Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam

   Posted On :  16.08.2023 09:18 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 4

கேடில் விழுச்செல்வம்

 

 

நம்மை அளப்போம்

 

பலவுள் தெரிக

1. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ---------- என்பதாகும்

) நூல்

) ஓலை

) எழுத்தாணி

) தாள்

[விடை : ) நூல்]

 

2. சரியான விடையைத் தேர்க.

) கல்வி அழகே அழகு - 1. தொல்காப்பியச் சிறப்புப்பாயிர உரைப்பாடல்

) இளமையில் கல் - 2. திருமந்திரம்

) துணையாய் வருவது தூயநற்கல்வி - 3. ஆத்திசூடி

) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் - 4. திருக்குறள்

5. நாலடியார்

i) -2, -3, -4, -1

ii) -3, -4, -1, -2

iii) -5, -3, -2, -1

iv) -4, -1, -2, -5

[விடை: iii) -5 -3 -2 -1)

 

3. 9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல்

) நற்றிணை

) குறுந்தொகை

) அகநானூறு

) ஐங்குறுநூறு

[விடை : ) நற்றிணை]

 

4. தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை

) 9

) 3

) 27

) 13

[விடை : ) 27]

 

5. நிழல்போலத் தொடர்ந்தான் - இது எவ்வகை உவமை?

) வினை

) பயன்

) வடிவம்

) உரு

[விடை: ) உரு]

 

குறுவினா

1. சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?

விடை :

சங்ககாலத் தமிழகத்தில் தமிழ்மொழியானது

 ஆட்சி மொழியாக,

பயிற்று மொழியாக,

இலக்கிய மொழியாக.

கல்வி மொழியாக

சமய மொழியாக,

வணிக மொழியாக

எல்லாத்துறைகளின் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது.

 

2. .வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.

விடை

தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் கல்வி உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமை ஆகும்.

 திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைப்புலவராக விளங்கியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

 மீனாட்சி சுந்தரனாரிடம் தமிழ்த்தாத்தா .வே.சாமிநாதர் உயர்நிலைக்கல்வி முறையில் பாடம் பயின்றார்.

 

3. இங்கே, ஐம்பதாண்டு வேம்பு

கோடையில் கொட்டும் பூக்களை

எண்ணச் சொல்கிறார்கள் - எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?

விடை

எண்ணச் சொல்கிறவர்கள் இயற்கைச்சூழலோடு கற்பித்துக் கொடுக்கும் பிள்ளைக் கூட ஆசிரியர்கள்.

சொந்தமொழி கற்பிக்கும் பிள்ளைக் கூடத்தில் படிக்க விரும்பும் பிள்ளைகள் எண்ணுபவர்கள் ஆவர்,

 

4. கொழுஞ்சோறு - புணர்ச்சி விதி கூறுக.

விடை

கொழுஞ்சோறு = கொழுமை + சோறு

விதி : 'ஈறுபோதல்' எனும் விதிப்படி, மை விகுதி கெட்டு கொழு + சோறு என்றானது.

விதி : 'இளமிகல்எனும் விதிப்படி, கொழுஞ்சோறு எனப் புணர்ந்தது.

 

5. உவமை, உருவகம் - வேறுபடுத்துக.

விடை

உவமை ஒன்றை மற்றொன்றோடு ஒப்புமை தோன்றக் கூறுவது உவமையாகும். உவமை முன்னரும் உவமேயம் பின்னரும் வரும். .கா: மலர்க்கண்.

உருவகம் :

உவமையினையும், உவமேயத்தையும் வேறுபடுத்தாமல் ஒன்றே எனக் கூறுதல் உருவகமாகும். உவமேயம் முன்னரும் உவமை பின்னரும் வரும். .கா: கண்மலர்.

 

சிறுவினா

1. தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.

விடை

பண்டைத்தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை ஓதற்பிரிவு குறிக்கிறது.

எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம் தோன்றும் என்கிறது.

தொல்காப்பியமும் நன்னூலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்துள்ளன.

'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' (புறம்- 183) என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் அடிகள் கூறுகிறது.

பொருள் கொடுத்தும், தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கற்றதை நெடுஞ்செழியனின் பாடல் அடிகள் குறிக்கின்றன.

சங்க காலத்தவர் குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பினைப் பெறக் கல்வி தேவை என மக்கள் உணர்ந்தனர்.

 

2. சமணப் பள்ளிகளும் பெண்கல்வியும் - குறிப்பு வரைக.

விடை

சமணப் பள்ளிகளின் தலையாய அறங்கள்:

கல்வி உணவு மருந்து அடைக்கலம் என்னும் நான்கும் சமணத்தின் கொடைகள் ஆகும்.

சமணத் துறவிகளின் தொண்டு:

சமணம் சார்ந்த திகம்பரத் துறவிகள் மலைக் குகையில் தங்கினர்.

தங்குமிடங்களிலேயே கல்வியையும், சமணக் கருத்துகளையும் மாணவர்க்குக் கற்பித்தனர்.

பள்ளி எனப்படும் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் என்றாயிற்று.

பள்ளி என்னும் சொல் சமணப் பௌத்த சமயங்களின் கொடையாகும்.

பெண்கல்வி:

வந்தவாசி - வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.

பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவினார்.

பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள், பெண்பள்ளிகள் என்றழைக்கப்பட்டன.

 

3. "ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யார்டுளார்ந்தனள் கொல்"-இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

விடை

இடம்:

நற்றிணையில் பாலைத் திணையில் புலவர் போதனார் இயற்றிய 110வது பாடல்,

பொருள்:

திருமணம் முடிந்து, கணவர் வீட்டில்வசிக்கும் தலைவியைக் காணச் சென்ற செவிலி, நற்றாயிடம் மகளானவள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதை வியந்து கூறுதல்.

விளக்கம்:

தலைவியானவள் இளம்பருவத்தில் தேன் கலந்த இனிய பால் உணவினை, உண்ண மறுத்துப் பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள். செவிலித்தாயானவள் அவளைப் பின்தொடா முடியாமல் தளர்ந்து நிற்பர். இப்படிப்பட்ட விளையாட்டுப் பெண் இன்று திருமணம் முடிந்து தலைவன் வீட்டில் வறுமையற்ற நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி எண்ணாமல், ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்ணும் வன்மையைப் பெற்றிருக்கிறாள். இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து நற்றாயிடம் செவிலி கூறினாள்.

 

4. சின்னதொரு துண்டைத்

திரும்பத் திரும்பக் கட்டி

அழகு பார்க்கிறாள் செல்ல மகள்

முந்தானையை இழுத்துப் போர்த்திக்

கொள்கிறாள்

ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது

துண்டைக் கட்டிக்கொண்டு தாயாகவும்

மாறிக்கொள்ள முடிகிறது அவளால்.

துண்டு ஒன்றுதான்...

அதுவே அவளது மகிழ்ச்சியும்

என் துக்கமும்

- இப்புதுக்கவிதையில் வெளிப்படும் கருத்தை ஆராய்ந்து எழுதுக.

விடை

சிறுமி ஒருத்தி சிறிய துண்டு ஒன்றினைத் திரும்பத் திரும்பக் கட்டி அழகு பார்க்கிறாள்.

அதே துண்டு அவள் கண்களுக்குப் படவையாக மாறுகிறது. முந்தானையை இழுத்துத் தன் உடலைப் போர்த்திக் கொள்கிறாள். துண்டு அவளைத் தாயாகவே மாற்றிவிடுகிறது.

நாள்தோறும் தன் அன்னையின் செயலைக் கண்ட காட்சியின் விளைவே இது.

அச்சிறுமி அமரும் ஒரு சிறிய நாற்காலி அவளது வீடாகவே மாறிவிடுகிறது.

இது அக்குழந்தைக்குப் பெருமகிழ்ச்சிதருகிறது.

ஆனால் இதைக் காணும் சிறுமியின் தந்தைக்கு வருத்தமே.

 காரணம் எதிர்காலத்தில் மணம் முடிந்து. தன்னைப் பிரிய போகிறாள்.

 அதற்கான முன்னோட்டமே இப்பொழுது தன் கண் முன்னால் நிகழ்கிறது என தந்தை எண்ணுகிறார்.

 

5. உள்ளுறை உவமை, இறைச்சி - எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக,

விடை

உள்ளுறை உவமை:

கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அசுமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்களின் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமை என்பர்.

சான்று:

ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த

குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை

தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்

பாம்புமதன் அழியும் பானாட் கங்குலி' - பெருங்குன்றூர்க்கிழார் (அகம் 8)

பாடல் பொருள்:

தலைவன் பிறர் அறியாமல், தலைவியைச் சந்திக்க இரவில் வருகிறான். அவ்வேளையில் பசியுடன் அலையும் கரடியொன்று, ஈசல்கள் நிறைந்த பற்றில் கையைவிட்டுப் பார்க்கிறது. அந்தப் புற்றில் சுருண்டு படுத்திருந்த பாம்பினைக் கரடி அறியவில்லை. கரடியின் நகங்கள் பட்டு, பாம்பு வலியால் துடிக்கிறது.

உட்பொருள்;

இரவுநேரத்தில் காட்டைக் கடந்து வரும் தலைவன் செயலால் அஞ்சிவருந்துவதை இப்பாடல் உள்ளுறையாகத் தெரிவிக்கிறது. கரடி தலைவனுக்கும், பாம்பு தலைவிக்கும் குறியீடுகளாய் அமைந்து உள்ளுறை உவமம் உருவாகி உள்ளது.

இறைச்சி:

 உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.

 தெரியாதபொருள் ஒன்றைத் தெளிவாக விளக்குவதற்குத்தெரிந்த பொருளை உவமையாக்குவர். வெளிப்படையாகப் பொருள் கூறினால் உவமை.

உவமைக்குள் மற்றொர பொருளைக் குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை.

குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருக்குமானால் அது இறைச்சி.

சான்று:

'நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்

.............

அன்பின் தோழிஅவர் சென்ற ஆறே' - குறுந்தொகை (37)

பாடல் பொருள்:

தலைவன் விரைவில் வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள். தலைவன் செல்லும் வழியில் ஆண்யானை தன் பெண்யானையின் பசியைப் போக்க, யா - மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும்.

இறைச்சிப் பொருள்:

தலைவன் வரும் வழியில் ஆண்யானையின் அன்புக்காட்சியைப் பார்ப்பான். உடனே திரும்பி வந்து தலைவியின் ஆற்றாமையைத் தீர்ப்பான் என்பது குறிப்புப் பொருள். இக்குறிப்புப் பொருளே இறைச்சி.

 

நெடுவினா

1. பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்விமுறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.

விடை

சமண மதத்தின் கல்வி முறை:

கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடைகளும் சமணத்தின் தலையாய அறமாகும்.

சமண மதத்தைச் சேர்ந்த திகம்பாத் துறவிகள் மலைக்குகையில் தங்கிக் கல்வியையும் சமணக் கருத்துகளையும் மாணவர்களுக்குப் போதித்தனர்.

பள்ளி எனப் பொருள்படும் படுக்கைகளின் மீது அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என்றாயிற்று.

 பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும்.

 வந்தவாசி - வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.

 பட்டினக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவினார். பெண்களுக்கெனக் கற்பிக்கும் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்றழைக்கப்பட்டன.

 பட்டி மண்டபம் என்ற கலைவடிவம் சமயத் துறையிலிருந்துதான் தோன்றியது. பட்டி மண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடம் என மணிமேகலை பேசுகிறது.

மரபுவழிக் கல்வி முறை:

 மரபுவழிக் கல்வி முறையில் மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி, அவருடன் பல ஆண்டுகள் தங்கி, அவருக்குத் தேவைப்படும் பணிகளைச் செய்து கல்வி கற்றனர்.

செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்னும் அடிப்படையில் மரபுவழிக் கல்வி முறை அமைந்திருந்தது.

திண்ணைப்பள்ளிகள் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிராமங்கள்தோறும் தோன்றின.

திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களை கணக்காயர்கள் என்றனர்.

திண்ணைப் பள்ளிக் கல்வி அமைப்புகளை ஆங்கிலேயர் நாட்டுக்கல்வி என்று அழைத்தனர்.

இப்பள்ளிகளில் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும் முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப்படியே அமைந்திருந்தன.

 உயர்நிலைக் கல்வி முறை தளிநிலையில் புலவர்களிடத்துக் கல்வி கற்றனர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் .வே.சா பாடம் பயின்ற முறை இதுவாகும்.

 மேற்கூறிய கல்வி முறைகள் தமிழகத்தில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தின.

 

2. தலைவியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறுவன யாவை?

விடை

தலைவிக்குச் செவிலித்தாய் உணவு ஊட்டல்:

பிரசம் கலந்த வெளர்சுவைத்தீம்பாலி"

தலைவியின் வீட்டில் தேன்கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டுச் செவிலியர் ஒரு கையில் ஏந்தி, தலைவியை உண்ண வைப்பதற்கு இன்னொரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறுகோல் வைத்திருப்பர். வீட்டு முற்றத்தில் பந்தரின் கீழ் இதை உண்பாயாக எனச் செல்லமாக கோலால் அடித்து வேண்டுவர்.

தலைவி உண்ண மறுத்தல்:

தலைவியோ நான் உண்ணேன் என மறுத்து முத்துப்பரல்கள் நிறைந்த பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள். செவிலியர் அவளைப் பிள்தொடா முடியாமல் நடை தளர்வர்.

புகுந்த வீட்டில் தலைவியின் செயல்பாடு கண்டு செவிலித்தாய் வியத்தல்:

"அறிவும் ஒழுக்கமும் யாண்டுணார்ந்தனர் கொல்"

தலைவி எப்படி இப்போது இத்தகைய அறிவையும், இல்லற நடைமுறையையும் சுற்றாள் என்று செவிலி ஆச்சிரியப்படுகிறாள். தலைவி தான் மணங்கொண்ட தலைவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும் தலைவி, தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினை நினைத்துப் பார்க்கவில்லை. ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பது போல ஒரு பொழுது இடைவெளி விட்டு ஒரு பொழுது மட்டும் உணவு உண்ணும் வண்மை பெற்றிருக்கிறாள். இது மாபெரும் வியப்பு

செவிலிக்கூற்று:

இக்கூற்று திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த நற்றாயிடம் மகளானவள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதாகச் சொல்லி இத்தகைய அறிவை, இல்லற நடைமுறையை எப்படிக் கற்றாள் என்று வியந்து கூறினாளாம் செவிலி.

 

3. பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன் யாவை?

விடை

முன்னுரை:

மகாகவி என்ற பேரொளியில் பல பரிமாணங்கள் மறைந்துள்ளன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பாரதியின் பரிமாணங்கள்:

பாரதி சுவிஞர் மட்டுமல்லர். சிறந்த பேச்சாளர்: பாடகர்; கட்டுரையாளர்; கதை ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் அறிஞர்; ஆன்மீகவாதி; இவை அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த இதழாளர்.

உதவி ஆசிரியர் பணி

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியினின்று விலகி, சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராப் பொறுப்பேற்றார்.

இதழியல் துறை;

இதழியல் துறையில் சாதாரணமாகச் சேர்ந்து, அசாதாரணங்கள் பல நிகழ்த்தினார். சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி விஜயா, சூர்யோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பங்காற்றினார்.

பாரதியின் படைப்பு:

சர்வஜன மித்திரன், ஞானபாநு, காமன் வில், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம் போன்ற இதழ்களிலும் தம் படைப்புகளை வெளியிட்டார்.

பாரதியின் புனைபெயர்கள்:

இளசை சுப்ரமணியன், சி.சு. பாரதி, சாவித்ரி, ஷெல்லிதாசன், செல்லம்மா போன்ற இன்னும் பல புளைபெயர்களில் எழுதினார் பாரதி.

புனைபெயரில் எழுதக் காரணம்:

தனக்கும் தனது நண்பர்களுக்கும் ஆங்கிலேயரால் எந்தக் கெடுபிடியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாரதியின் இதழியல் அறத்தின் காரணமாக மற்றவர்களின் பெயரை வெளிப்படுத்தவில்லை.

கருத்துப்படம்:

அக்காலத்திலேயே கருத்துப்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் பாரதிவெளியிட்டுள்ளார். தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. தமிழில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட சித்ராவளி என்ற இதழை நடத்த விரும்பியவர்.

இதழில் பங்கு:

தம் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர் பாரதி. அவரது பேச்சும் மூச்சும் தமிழ் வளர்ச்சியாகவே இருந்தது. சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளயில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் இந்தியா இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது.

மகுடமிடல்:

செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதிக் கீழே தமிழில் தலைப்பிடுவது அக்கால வழக்கம். தலைப்பிடலை மகுடமிடல் என்பார் பாரதி. 1905-07 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பைப் பயன்படுத்திய பாரதி பின்பு அதைக் கைவிட்டதோடு சுதேசமித்திரனில் அதைச் சாடினார்.

இறுதியாக:

எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பாரதி தன் இதழியல் பணியைக் கைவிடவில்லை. பாரதியின் இதழ்கள் எல்லாம் இன்றைக்கு நூலாக்கம் பெற்றுள்ளன. இவையெல்லாம் தமிழினத்தின் பேறு. தமிழரின் அடையாளம்.

 


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்:


ஜியு, போப்

செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு. போப் 1839 ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைந்த போப், 'சாந்தோம்' என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் ஜி.யு.போப் தமிழரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் (1880-1906) பயிலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி.யு, போப் ஆவார்.


கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.

1. இலக்கணக் குறிப்பத் தருக. ) பிறந்தார் ) அருளிய

விடை

) பிறந்தார் - பலர்பால் வினைமுற்று;

) அருளிய - பெயரெச்சம்

 

2. திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு, போப். விடைக்கேற்ற வினாவை எழுதுக.

விடை

திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

 

3. பதிப்பித்தார் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

விடை

பதிப்பித்தார் - பதிப்பி + த் + த் + ஆர்

பதிப்பி - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

 

4. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனளிக்கு மென்றும் போப் கருதினார்.

விடை

பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனணிக்கு மென்றும் போப் கருதினார்.

 

5. பொருத்துக.

) தொல்காப்பியம் - i) சங்க நூல்

) திருக்குறள் - ii) பக்தி நூல்

) புறநானூறு - iii) அற நூல்

) திருவாசகம் - iv) இலக்கணா நூல்

விடை :

) தொல்காப்பியம் - iv) இலக்கணா நூல்

) திருக்குறள் - iii) அற நூல்

) புறநானூறு - i) சங்க நூல்

) திருவாசகம் - ii) பக்தி நூல்

 

செய்திக்குக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை மொழிபெயர்ப்புப் பகுதியிலிருந்து கண்டறிந்து எழுதுக.

The Chinese have no religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious educators. In China and in India they believe in metempsychosis. The Chinese and Indians draw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterization. The Chinese practice astronomy but the Indians practice this science still more.

Written by Abu Zayd Al Sirafi, traveler, 10th century.

- Foreign notices of South India by K.A. Neelakanda sastri

சீனாவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை. இந்தியாவின் மதத்தை (பௌத்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்றும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பின்னான மறுபிறப்பை நம்புகின்றனர். ஒரே மத கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவமும், தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமாகச் சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். 'தீய்த்தல்' அவர்களது பிரதான சிகிச்சை முறை. சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த அறிவியலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துன்றனர்.

Religion - சமயம்;

Medicine - மருத்துவம்;

Philosophy - தத்துவம்;

Science - அறிவியல்;

Idols - சிலைகள்.

 

கீழ்க்காணும் பத்தியில் உள்ள உருவகங்களையும் உவமைகளையும் பட்டியலிடுக. உருவகங்களை உவமைகளாக மாற்றுக. உவமைகளை எவ்வகை உவமைகள் என்று எழுதுக.

விழிச்சுடர் வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளது எண்ணவலையில் மின்னல்களைப் போன்ற சொற்கள் தோன்றி மறைந்தன. அடுக்கிவைக்கப்படாத புத்தகங்களைப் போலக் குழம்பிய எண்ணங்களை ஒழுங்குபடுத்த நினைத்தாள். நேரம் நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது. அண்ணாந்து பார்த்தாள். நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற வானம் அம்மாவை நினைவூட்டியது. பூனைக்குட்டியைப்போல அம்மாவின் முந்தானைக்குள் சுருண்டுக்கொள்ள நினைத்தாள். பூனைக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டதைப்போல அம்மாவின் கதகதப்பை உணர்ந்தாள். பசிக்கயிற்றால் சுண்டிவிடப்பட்டவள், பூட்டியிருந்த வீட்டுக்கதவின் மேல் சாய்ந்தபடி அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்க தொடங்கினாள்.

விடை

உவமைகள்

மின்னல்களைப் போன்ற, நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற, புத்தகங்களைப் போல, பூனைக்குட்டியைப்போல, நத்தையைப் போல, வைத்துக்கொண்டதைப் போல.


 

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.

கல்வி என்றால் என்ன? அது நூல்களைப் படிப்பதா? அல்லது அது பலவகையானதைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின் மூலம் மனத்தின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்தும். பயிற்சி. கல்வியின் நோக்கம் செய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கமே மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்பாடே கல்வியின் அடிப்படை.

எல்லோரும் தங்கள் அறிவு, வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைத் திறப்பதற்கு இதுவொன்றே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன் ஒரு தவற்றையும் செய்ய மாட்டான்.

மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது. இதைப் பொறுத்துத்தான் அமைகிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான். மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமையை நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (சுவாமி விவேகானந்தர் - கல்வி)

விடை

கொடுக்கப்பட்ட பத்தியின் சொற்கள் – 133

சுருக்கிய பத்தியின் சொற்கள் - 50

மூன்றில் ஒரு பங்கு - 133/344

தலைப்பு: கல்வியின் அடிப்படை

கல்வி என்பது படிப்பதோ, பல்வகை அறிவோ இல்லை. பயிற்சி, ஆற்றல் மற்றும் வெளிப்பாடு மூலம் பயன்தருவது கல்வி. கல்வி வளர்ச்சி என்பது அறிவைச் சேமிப்பதன்று. மனதை ஒருமுகப்படுத்துவதே ஆகும். இதுவே, எல்லார்க்கும் தேவையானது. மனதை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவு, வளரும். அறிவுச்சுடரைத் திறக்க இது சிறந்த வழி. மனிதன் தன் சக்தியை எழுபது விழுக்காடு வீணாக்குவதால் தவறு செய்கிறான். பண்புடையவன் தவறு செய்வதில்லை. விலங்கினின்று வேறுபடவும், இசை முதலான நுண்கலைத் தேர்ச்சிக்கும் ஒருமைப்பாடே காரணம். உலகப் பதிர்களின் திறவுகோல் மனவலிமையே. இவ்வலிமைக்கும் அடிப்படை கல்வியாகும்.

 

இலக்கிய நயம் பாராட்டுக.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்னுக்குள்ளே சிலமூடர் - நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி

காட்சி கெடுத்திட லாமோ?

பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்

பேதமை யற்றிடும் காணீர்

- பாரதியார்

விடை

தலைப்பு : பெண்ணின் பெருமை

திரண்ட கருத்து:

புவியைப் படைத்து. புவி மக்களைப் பாதுகாக்கும் ஈசன் பெண்ணுக்கு அறிவை அளித்தான். இம்மண்ணில் வாழும் அறிவில்லாத சில மூடர்கள் பெண்களின் அறிவை வளரவிடாமல் செய்கின்றனர். இரண்டு கண்களில் ஒன்றை மட்டும் குருடாக்கிக் காட்சியைக் காணமுடியாமல் செய்யலாமோ? பெர்களின் அறிவை வளரச் செய்தால் இவ்வுலகம் வேற்றுமை தவிர்ந்து ஒன்றுபடும்.

மோனை நயம்:

இசைக்கு வேண்டும் வீணை

செய்யுளுக்கு வேண்டும் மோனை

பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

சான்று: கண்கள் - காட்சி; பெண்கள் - பேதமை

எதுகை நயம்:

பெண்களுக்கு வளைக்கை அழகு

பாட்டுக்கு எதுகை அழகு

பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

சான்று: பெண்ணுக்கு - மண்ணுக்குள்

அணி நயம்:

பெண்களின் அறிவினை வளரச் செய்தால் இவ்வுலகம் வேற்றுமை தவிர்ந்து ஒற்றுமையின் பாற்படும் - என்று உயர்வாகக் கூறப்படுவதால் உயர்வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது.

கற்பனை நயம்:

இரண்டு கண்களில் இரண்டினில் ஒன்றை மட்டும் குருடாக்கிக் காட்சியைக் காண முடியாமல் செய்வது ஆகுமோ. .. என்னும் இடங்களில் கற்பனை நயம் மிளிர்கிறது.

 

 

மொழியோடு விளையாடு

 

எண்ணங்களை எழுத்தாக்குக.


விடை

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்யவும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் வேண்டும்'

என்ற புதுமைப் பெண்ணைப் படைத்தவன் பாரதி. பாரதியின் கனவு இன்று நடத்தேறிவிட்டது. பெண்கள் விமானிகளாக உலகை வலம் வருகின்றனர். பெண்கள் விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைப் படைக்கின்றனர். பெண்கள் முப்படைகளில் சேர்ந்து பலம் சேர்க்கின்றனர். பெண்கள் காவல்துறையில் கண்ணியம் காக்கின்றனர். பெண்கள் மருத்துவத் துறையில் விந்தை புரிகின்றனர். பெண்கள் திரைப்படத் துறையில் இயக்குநர் சிகரம் ஆகின்றனர். இசை, ஓவியம். தையல், கணினி, போன்றவற்றில் விற்பன்னராகின்றனர். பெண்கள்  விளையாட்டுத் துறையில் வீரம் விளைவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலில் கால்பதித்து பிறநாடுகளோடு நல்லுறவு, தூதர்களாகவும் ஈடுபடுகின்றனர்.

வியப்பு! ஆச்சர்யம்! அற்புதம்! அதுவே பெண்மை!

 

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடிக்க.


விடை

மறைந்திருக்கும் சொற்கள்

கோத்தாரி, கல்லாடனார், மதரஸா, இலக்கணம், பனுவல், கணக்காயன், சுவடி, பொத்தகம், விஜயா, பால்பாரதி, பட்டிமண்டபம், பிரசம், பொதி, மன்றம், பாரதியார், மாயா, திண்ணைப்பள்ளி, மாண்பு, வேடல், சமணம், போதனார், பௌத்தம், புவி, பிள்ளைக்கூடம், நற்றிணை.

 

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

.கா: கால்நடை

- கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிக் கொண்டு போனார்கள்.

- சிறிய தொலைவைக் கடக்கக் கால் நடையாகச் செல்வது உடலுக்கு நலம் பயக்கும்.

1. பிண்ணாக்கு: எண்ணொய் வித்துகளிலிருந்து கிடைக்கும்

பிண்ணாக்கு: மாடுகளுக்கு நல்ல தீவனம்.

பிள் நாக்கு (பிளவுபட்ட நாக்கு): பாம்புகள் (பிளவுப்பட்ட) பிள்நாக்கு உடையவை.

2. எட்டுவரை (எட்டு மலைகள்): ஒன்றுமுதல் எட்டுவரை எண்னுக.

எளிதுவரை: புன்செய் நிலங்களில் எள் துவரை விளைவிக்கப்படும்.

3. அறிவில்லாதவன்: அறிவில்லாதவன் அனைத்தும் இருந்தும் ஏதும் இல்லாதவனாவான்.

அறிவில் ஆதவன்: கற்றறிந்தாரைச் சான்றோர் அறிவில் ஆதவன் என்பர்.

4. தங்கை: அண்ணன் தங்கைப் பாசம் அகிலத்தில் புனிதம் நிறைந்தது.

தம் கை: குழந்தைகள் தம் கைகளால் பிசைந்த உணவானது அமிழ்தத்தைவிட மேலானது.

5. வைகை: வைகை என்னும் பொய்யாக் குலக்கொடி என்பார் இளங்கோவடிகள்.

வை கை: அன்னத்தில் வை கை என்றாள் அன்னை.

6. நஞ்சிருக்கும் (நைந்திருக்கும்): ஏழையின் ஆடை நஞ்சிருக்கும்.

நஞ்சு இருக்கும்: வஞ்சகர் நாவில் நஞ்சு இருக்கும்.

 

செய்து கற்போம்

அருகில் உள்ள மாற்றுத்திறனாளர் பள்ளிக்குக் கலப்பயணம் சென்று, அம்மாணவர்கள் கற்கும் முறைகள் குறித்து எழுதுக.

 

நிற்க அதற்குத் தக


கல்வி, நம்மைப் பண்படுத்த வேண்டும். நாம் பண்பட்டிருக்கிறோமா?

விடை


கல்வியின் விளைவு என்ன செய்தீர்கள் / செய்வீர்கள்?

பெரியவர்களுக்கு மதிப்பளித்தல் - பெரியோரைத் துணை கொள்வேன்.

பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தல் - பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும்.

பொறுமையைக் கடைப்பிடித்தல் - பொறுமையே பெருமை தரும்.

தன்னை அறிதல், தன்னம்பிக்கை வளர்த்தல் - தனது உண்மையான நிலையை உணர்ந்தால் உயர்வு கிட்டும்.

சமத்துவம் பேணுதல் - சமத்துவமே மகத்துவம்.

உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் - உயிர்களிடத்து அன்பு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா - பாரதி

 

கலைச்சொல் அறிவோம்

கல்விக்குழு - Education Committee

உள்கட்டமைப்பு - Infrastructure

மூதாதையர் - Ancestor

மதிப்புக்கல்வி - Value Education

செம்மொழி - Classical Language

மன ஆற்றல் - Mental Abilities



Tags : Chapter 4 | 11th Tamil இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam : Questions and Answers Chapter 4 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்