பொருள், வட்டியின் வகைகள் - வட்டி | 11th Economics : Chapter 6 : Distribution Analysis
வட்டி
பொதுவாக கடன் பெறுபவர் கடன் வழங்கியவருக்கு செலுத்தும் தொகையே வட்டி எனப்படுகிறது.
முதலைப் பயன்படுத்திக் கொள்ள, அதைப் பெற்றவர்கள் அதை வழங்கியவர்க்கு வழங்கும் வெகுமதியே வட்டி ஆகும்.
“அங்காடியில் முதலைப் பயன்படுத்திக் கொள்வதற்காக கொடுக்கப்படுவது வட்டி”
– ஆல்ஃபிரட் மார்ஷல்
கடன் பெற்றவரிடம் இருந்து கடன் கொடுத்தவர் பெறுகின்ற முழு வட்டி அளவு மொத்த வட்டி ஆகும்.
மொத்த வட்டி = நிகர வட்டி + சிரமத்தைத் தாங்கிக் கொள்வதற்கான ஊதியம் + இடரைத் தாங்குவதற்கான இழப்பீடு + கடனை மேலாண்மை செய்வதற்கான ஊதியம்
மொத்த வட்டியின் ஒரு பகுதியே நிகர வட்டி ஆகும். மூலதனத்தை பயன்படுத்த மட்டுமே இது வழங்கப்படுகிறது.
அரசு பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி நிகர வட்டிக்கு எடுத்துக்காட்டாகும்.