அணுக்கரு விசை
அணுக்கருவானது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும்
உள்ளடக்கியது. ஆனால், நிலைமின்னியலில், ஓரின மின் துகள்கள் ஒன்றையொன்றுவிலக்கும் என்பதையும்
பார்த்தோம். அணுக்கருவினுள் உள்ள புரோட்டான்கள் ஒரு சில பெர்மி (10-15m)
அளவேயுள்ள (மிக நெருங்கிய) தொலைவுகளால் பிரிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கிடையே மிக
வலிமையான விலக்கு விசை இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக 10-15m இடைவெளியில்
உள்ள புரோட்டான்களுக்கு இடையேவுள்ள நிலைமின்னியல் விலக்கு விசை,
இவ்விசையால் (230N) ஒரு புரோட்டான் அடையும்
முடுக்கம்
இது புவியின் ஈர்ப்பு முடுக்கத்தைக் (g) காட்டிலும்
கிட்டதட்ட 1028 மடங்கு அதிகமாகும். ஆகவே, அணுக்கருவினுள் உள்ள புரோட்டான்கள்
இந்த நிலைமின்னியல் விசையை மட்டுமே உணர்வதாகக் கொண்டால், மிகவிரைவிலேயே அந்த அணுக்கரு
சிதறிப் போயிருக்க வேண்டும். அப்படியெனில் புரோட்டான்களை அணுக்கருவினுள் வைத்திருப்பது
எது?
இதன் மூலம் புரோட்டான்களுக்கு இடையே கூலூம்
விலக்கு விசையை விட வலிமையான கவர்வு விசை ஒன்று செயல்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.
(சிதறிப்போகாமல்) அணுக்கருவைப் பிணைத்து வைத்திருக்கும் இந்த கவர்வு விசையை வலிமையான
அணுக்கரு விசை என்பர். 1930கள் தொடங்கி 1950கள் வரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின்
மூலம் இந்த வலிமைமிக்க அணுக்கரு விசையின் பண்புகள் அறியப்பட்டன. அவற்றுள் சிலவற்றை
இங்கே காண்போம்.
(i) வலிமைமிக்க அணுக்கரு விசை மிகவும் குறுகிய
எல்லைக்குள் செயல்படக்கூடியது; ஒரு சில பெர்மி தொலைவு வரை மட்டுமே அது செயல்படுகிறது.
அணுக்கருவினுள் இரு புரோட்டான்களுக்கு இடையே செயல்படும் கூலூம் விலக்கு விசை மற்றும்
ஈர்ப்பு விசைகள் மிகவும் வலிமை குறைந்தவை. அதேபோல், இரு நியூட்ரான்களுக்கு இடையே நிலவும்
ஈர்ப்பு விசையும் கூட அவை இரண்டிற்கும் இடையேயான வலிமைமிக்க அணுக்கரு விசையை விட மிகவும்
வலிமை குறைந்தது. எனவே, இயற்கையிலேயே மிகவும் வலிமையானது அணுக்கரு விசையே ஆகும்.
(ii) வலிமைமிக்க அணுக்கரு விசை ஒரு கவர்வு
விசையாகும்; மேலும் புரோட்டான் - புரோட்டான், புரோட்டான் - நியூட்ரான் மற்றும் நியூட்ரான்நியூட்ரான்
இவற்றிற்கு இடையே அவ்விசை சம வலிமையுடன் (மதிப்புடன்) செயல்படுகின்றது.
(iii) வலிமைமிக்க அணுக்கரு விசை எலக்ட்ரான்களின்
மீது செயல்படுவதில்லை. எனவே, அது அணுவின் வேதியியல் பண்புகளை மாற்றியமைப்பதில்லை.