கரைசல்கள் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 9 : Solutions
கரைசல்கள் (அறிவியல்)
நினைவில் கொள்க
• இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
பொருட்களின் ஒரு படித்தான கலவை கரைசல் எனப்படும்.
• நீர்க் கரைசல்களில் நீரானது
கரைப்பானாக செயல்படுகிறது.
• நீரற்ற கரைசல்களில் நீரைத் தவிர
மற்றவை கரைப்பானாக செயல்படுகிறது.
• ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த
ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ, அக்கரைசல்
தெவிட்டிய கரைசல் எனப்படும்.
• குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில்
கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல்
தெவிட்டாத கரைசல் ஆகும்.
• குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில்
உள்ள கரைபொருளின் அளவைக் காட்டிலும் அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல் அதி
தெவிட்டிய கரைசல் எனப்படும்.
• முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும்
கரைப்பானில் கரைகிறது.
• முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறாக்
கரைப்பானில் கரைகிறது.
• வெப்பம் கொள் செயல்முறையில்
வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் அதிகரிக்கிறது.
• வெப்பம் உமிழ் செயல்முறையில்
வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.
• நிறை சதவீதம் என்பது, ஒரு கரைசலில் உள்ள
கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் நிறை சதவீதம்
எனப்படும்.