Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | சந்தை அமைப்பு மற்றும் விலை: அறிமுகம்

பொருளாதாரம் - சந்தை அமைப்பு மற்றும் விலை: அறிமுகம் | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

சந்தை அமைப்பு மற்றும் விலை: அறிமுகம்

சாதாரண அர்த்தத்தில், 'சந்தை' என்ற சொல், பொருட்கள் மற்றும் சேவைகள் வாங்கப்பட்டு விற்கப்படும் ஒரு இயற்பியல் இடத்தைக் குறிக்கிறது.

அத்தியாயம் 5

அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

சந்தைப்படுத்துதல் என்பது உற்பத்தி செய்தவற்றை அகற்றுவதற்கு புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டுபிடிக்கும் கலை அல்ல. உண்மையான வாடிக்கையாளர் நன்மதிப்பை உருவாக்கும் கலையாகும்.

- பிலிப் கோட்லர் (Philip Kotler)


கற்றல் நோக்கங்கள்

1 அங்காடியின் பண்புகளையும், பல்வேறு வகையான அங்காடியில் விலை மற்றும் வெளியீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2 பல்வேறு வகையான அங்காடிகளில், நிறுவனங்களின் இலாபத்தின் தன்மை பற்றி படிப்பது.


அறிமுகம்

ஒவ்வொரு பொருள் அல்லது பணியை பரிமாற்றம் செய்வதற்கு இருபக்கங்கள் உள்ளன. ஒன்று அளிப்பு பக்கம். மற்றொன்று தேவை பக்கம். அளிப்பு பக்கமானது விற்பனையாளர்களின் எண்ணிக்கை, பொருளின் இயல்பு, உற்பத்தி செய்த பொருளின் அளவு போன்ற தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். தேவை பக்கமானது பொருளை வாங்குவதற்காக அங்காடிக்கு வரும் வாங்குபவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். அங்காடி அமைப்பு பற்றி படிப்பது நுண்ணியல் பொருளியலின் முக்கியமான இயல்பாக உள்ளது.



Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 5 : Market Structure and Pricing : Market Structure and Pricing: Introduction Economics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் : சந்தை அமைப்பு மற்றும் விலை: அறிமுகம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்