Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | முழு மீட்சியற்ற மோதல்
   Posted On :  03.10.2022 03:09 am

11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்

முழு மீட்சியற்ற மோதல்

m1 மற்றும் m2 நிறை கொண்ட இரு பொருள்கள் மோதலுக்கு முன் முறையே u1 மற்றும் u2 என்ற தொடக்க திசைவேகங்களுடன் இயங்குவதாகக் கொள்க.

முழு மீட்சியற்ற மோதல் (Perfect Inelastic Collision) 

முழு மீட்சியற்ற மோதலில் பொருள்கள் மோதலுக்குப்பிறகு ஒரு பொதுவான திசைவேகத்தில் இயங்கும் வகையில் ஒன்றுடன் ஒன்று நிரந்தரமாக ஒட்டிக்கொள்கின்றன. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரு பொருள்கள் மோதலுக்கு முன் முறையே u1 மற்றும் u2 என்ற தொடக்க திசைவேகங்களுடன் இயங்குவதாகக் கொள்க. படம் (4.17) இல் காட்டியுள்ளவாறு முழு மீட்சியற்ற மோதலுக்குப் பிறகு பொருட்கள் v என்ற பொதுவான திசைவேகத்துடன் ஒன்றாக இயங்குகின்றன.

மோதலின் போது நேர்க்கோட்டு உந்தம் மாற்றப்படாமல் உள்ளதால்

m1u1 + m2u2 = (m1 + m2)v


பொதுவான திசைவேகத்தை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.


தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் முழு மீட்சியற்ற மோதல்

எடுத்துக்காட்டு 4.21 

50 g நிறையுள்ள ஒரு துப்பாக்கி குண்டு 450 g நிறையுள்ள ஒரு தொங்கவிடப்பட்ட பொருளின் அடிப்பகுதியிலிருந்து சுடப்படுகிறது. துப்பாக்கி குண்டு பொருளினுள் பொதிந்து பொருளானது 1.8 m உயரத்திற்கு மேல்நோக்கிச் செல்கிறது. துப்பாக்கி குண்டின் வேகத்தைக் கணக்கிடுக. g = 10 ms-2 எனக் கொள்க.

தீர்வு

m1 = 50 g = 0.05 kg; m2 = 450 g = 0.45 kg


துப்பாக்கி குண்டின் வேகம் u1 ஆகும். இரண்டாவது பொருள் ஓய்வு நிலையில் உள்ளது (u2 = 0). துப்பாக்கி குண்டு பொருளினுள் பொதிந்த பிறகு துப்பாக்கி குண்டு மற்றும் பொருள் ஆகியவற்றின் பொதுவான திசைவேகம் v என்க.


பொதுவான திசைவேகமானது துப்பாக்கி குண்டு மற்றும் பொருள் ஆகிய ஒருங்கிணைந்த அமைப்பின் மேல் நோக்கிய செங்குத்து இயக்கத்திற்கான தொடக்க திசைவேகம் ஆகும். இரண்டாவது இயக்கச் சமன்பாட்டிலிருந்து


இதனை மேற்கண்ட சமன்பாட்டில் பிரதியிட்டு u1 மதிப்பைப் பெற

11th Physics : UNIT 4 : Work, Energy and Power : Perfect inelastic collision in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன் : முழு மீட்சியற்ற மோதல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 4 : வேலை, ஆற்றல் மற்றும் திறன்