Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)

பொருளியல் - தொழில் தொகுப்புகள் (Industrial Clusters) | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

   Posted On :  05.07.2022 12:42 pm

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)

தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)

தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும். இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவு தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான ஆல்ஃபிரட் மார்ஷல் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தார். 1980களில் இத்தாலியில் சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர்தான் மார்ஷலின் தொழில்துறை மாவட்டம் (IndustrialDistrict) என்ற கருத்து பிரபலமாக்கப்பட்டது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் கொள்கை வகுப்பாளர்கள் தங்களுடைய நாட்டில் இது போன்ற பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்பினை உணர்ந்ததால் அவற்றினை ஊக்குவிக்கத் தொடங்கினர்.


வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.

துறை சார்ந்த சிறப்பு கவனம்.

நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.

புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.

நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்

பல்வேறு திறமையான தொழிலாளர்கள்

சுய உதவி குழுக்கள் செயல்படுதல்

வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும். போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

 

தொழில் தொகுப்பு எவ்வாறு தோன்றுகிறது?

தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்ற கூடும். சில நேரங்களில், ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம், இது தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும்.


Tags : Economics பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : Industrial Clusters Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : தொழில் தொகுப்புகள் (Industrial Clusters) - பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்