Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

   Posted On :  31.07.2023 01:02 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன. ❖ காடு அழிப்பு, காடு வளர்ப்பு மற்றும் காடு மீள் வளர்ப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளல். ❖ அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்களைப் பட்டியலிடுதல். ❖ வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளல். ❖ சிவப்பு தரவுப்புத்தகம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து அறிந்துகொள்ளல். ❖ மக்கள் பல்லுயிர் பதிவேட்டின் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுதல் ❖ விலங்கு நல அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளல்.

அலகு 22

தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்



 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன.

காடு அழிப்பு, காடு வளர்ப்பு மற்றும் காடு மீள் வளர்ப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளல்.

அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்களைப் பட்டியலிடுதல்.

வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளல்.

சிவப்பு தரவுப்புத்தகம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து அறிந்துகொள்ளல்.

மக்கள் பல்லுயிர் பதிவேட்டின் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுதல்

விலங்கு நல அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளல்.




அறிமுகம்

நமது பூமிக்கோள் பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கு சிற்றினங்களால் நிறைந்துள்ளது. அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, பூமியில் 70-100 இலட்சம் சிற்றினங்கள் காணப்படுகின்றன. இந்த சிற்றினங்களின் தொகுப்பே மொத்தத் வகையான உயிரினங்களின் பன்முகத்தன்மை என்று அழைக்கப்படுகிறது. 'உயிரி' என்பது உயிரினம் என்றும், பண்முகத்தன்மை' என்பது பல்வேறு அல்லது வேறுபட்டது என்றும் பொருள்படும். எனவே, உயிரினங்களின் பன்முகத்தன்மை என்பது பூமியில் காணப்படும் பல்வேறு உயிரினங்களையும், அவற்றிற்கிடையே காணப்படும் அத்தியாவசியமான தொடர்பையும் குறிக்கிறது. மலைப் பகுதிகளில் உள்ள காடுகளின் வழியே பயணிக்கும்போது, பல்வேறு வகையான உயிர் வகைகளை நீங்கள் காணலாம். காடுகள் கனிதரும் மரங்களாலும், மலர்களாலும் நிறைந்திருப்பதோடு, பாடும் பறவைகள், துள்ளிக் குதிக்கும்மான்கள் மற்றும் பல விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளன. வனவிலங்குகளால் நிறைந்த காடுகளால் இந்தியா முற்றிலுமாக நிறைந்துள்ளது என்று பல்வேறு காலத்தைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக, அன்று முதல் இன்று வரை பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் காணப்படுகிறது. சமீப காலங்களில், இயற்கை வளமாகிய காடுகளின் பரப்பளவு மிகவும் குறைந்து வருகிறது. இப்பாடத்தில், காடுகள் அழிப்பு, அழியும் தருவாயில் உள்ள சிற்றினங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் பற்றி கற்க இருக்கிறோம்.

Tags : Chapter 22 | 8th Science அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals : Conservation of Plants and Animals Chapter 22 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் - அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்