வடிவியல் | கணக்கு - பலவுள் தெரிவு வினாக்கள் | 10th Mathematics : UNIT 4 : Geometry
பயிற்சி 4.5
பலவுள் தெரிவு வினாக்கள்
1. எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.
(அ) ∠B = ∠E
(ஆ) ∠A = ∠D
(இ) ∠B = ∠D
(ஈ) ∠A = ∠F
2. ΔLMN-யில் ∠L = 60°, ∠M = 50° மேலும், ΔLMN ~ ΔPQR எனில், ∠R -யின் மதிப்பு
(அ) 40°
(ஆ) 70°
(இ) 30°
(ஈ) 110°
3. இருசமபக்க முக்கோணம் ΔABC -யில் ∠C = 90° மற்றும் AC = 5 செ.மீ, எனில் A B ஆனது
(அ) 2.5 செ.மீ
(ஆ) 5 செ.மீ
(இ) 10 செ.மீ
(ஈ) 5√2 செ.மீ
4. கொடுக்கப்பட்ட படத்தில் ST || QR, PS = 2 செ.மீ மற்றும் SQ = 3 செ.மீ. எனில், ΔPQR யின் பரப்பளவுக்கும் ΔPST -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்
(அ) 25 : 4
(ஆ) 25 : 7
(இ) 25 : 11
(ஈ) 25 : 13
5. இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும் ΔPQR -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், A B-யின் நீளம்
(அ) 6(2/3) செ.மீ
(ஆ) 10√6 /3 செ.மீ
(இ) 66(2/3) செ.மீ
(ஈ) 15 செ.மீ
6. ΔABC -யில் DE || BC . AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE - யின் நீளம்
(அ) 1.4 செ.மீ
(ஆ) 1.8 செ.மீ
(இ) 1.2 செ.மீ
(ஈ) 1.05 செ.மீ
7. ΔABC - யில் AD ஆனது, ∠BAC -யின் இருசமவெட்டி. AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC -யின் நீளம்
(அ) 6 செ.மீ
(ஆ) 4 செ.மீ
(இ) 3 செ.மீ
(ஈ) 8 செ.மீ
8. கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 90° மற்றும் AD ┴ BC எனில்,
(அ) BD ⋅ CD = BC2
(ஆ) AB .AC = BC2
(இ) BD ⋅ CD = AD2
(ஈ) AB ⋅ AC = AD2
9. 6மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
(அ) 13 மீ
(ஆ) 14 மீ
(இ) 15 மீ
(ஈ) 12.8 மீ
10. கொடுக்கப்பட்ட படத்தில், PR = 26 செ.மீ, QR = 24 செ.மீ, ∠PAQ = 90°, PA = 6 செ.மீ மற்றும் QA = 8 செ.மீ எனில் ∠PQR -ஐக் காண்க.
(அ) 80°
(ஆ) 85°
(இ) 75°
(ஈ) 90°
11. வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்
(அ) மையம்
(ஆ) தொடு புள்ளி
(இ) முடிவிலி
(ஈ) நாண்
12. வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?
(அ) ஒன்று
(ஆ) இரண்டு
(இ) முடிவற்ற எண்ணிக்கை
(ஈ) பூஜ்ஜியம்
13. O -வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P-யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 70° எனில், ∠AOB -யின் மதிப்பு
(அ) 100°
(ஆ) 110°
(இ) 120°
(ஈ) 130°
14. படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR - யின் நீளம்
(அ) 6 செ.மீ
(ஆ) 5 செ.மீ
(இ) 8 செ.மீ
(ஈ) 4 செ.மீ
15. படத்தில் உள்ளவாறு O - வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ∠POQ ஆனது
(அ) 120°
(ஆ) 100°
(இ) 110°
(ஈ) 90°