வேதியியல் - அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் | 12th Chemistry : UNIT 5 : Coordination Chemistry
அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
அக்காலங்களில் அணைவுச் சேர்மங்கள் அச்சேர்மங்களைக் கண்டறிந்தவர்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, K[PtC13(C2H4)] ஆனது சீசஸ் உப்பு எனவும் [Pt(NH3)4], [PtC14] ஆனது மேக்னஸ் பச்சை உப்பு எனவும் அழைக்கப்பட்டன. தற்காலத்தில் ஏராளமான அணைவுச் சேர்மங்கள் தயாரிக்கப்பட்டு அவைகளின் பண்புகள் அறியப்பட்டுள்ளன. இந்நிலையில் IUPAC அமைப்பானது அணைவுச் சேர்மங்களை முறையாக பெயரிடுவதற்கு விரிவாக வழிமுறைகளைப் பரிந்துரை செய்துள்ளது. IUPAC பரிந்துரைகள் 2005-ன் படி அணைவுச் சேர்மங்களைப் பெயரிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு,
1. அணைவுச் சேர்மத்தில் உள்ள அயனிகளுள் அவை எளிய அயனியா அல்லது அணைவு அயனியா என்பதனை பொருத்து அல்லாமல், நேர் அயனி முதலில் பெயரிடப்பட வேண்டும் அதன் பின்னர் எதிர் அயனிக்குப் பெயரிட வேண்டும். எடுத்துக்காட்டு .
• K4[Fe(CN)6] ல், நேர் அயனி K+ முதலில் பெயரிடப்பட வேண்டும். பின்னர் [Fe(CN)6]4- அயனி பெயரிடப்பட வேண்டும்.
• [Co(NH3)6]C13 ல், அணைவு நேர் அயனி [Co(NH3)6]3+ முதலில் பெயரிடப்பட வேண்டும் பின்னர் எதிரயனி பெயரிடப்பட வேண்டும்.
• [Pt(NH3)4] [PtC14) ல், அணைவு நேர் அயனி முதலில் பெயரிடப்பட வேண்டும்(Pt(NH,).]+ பின்னர் அணைவு எதிரயனி பெயரிடப்பட வேண்டும். (PtC14]2-
2. எளிய அயனிகளைப் பொருத்த வகையில், அவைகள் வழக்கமாக அயனிச் சேர்மங்களில் எவ்வாறு பெயரிடப்படுகின்றனவோ அவ்வாறே அணைவுச் சேர்மங்களிலும் பெயரிடப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக,
3. அணைவு அயனியைப் பெயரிடும் போது முதலில் ஈனிகளுக்குப் பெயரிட வேண்டும். பின்னர் அதனைத் தொடர்ந்து மைய உலோக அணு/அயனிக்குப் பெயரிட வேண்டும். அணைவு அயனியானது ஒன்றிற்கும் மேற்பட்ட வகை ஈனிகளைப் பெற்றிருப்பின், பெயர் எழுதும்போது அவைகளின் ஆங்கில அகரவரிசையின் அடிப்படையில் பெயரிடப்பட வேண்டும்.
i. எதிர் ஈனிகளின் பெயர் ' என்ற எழுத்தில் முடிவடைய வேண்டும். மேலும், நேர் ஈனிகளின் பெயர் 'ium' என முடிய வேண்டும். நடுநிலை ஈனிகளுக்கு அவைகளின் மூலக்கூறு பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. சில விதிவிலக்குகள் H2O (aqua-அக்வா), CO (கார்பனைல்), NH3 (அம்மீன்) மற்றும் NO (நைட்ரோசில்).
ii. இரு முனைவழி பிணைப்பை ஏற்படுத்தும் ஈனிகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட அணுக்களின் வழி ஈதல் சகப்பிணைப்பினை உருவாக்க வாய்ப்பு இருப்பதால், அதனை குறித்துக்காட்ட K-பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தயோசயனேட் ஈனியானது மைய உலோக அயனியுடன், சல்பர் அணுவின் வழியாகவோ அல்லது நைட்ரஜன் அணுவின் வழியாகவோ பிணைப்பினை ஏற்படுத்த இயலும். இந்த ஈனியிலுள்ள சல்பர் அணுவால், உலோக அணுவுடன் ஈதல் சகப்பிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பின் அந்த ஈனி தயோசயனேட்டோ -KS எனவும், நைட்ரஜன் அணுவானது பிணைப்பில் ஈடுபட்டிருப்பின், தயோசயனேட்டோ -KN எனவும் பெயரிடப்படுகின்றன. (K -kappa)
(iii) அணைவு உட்பொருளானது ஒன்றிற்கும் மேற்பட்ட ஒரே வகையான ஈனிகளைப் பெற்றிருப்பின், ஈனியின் எண்ணிக்கையினைக் குறிப்பிட (2, 3, 4 etc...), அதன் பெயரோடு கிரேக்க முன்னொட்டுகளான (டை, ட்ரை , டெட்ரா, பென்டா...........) போன்றவை சேர்த்து எழுதப்படுகின்றன. ஈனியின் பெயரிலேயே இத்தகைய கிரேக்க முன்னொட்டுகள் காணப்படுமாயின் அத்தகைய ஈனிகளின் எண்ணிக்கையை (எடுத்துக்காட்டாக, எத்திலீன் டை அமீன்) குறிப்பிட மாற்று முன்னொட்டுகளான பிஸ், டிரிஸ், டெட்ராகிஸ் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஈனிகளை அவற்றின் அகரவரிசையில் பெயரிடும் போது இந்த முன்னொட்டுகள் கருத்திற் கொள்ளப்படுவது இல்லை .
நேரயனி நடுநிலை அணைவுகளில், மைய உலோக அணு/அயனிக்குப் பெயரிட தனிமங்களின் வழக்கமான பெயரானது எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எதிரயனி அணைவுகளில் தனிமங்களின் பெயரோடு ate என்ற பின்னொட்டு சேர்த்து எழுதப்படுகின்றது. உலோக அணுவின் பெயரினைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் அதன் ஆக்சிஜனேற்ற எண் ரோம எண்ணுருவில் எழுதப்படுகிறது.
IUPAC வழிமுறைகளைப் பின்பற்றி அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்.
எடுத்துக்காட்டு 1
IUPAC வழிமுறைகளைப் பின்பற்றி அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதலை நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு பின்வரும் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
தன்மதிப்பீடு 1:
14. கீழ்க்கண்ட சேர்மங்களுக்கான IUPAC பெயர்களைத் தருக.
(i) K2[Fe(CN)3(C1)2 (NH5)]
(ii) [cr(CN)2 (H2O)4) (Co(ox)2 (en)]
(iii) [Cu(NH3)2 C12]
(iv) [Cr(NH3)3(NC)2 (H2O)]+
(v) [Fe(CN)6]4-
15. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கான மூலக்கூறு வாய்ப்பாட்டினை தருக.
(i) டைஅம்மைன்சில்வர் (I) டைசயனிடோ அர்ஜன்டேட் (I)
(ii) பென்டா அம்மைன் நைட்ரைட்டோ KN-கோபால்ட் (III) அயனி
(iii) ஹெக்சாஃபுளூரிடோ கோபால்டேட் (III) அயனி
(iv) டைகுளோரிடோபிஸ் (எத்திலீன்டைஅமீன்) கோபால்ட் (IV) சல்பேட்
(v) டெட்ராகார்பனைல் நிக்கல் (0)