது. உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானதுஇன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப் படுவதால் குறைகிறது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones-SEZs)

நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது.


மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ)

மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும். மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016)

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016)

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி(Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.


10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : The Policy Factors that Helped the Industrialisation Process in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்