முக்கோணவியல் | கணக்கு - நினைவில் கொள்ளவேண்டியவை | 10th Mathematics : UNIT 6 : Trigonometry
நினைவில் கொள்ளவேண்டியவை
· முக்கோணவியல் விகிதங்களைக் கொண்ட சமன்பாடானது வரையறுக்கப்பட்ட கோணங்களின் அனைத்து மதிப்புகளுக்கும் மெய்யெனில் அச்சமன்பாட்டை முக்கோணவியல் முற்றொருமை என்கிறோம்.
· முக்கோணவியல் முற்றொருமைகள்
(i) sin2 θ + cos2 θ = 1
(ii) 1 + tan2 θ = sec2 θ
(iii) 1 + cot2 θ = cosec2 θ
· நாம் ஒரு பொருளை உற்றுநோக்கும் போது நமது கண்ணிலிருந்து அப்பொருளுக்கு வரையப்படும் நேர்கோடு பார்வைக்கோடு எனப்படும்.
· கிடைநிலைக் கோட்டிற்கு மேல் பொருள் இருக்கும்போது, பார்வைக் கோட்டிற்கும் கிடைநிலைக் கோட்டிற்கும் இடையேயுள்ள கோணம் ஏற்றக்கோணம் எனப்படும்.
· கிடைநிலைக் கோட்டிற்குக் கீழ் பொருள் இருக்கும்போது, பார்வைக் கோட்டிற்கும் கிடைநிலைக் கோட்டிற்கும் இடையேயுள்ள கோணம் இறக்கக்கோணம் எனப்படும்.
· முக்கோணவியல் விகிதங்கள் மூலம் பொருட்களின் உயரம் அல்லது நீளம் அல்லது பொருட்களுக்கு இடைப்பட்ட தொலைவைக் கணக்கிடலாம்.