கரைதிறன், நிறை சதவீத மற்றும்
கனஅளவு சதவீத கணக்குகள்.
I. கரைதிறனை
அடிப்படையாகக் கொண்ட கணக்குகள்.
1) 298 K வெப்பநிலையில்
15 கி நீரில், 1.5 கி கரைபொருளை
கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதே வெப்ப நிலையில் கரைபொருளின்
கரைதிறனைக் கண்டறிக
தீர்வு :
கரைப்பானின் நிறை = 15 கி
கரைபொருளின் நிறை = 1.5 கி
கரைபொருளின் கரைதிறன் = [கரைபொருளின் நிறை /
கரைப்பானின் நிறை] × 100
கரைபொருளின் கரைதிறன் = [1.5 / 15] × 100
= 10 கி
2) 303 K வெப்பநிலையில்
60 கி நீரில் எவ்வளவு நிறையுள்ள பொட்டாசியம் குளோரைடு
கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும்? அதே வெப்பநிலையில்
பொட்டாசியம் குளோரைடின் கரைதிறன் 37/100 எனக்
கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்வு :
100 கி நீரில்
கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்கத் தேவையான பொட்டாசியம் குளோரைடின் நிறை = 37கி
60 கி நீரில் கரைந்து
தெவிட்டிய கரைசலை உருவாக்கத் தேவைப்படும் = 37 / 100 × 60
பொட்டாசியம் குளோரைடின் நிறை
= 22.2 கி
3) 30 °C வெப்பநிலையில்
50கி நீரில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்கத் தேவையான
சோடியம் குளோரைடின் நிறை என்ன? 30°C வெப்பநிலையில் சோடியம்
குளோரைடின் கரைதிறன் 36 கி.
தீர்வு :
30 °C வெப்பநிலையில்,
100 கி நீரில் கரையும் சோடியம் குளோரைடு = 36
கி
ஃ 100 கி நீரில் தெவிட்டிய கரைசலை உருவாக்கத்
தேவையான சோடியம் குளோரைடின் நிறை = 36 கி
ஃ 50 கி நீரில் தெவிட்டிய கரைசலை உருவாக்கத்
தேவைப்படும் சோடியம் குளோரைடின் நிறை = [36 × 50] / 100 = 18
கி
4) 50°C மற்றும் 30°C
வெப்பநிலையில் சோடியம் நைட்ரேட்டின் கரைதிறன் முறையே 14 கி மற்றும் 96 கி. 50 கி
நீரில் உருவான தெவிட்டியக் கரைசலை 50°Cல் இருந்து 30°C
வெப்பநிலைக்கு குளிரூட்டும் போது கரைசலில் இருந்து வெளியேற்றப்படும்
அல்லது வீழ்படிவாகும் சோடியம் நைட்ரேட் உப்பின் நிறையைக் காண்க.
தீர்வு:
50°C வெப்பநிலையில் 100 கி நீரில் கரையும் சோடியம் நைட்ரேட்டின் நிறை 114
கி
ஃ 50°C வெப்பநிலையில் 50
கி நீரில் கரையும் சோடியம் நைட்ரேட்டின் நிறை = [114 × 50] / 100
= 57 கி
அதே போல் 30°C வெப்பநிலையில் 50 கி நீரில் கரையும் சோடியம் நைட்ரேட்டின் நிறை = [96 × 50] / 100
= 48 கி
50 °C ல் இருந்து 30
°C வெப்பநிலைக்கு குளிரூட்டும் போது 50 கி
நீரைக் கொண்டு உருவான தெவிட்டிய கரைசலில் இருந்து வெளியேற்றப்படும் அல்லது
வீழ்படிவாகும் சோடியம் நைட்ரேட்டின் நிறை =
57 - 48 = 9 கி
II. நிறை சதவீதத்தை
அடிப்படையாகக் கொண்ட கணக்குகள்.
1) 100 கி நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன்
கரைபொருளின், நிறை சதவீதத்தைக் காண்க.
தீர்வு:
கரைபொருளின் நிறை = 25 கி
கரைப்பானின் நிறை = 100 கி
= 20%
2) 25°C வெப்பநிலையில்
100 கி நீரில், 16 கி சோடியம்
ஹைட்ராக்ஸைடு கரைக்கப்படுகிறது. கரைபொருள் மற்றும் கரைப்பானின் நிறை சதவீதத்தைக்
காண்க.
தீர்வு :
கரைபொருளின் நிறை (NaOH) = 16கி
கரைப்பானின் நிறை (H2O) = 100 கி
(i) கரைபொருளின் நிறை சதவீதம்
நிறை சதவீதம் = கரைபொருளின் நிறை / (கரைபொருளின் நிறை
+ கரைப்பானின் நிறை) × 100
கரைபொருளின் நிறை சதவீதம் = 13.79%
(ii) கரைப்பானின் நிறை சதவீதம்
= 100 - (கரைபொருளின்
நிறை சதவீதம்)
= 100 - 13.79 = 86.21%
3) 500கி கரைசலில் 10%
(w/w); யூரியா நீர்க் கரைசலைப் பெறத் தேவையான யூரியாவின் நிறையை
கணக்கிடுக.
தீர்வு :
தேவையான யூரியாவின் நிறை = 50 கி
(iii) கன அளவு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்குகள்.
1) 35 மி.லி
மெத்தனால் 65 மி.லி நீருடன் சேர்க்கப்பட்டு ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது.
கரைசலின் கனஅளவு சதவீதத்தைக் காண்க.
தீர்வு :
மெத்தனாலின் கனஅளவு = 35 மி.லி
நீரின் கனஅளவு = 65 மி.லி
= 35%
2) 200 மி.லி,
20% (v/v) எத்தனால் - நீர்க்கரைசலில் உள்ள
எத்தனாலின் கன அளவைக் கணக்கிடுக.
தீர்வு :
எத்தனால் நீர்க்கரைசலின் கனஅளவு = 200 மி.லி
கனஅளவு சதவீதம் = 20%
கன அளவு சதவீதம் = [கரைபொருளின் கன
அளவு / கரைசலின் கனஅளவு] × 100
20 = [எத்தனாலின்
கனஅளவு / 200] × 100
எத்தனாலின் கனஅளவு = [20 × 200] / 100 = 40 மி.லி