சுற்றுச்சூழல் பொருளியல் - விதைப் பந்து | 12th Economics : Chapter 10 : Environmental Economics

   Posted On :  17.03.2022 02:05 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்

விதைப் பந்து

ஒரு விதை மண்ணால் மூடிவைக்கப்படுகிறது. அந்த மண் உரம் கலந்த களிமண்ணாகும். பிறகு உலர்த்தப்படுகிறது.

விதைப் பந்து (Seed Ball)

ஒரு விதை மண்ணால் மூடிவைக்கப்படுகிறது. அந்த மண் உரம் கலந்த களிமண்ணாகும். பிறகு உலர்த்தப்படுகிறது. பின்பு எங்கு வேண்டுமோ அங்கு அதனை விதைக்கலாம். இவ்வாறு செய்யும் போது, அந்த விதை முன்பே நடப்பட்டுவிட்டது என்றே பொருள். மரங்கள் நடுவதற்கு விதைப்பந்து முறை எளிதான, நீடித்து நிலைக்கும் வழியாகும். ஏனெனில் மழை விழுந்தபின் விதைகள் விதைப்பது கடினமான முறையாகும்.





தொகுப்புரை

இயற்கைக் சூழலுக்கும் மனித நடவடிக்கைகளும் இடையே உள்ள தொடர்பு இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பொருளாதாரம் பொருளியலின் ஒரு பகுதியாக சூழல் வளங்களைச் சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்வதை விளக்குகின்றது. ஆலன் நீஸ் (Alen Kneese) மற்றும் R.V.அய்யரஸ் (R.V. Ayres) இன் பொருள் சார் சமநிலை மாதிரி (Material balance Model) மூலமாக பொருளாதாரத்திற்கும் சுற்றுச் சூழ்நிலைகளுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்குகின்றது.

இரண்டாவது பகுதியில் காற்று, தண்ணீ ர், ஒலி, நிலம் போன்ற பல்வேறு வகையான காரணிகள் மாசுபடுவதற்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் அவற்றைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் புவி வெப்பமடைதல், தட்பவெப்பநிலை மாறுபடுதல், அமிலமழை, E - கழிவுகள் மற்றும் திடக் கழிவுகள் போன்ற சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாக மக்கள் நடவடிக்கைகளான பசுமைத் துவக்கங்கள், இயற்கை விவசாயம் மரத்தோட்டங்கள் ஏற்படுத்துதல், விதைப்பந்து, களர் நில விவசாயம் போன்ற முறைகளால் நிலைத்த நீடித்த மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் முயற்சிகள் விளக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை மாசு, வளியில் ஏற்படும் கழிவுகள், மண்ண ரிப்பு, நிலவளக்குறைவு, காடுகளை அழித்தல் மற்றும் இயற்கை வளங்களை அழித்தல் போன்ற காரணிகளால் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றது. சுற்றுச் சூழலைப் பாதிக்கும் காரணிகளைச் சரிசெய்ய அங்காடிகளும் நிறுவனங்களும் வளர்ச்சி பெறாததே இந்தியா போன்ற நாடுகளின் பிரச்சனையாகும். மேலும் மாசுபடுதல் எல்லை தாண்டிய பிரச்சனையாகும். எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுத்தால்தான் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த முடியும். வளர்ந்த நாடுகள் புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமாக விளங்குவதால், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்ய அவர்களே முயற்சி செய்ய வேண்டும்




அருஞ்சொற்பொருள்



* சுற்றுச்சூழல்: நம்மை சுற்றியுள்ள காற்று, நீர், நிலம், இயற்கை வனங்கள், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்கள் அடங்கிய தொகுப்பும், அத்தொகுப்பில் உள்ளவைகளுக்கு இடையேயான பரஸ்பர உறவும்.

* சூழலியல்: உயிரினங்களுக்கிடையேயான பரஸ்பர உறவும், அவைகளின் சுற்றுச்சூழலையும் பற்றி படிக்கும் இயல்.

* சூழல் அமைப்பு அல்லது சூழல் மண்டலம்: ஒரு பகுதியின் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் தொகுப்பும், அவற்றிற்கிடையேயான தொடர்பும் ஆகும்.

* புறவிளைவுகள்: ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ நடடிவக்கைகள் மேற்கொண்டும், மூன்றாம் தரப்பினரின் நுகர்ச்சி அல்லது உற்பத்தியினால் தனக்கு நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பினையோ (எதிர்மறை), ஆதாயத்தையோ (நேர்மறை) பெறமுடியாக நிலையே புறவிளைவுகள் ஆகும்.

* மாசுபாடு: நிலம், நீர், காற்று, வனங்கள் போன்ற சுற்றுச்சூழல் ஊடகங்களில் கழிவுகளை விடுவிப்பதால் அவைகளின் தன்மையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுதலை மாசுபாடு என்கிறோம்.

* காற்று மாசு: சுற்றுச்சூழல் ஊடகங்கள், தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் மனித இனம் ஆகியவற்றிற்கு ஊறு விளை விக் குமளவுக்கு காற்று மண்டலத்தில் திட, திரவ அல்லது வாயு வடிவிலான பொருட்கள் கலந்திருப்பதை காற்று மாசு என்கிறோம். 

* நீர் மாசு: நீர்நிலைகளில் திட, திரவ, வாயு வடிவிலான பொருட்கள் அல்லது வெப்ப சக்தி போன்றவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலக்கும்பொழுது நீரின் தரம் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்து அவற்றினை பயன்படுத்தும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிலை நீர்மாசு எனப்படுகிறது.  

* நில மாசு: திட, திரவ மற்றும் வாயு வடிவிலான கழிவுகளை நிலத்தில் கொட்டுவதால் அதன் தன்மை குறிப்பிடத்தகுந்த அளவுக்குப் பாதிக்கப்பபட்டு நிலம், நிலத்தடி நீர், தாவரங்கள் மற்றும் உயிhpனங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை நில மாசு என்கின்றோம். 

* உலக அல்லது புவி வெப்பமயமாதல் : பல்வேறு மனித நட்டிவக்கைகளின் காரணமாக இயல்பினைவினைவிட அதிக அளவு கரியமில வாயு, மீத்தேன், குளோரா புளோரா கார்பன், நைடரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகி, அதன் காரணமாக உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்துவருவது உலக அல்லது புவி வெப்பமயமயாதல் எனப்படுகிறது. 

* பருவநிலை மாற்றம்: வெப்பநிலை, மழைபொழிவு, காற்று வீசுதல் ஆகியவற்றின் அளவுகளிலும், அவைகள் நிலவும் காலங்களிலும் ஏற்படும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் பருவநிலை மாற்றம் எனப்படுகிறது.

* அமில மழை: சல்பர் - டை - ஆக்சைட், நைட்ரஜன் ஆக்சைட் வளிமண்டலத்தில் நீருடன் வினை புரிந்து, பூமிக்கு மழை மற்றும் பனிப்பொழிவாக பூமிக்கு திரும்புவதை குறிப்பது அமில மழை. 

* திடக்கழிவுகள்: திரவமற்ற கரையாத நகராட்சிக் கழிவு முதல் தொழிற்சாலைக் கழிவு வரை உள்ள கழிவுகள், சிக்கலான, தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டது. கழிவுநீர் சக்தி, விவசாய மீதிக் கழிவுகள், கட்டுமானங்கள் இடிப்பதால் உள்ள கழிவுகள், சுரங்கக் கழிவுகள் போன்றவை திடக்கழிவிற்கு உதாரணங்களாகும்.

* நீடித்த மேம்பாடு அல்லது வளம் குன்றா மேம்பாடு : நீடித்த மேம்பாடு அல்லது வளங்குன்றா மேம்பாடு என்பது, எதிர்கால சந்ததியினர் தங்களது தேவைகளை சமரசமில்லாமல் பூர்த்தி செய்துகொள்வதற்கு வழிகோலும் வகையில், நிகழ்கால தலைமுறையினர் தங்களது உற்பத்தி மற்றும் நுகர்ச்சி அளவுகளையும், பொருளாதார மேம்பாட்டின் அளவினையும் அமைத்துக்கொள்வது ஆகும். நடப்பு மேம்பாட்டின் அளவு தலைமுறைகளுக்கு இடையிலும் தொடர வேண்டும் என்பதாகும்.

* அங்கக வேளாண்மை (அல்லது) கரிம வேளாண்மை (அல்லது) இயற்கை வேளாண்மை : செயற்கை இடுபொருட்களான இரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, இயற்கை இடுபொருட்களான (அங்கக பொருட்களான) உயிரின மற்றும் தாவர கழிவுகளைக் கொண்டும், இயற்கை பூச்சிவிரட்டிகளை கொண்டும் பயிரிடும் வேளாண்மை முறையாகும்.

Tags : Environmental Economics சுற்றுச்சூழல் பொருளியல்.
12th Economics : Chapter 10 : Environmental Economics : Seed Ball Environmental Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல் : விதைப் பந்து - சுற்றுச்சூழல் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 10 : சுற்றுச்சூழல் பொருளியல்