Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall

   Posted On :  16.08.2023 11:50 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8

யாரையும் மதித்து வாழ்

 

நம்மை அளப்போம்

 

பலவுள் தெரிக

1. பூஜை, விஷயம், உபயோகம் - என்பவை முறையே ----- என்று தமிழில் வழங்கப்படும்.

) வழிபாடு, செய்தி, பயன்பாடு

) பயன்பாடு, வழிபாடு, செய்தி

) வழிபாடு, பயன்பாடு, செய்தி

) வழிபாடு, பயன்பாடு, செய்தி

[விடை: ) வழிபாடு, செய்தி, பயன்பாடு]

 

2. கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம்பெற்ற மரபு

) பெயர்மரபு

) வினைமரப்பு

) ஒலிமரபு

) இவை மூன்றும்

[விடை: ) ஒலிமரபு]

 

3. யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? - இது எவர் மொழி?

) வாய்க்கால்

) நாங்கூழ்

) நடராசன்

) புல்

[விடை: ) நடராசன்]

 

4. தமிழின் முதல் பாவடிவ நாடகநூல்

) இரகசியவழி

) மனோன்மணீயம்

) நூல்தொகை விளக்கம்

) திருவிதாங்கூர் அரசர் லரலாறு

[விடை: ) மனோன்மணீயம்]

 

5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.

) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.

) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.

) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.

) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.

[விடை: ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.]

 

குறுவினா

1. ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள - இவ்வடி எதனைக் குறிப்பிடுகிறது?

விடை

நடராசன் நாங்கூழ்ப் புழுவை நோக்கி, மண்ணைப் பக்குவப்படுத்தி பயிர் விளைவிக்கின்றாய். இவ்வுதவியை எண்ணாமல் எறும்பு, முதலிய பூச்சிகள் கடிக்கின்றன. அதிலும் பொறுமை காக்கிறாய்.

 

2. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?

விடை

நாட்டுப்புறம் நாட்டுப்புறங்களில் இருக்கும்போது எல்லாவற்றையும் விழுங்கவல்ல மாபெரும் இயற்கையே சிறந்து விளங்குகின்றது.

பட்டணம் பட்டணங்களில் மனித சமுதாயம்தான் முக்கியமானதாகத் தலைதூக்கி நின்று, மனிதனின் கொடூரத்தன்மை வெளிப்படுகிறது.

 

3.நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கைகளில் நெஞ்சம் படரும்” - தொடை நாயங்களை எடுத்தெழுதுக.

விடை

கைகளில் - முதல் எழுத்து கை-கை (ககரம்) ஒன்றி வந்து மோனைத் தொடை இடம்பெற்றுள்ளது.

கைகளில் - இரண்டாவது எழுத்து - ஒன்றி வந்து எதுகைத் தொடை இடம்பெற்றுள்ளது.

நீளும் நீளாத - எதிர்மறைப் பொருள் தந்து முரண்தொடை காணப்படுகிறது.

தொடரும் படரும் - ஈற்றசை இயைந்து காணப்படுவதால் இயைபுத் தொடை காணப்படுகிறது.

 

4.‘கற்றேன் என்பாய் கற்றாயா?' என்று அப்துலீரகுமான் யாரிடம் எதற்குக் கேட்கிறார்?

விடை

கற்றேன் என்பாய் கற்றாயா என்று அப்துல்ரகுமான் அறியாமை என்னும் மாயையில் வாழ்கின்ற மக்களைப் பார்த்துக் கேட்கிறார்.

வெறும் காகிதத்தைப் படிப்பது மட்டும் கல்வியாகாது என்கிறார்.

 

5. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் - நிறுத்தக்குறியிடுக.

விடை

பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்என்றும், கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கத்தரசிஎன்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.


சிறுவினா

1. இன்குலாப், “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்எனக்கூறுவதன் நயத்தை விளக்குக.

விடை

இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு புல்லையும் ஒவ்வொரு பெயரிட்டு அழைப்பேன்.

பறவைகளோடு பயணித்துச் சுதந்திரமாக எல்லையைக் கடப்பேன்.

பெயர்தெரியாத கல்லையும் மண்ணையும் பெயரிட்டு அழைப்பேன்.

உதவிக்கரம் நீட்டும் கைகளில் நட்பு (தொடரும்) கொள்வேன்.

உதவாத மனிதரிடம் மனத்தளவில் மட்டும் நட்பு இருக்கும்.

உலகம் கடல் போன்றது, தான் அதில் ஒரு துளியாய் இரண்டறக் கலந்திருக்க வேண்டும் என்று இன்குலாப் கூறுகிறார்.

 

2. அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா-விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.

விடை

) கற்றேன் என்பாய் கற்றாயா?

கற்றேன் என்று பெருமையுடன் கூறுகிறாய்.

வெறும் காகிதங்களைப் படிப்பது மட்டும் கல்வி இல்லை.

கற்றதனால் ஆய பயனென்கொல் - என்ற வள்ளுவன் வினாவிற்கு விடையாக இறைவனின் பாதகமலங்களைத் தொழவில்லையெனில் கற்ற கல்வியால் பயனில்லை.

கற்றதற்கேற்ப வாழவேண்டும் என்கிறார்.

) பெற்றேன் என்பாய் பெற்றாயா?

பெற்றுவிட்டேன் எல்லாம் என்று கூறுகிறாய். பிள்ளைகளைப் பெறுவது மட்டும் எல்லாம் பெற்றது ஆகாது.

இல்லற வாழ்வில் நல்லறமும் நல்லோர் வாழ்த்தும் கிட்ட பதினாறு செல்வங்களையும் பெற்றாக வேண்டும் என்கிறார்.

) ஏன் என்பாய் இது கேள்வியில்லை.

ஏன் என்னும் வினாவில் ஒளிந்திருக்கும் உன் இடத்தைத் தேடு என்கிறார் அப்துல் ரகுமான்.

 

3. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?

விடை

மக்களுக்கு உணவினைத் தரும் பயன்பாடு உடைய வாய்க்கால், உலகின் இயக்கத்திற்கு வியக்கக்கூடிய பணியினையும் நல்குகிறது.

கடலை மலையாகவும் மலையைக் கடலாகவும் மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது வாய்க்கால். வாய்க்கால் நீரானது இயற்கையைப் புரட்டிப்போடும் ஆற்றல் உடையது.

கடினமான பரல்கற்களை அரித்து, பொடித்து நுண்மணலாக்கியபின், தன் ஆற்றலாய் அவற்றை எல்லாம் தன்னுடன் இழுத்துச் செல்லும்,

வாய்க்கால் தன்னுடன் மண், கல், புல், பழ முதலானவற்றையும் கவர்ந்து கடலுக்குள் இழுத்துச் சேர்த்து விடுகிறது.

 

4. தாமஸிகம் என்றால் என்ன?

விடை

நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி வாடிவிடும் மலர்களுடன் நமக்குத் தொடர்புஉண்டு.

தோட்டக்காரனின் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும்...

மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும்தான் மலர்களின் வேலையாகும்.

அம்மலர்களால் அவ்வளவுதான் இயலும்.

இதைத்தான் தாமஸிகம் என்கிறோம்.

 

5. இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்துவரிகளில் எழுதுக.

விடை

வேப்பமரத்துடன் ஓர் உரையாடல்

மனிதன் : வேப்பமரமே! நான் பேசுவது உன் காதில் விழுகிறதா? மண்ணில் வளரும் மரங்களில் உன்னை மட்டும் மக்கள் மிகவும் விரும்புகிறார்களே ஏன்?

வேம்பு : கோடைக் காலங்களில் நான் நல்ல நிழலையும் குளிர்ச்சியினையும் தருவதால் என்னை நாடி வருகிறார்கள்.

மனிதன் : நிழல் மட்டும்தானா? வேறு ஏதாவது.

வேம்பு : நிழலோடு நீங்கள் சுவாசிப்பதற்கு உயிர்வளியை அதிக அளவில் தருவது நாங்கள்தான். நீங்கள் விடும் கரியமில வாயுவை உள்ளிழுத்து, உயிர்வளியை வெளிவிடுகிறோம்.

மனிதன் : வேறு ஏதேனும் உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

வேம்பு : வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் பல மருத்துவ குணங்கள் நிறையப் பெற்றது. அதிலிருந்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

மனிதன் : அது மட்டுமா அம்மை வந்தால் வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் தடவினால் விரைவில் குணமாகும் என்று என் பாட்டி சொல்வார்கள்.

வேம்பு : நாங்கள் உங்களுக்கு உதவிகளை செய்துவருகிறோம். எங்களை அழித்துவிட்டு வீட்டுவேலைக்குப் பயன்படுத்துகிறார்களே தவிர எங்களை வளர்ப்பதில் அக்கறைக் காட்டுவதில்லை.

மனிதன் : கவலைப்படாதே! இப்பொழுதே வீட்டிற்கு ஒரு வேப்ப மரம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

வேம்பு : மனிதனாகிய உன்னைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். நானும் உன்னைப் போல் சக மனிதர்களுக்கு என்னால் இயன்ற தொண்டுகளைச் செய்ய என் மனம் விரும்புகிறது.

மனிதன் : மரங்களாகிய நீங்கள் மக்களுக்குச் செய்திடும் உதவிகளைப் போல மனிதர்களால் ஒருபோதும் உதவிட முடியாது. அதனால் உங்களை அதிக அளவில் வளர்க்க சபதம் செய்கிறோம்... நன்றி! சந்திப்போம்!

 

நெடுவினா

1. நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.

விடை

இலக்கு:

தான் ஏற்ற செயலை முடிக்க, அதிகாலையில் ஊர்ப்புறத்தில் தனித்திருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஓர் இலக்குத் தேவை என்பதை நடராசன் உணர்கிறாள். அது. உயிர்க்குத் தூணண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.

புல்லின் செயல்பாடு:

சிறுபுல்லும் பூங்கொத்தை உயர்த்தித் தேனை உணவாக அளிக்கிறது. தன் மலரைக் காயாக்குவதையும், தன் இனம் தழைத்து வளர வேறிடம் சென்று வாழ துரட்டியைக் கொடுத்து வேறிடம் செல்க என அறிவுரை கூறுவதைப் பார்த்து சிந்திக்கிறான்.

புல்லின் செயல்பாடுகளைப் பார்த்து கண்களில் நீர் கசிய நிற்கிறான். அப்போது நடராசன் கூறும் மொழிகளைக் கேட்கும் போது நாமும் சிந்திக்க முடிகிறது.

வாய்க்கால்:

வாய்க்காலில் நீரோடுவதைத்தான் நாம் கண்டிருப்போம். ஆனால் நடராசளின் பார்வைவேறாக உள்ளது. வாய்க்கால், மலையைக் கடலாகவும், கடலை மலையாகவும் மாறுவதை கூறுகிறான். வாய்க்கால் தான் படும் துண்பத்தை எல்லாம் காலத்தச்சனிடம் கூறுவதுபோல் காண்கிறான்.

வாய்க்கால் ஓடி ஓடி உழைப்பதைக் கண்டு அதற்கு ஓய்வு கொடுக்கத் தடுப்பதும், சலசலத்த போது அழாது செல்லுமாறு கூறி விடுத்து, "உன்னைப்போல் அனுதினமும் உழைப்பவர் யார்? உன்னைப்போல் அன்பும் ஊக்கமும் உறுதியும் இருக்குமானால் வேறு என்ன பெருமை உண்டாக முடியும்" எனக் கூறுகிறபோது நமக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது.

நாங்கூழ் புழு:

புல்லின் செயலை, வாய்க்காலின் பெருமை கொண்டு அறிவூட்டிய நடராசன் அடுத்து நாங்கூழ்ப் பழுவைக் கார்கிறான். அற்பப்புழு எனக் கருதக்கூடாது என்பதை, அவன் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது.

உலகில் உயர்தொழில் செய்யும் உழவர்களின் நண்பனாக நாங்கூழ்ப் புழு செயல்படுவதைக் கூறுகிறான். மண்ணைக் காத்து மண்ணில் வாழும் எறும்பு, புழு பூச்சிகள் தரும் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாய் இருக்கும் நிலையை விவரிக்கிறான்.

தனிமொழி விளக்கம்:

தான் செய்யும் பணிக்கு பலன் எதிர்பாராமல் நாங்கூழ் புழு ஒளிந்துகொள்வதாகக் கூறுவது பாராட்டுக்குரிய சொல். ஆறறிவு மனிதன் கற்கவேண்டிய பாடல்கள் இயற்கையில் பரவிக் கிடக்கின்றன. வாழ்நாள் முழுவதும் நாம் எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதைத் தெளிவாக அறிய நடராசன் தனிமொழி துணைபுரிகிறது.

 

2. சிதறிய கடிதங்கள் உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.

விடை

கடிதம் உணர்த்தும் கருத்துகள்:

தாகூரின் சிதறிய கடிதங்கள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகிறது.

ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஆனால் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்று சிந்தித்து தாகூர் தன் கடிதத்தில் கூறுகிறார்.

பத்மாஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு மரம் சாய்ந்தது. மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த பறவை கீழே விழுந்து ஆற்றில் மிதந்து வந்தது என தாகூர் கூறுகிறார்.

பறவையின் அழகு. கூட்டின் அழகு, உழைப்பின் சிறப்பு ஓய்வெடுத்த நிலை அனைத்தையும் சுட்டிக்காட்டி அதை மரணத்தில் முடிக்கிறார்.

மனிதன் தன் சுகத்திற்கு முன் பிற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி நினைப்பதில்லை. மற்ற உயிரினங்களை மிக அற்பமாக நினைக்கின்றான்.

ஒரு பறவையின் சின்னஞ்சிறு வாழ்க்கைக் களிப்பு எத்துனை அளவு இருக்கும் என்பதை தாகூர் சிந்திக்கிறார்.

மரங்களில் மலரும் பூக்கள் உள்ளது. அதன் அனைத்து பெயரும் மனிதனுக்குத் தெரியாது. சங்க இலக்கியத்தின் வாயிலாக மலர்களின் பெயர்களை அறிவோம். தெரிந்துகொள்ள முயலுவதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். அப்பெயருக்குரிய மலர் எதுவென்று தெரியாது.

பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர் ஆறுகளை மட்டும் மனதில் வைத்துள்ளனர்.

நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதருக்கு தொடர்பு உண்டு. நம் மனம் போகப்பொருளுக்கு செல்ல இயலாமல் திகைத்து நின்று விடுகிறது. இதனை 'தாமஸிகம்என்பர்.

உலகில் எத்தனையோ நேர்த்தியா - புட்கள் உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம்.

இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே நம் தோல்விக்குக் காரணம்.

இயற்கையை அலட்சியப்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, இயற்கையை நேசித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உயர முடியும் என்ற கருத்துகளை எல்லாம் தன் சிதறிய கடிதங்கள் வாயிலாகக் கூறுகிறார்.

 

3. நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.

விடை

சோதனையில் சாதனை:

திருநங்கையருக்கு இருக்கும் தடைக்கற்களைப்படிக்கற்களாக மாற்றியதில் நர்த்தகி நடரஜுக்கு பெரும் பங்கு உண்டு. அமெரிக்காவில் இரண்டுவார நிகழ்ச்சியை எதிர்ப்பார்த்து சென்றவர் ஒருநாள் நிகழ்ச்சியாக மாறியதைக் கண்டு மனவேதனையடைந்தார். கண்கலங்கிய நர்த்தகி, கால் சலங்கால் அரங்கை அதிரவைத்தார். கார்போரை வியக்கவைத்தார். இந்த நிகழ்ச்சிதான் அமெரிக்காவில் இருமாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.

நாட்டியம்:

பெண்மையை உணரத்தொடங்கிய குழந்தைப் பருவத்தில் திரைப்பட நடனத்தால் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். ஆடத்தொடங்கிய அடுத்த நொடியே உட்கூறுகளை அறியத் தொடங்கினார். இராகத்தாளத்துடன் கருத்தை அறிமுகம் செய்தார்.

நாட்டியக் கரு:

எதிர்கொள்ளும் பிரச்சனை, விழிப்புணர்வு, தமிழர்களின் கலை பரதம், தமிழ் இலக்கியம் காட்டும் கலை தன் நடனத்தில் கருவாக எடுத்துக்கொண்டு ஆடத் தொடங்கினார்.

உலகை உலா வந்த நிலா:

ஜப்பான் ஒசாகா நகரில் திருவாசக, தேவாரப்பண்களுக்கு தான் நிகழ்த்திய பரத அபிநயங்களை கண்டு கண்கலங்கி மெளனத்தோடு கரவொலி எழுப்பியதைக் கூறி பரதத்தை உலகில் எவராலும் புரிந்து இரசிக்க முடியும் என்றார். நார்வேயில் திருக்குறளை மையப்படுத்தி நிகழ்த்திய நிகழ்ச்சி அனைவரையும் திருக்குறளைக் கற்கத் தூண்டியது. தமிழ்வழிக் கற்று வழக்கறிஞராக வாதாட நினைத்த நர்த்தகி மேடையேறி பல்வேறு இலக்கிய பணிகளைக் கொண்டுவருவதாகக் கூறினார்.

சாதனைகள்:

தன் பரதக்கலைக் கூடம் வாயிலாக பயிலும் மாணவர்கள் என்னை அம்மா என அழைப்பதை எண்ணி கருணையில் கண்ணீர் விட்டதையும் கூறினார். நர்த்தகி எட்டாத உயரங்களை எல்லாம் தொடாமல் விடமாட்டேன் என்று தொட்டுப் பார்த்தார். இன்று மூன்றாம் பாலினம் உருவெடுத்து திருநங்கை என வலம் வரும் நம் உறவுகள் உலகில் பல நிலைகளில் உயர்ந்துள்ளனர் என்பது பெருமைக்குறியதாகும்.

 


மொழியை ஆள்வோம்

 

சான்றோர் சித்திரம்


பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் கவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இளஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளிவீசி எழுங்கள்; எழுங்கள்என்று இளமைவிருந்து நூலில் தமிழினைச் செழுமையுறச்செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி..

திரு.வி.. தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்விபயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேலர் என்பவரிடம் தமிழ் படித்தார். பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார். 'தமிழ்த்தென்றல்' என்று அழைக்கப்படும் திரு.வி.. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்திறவு, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய பல நூல்கள் எழுதினார். சிறந்த மேடைப்பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய இவர் தேசபக்தன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்; தமிழ் அறிஞர்களுள் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி,

1. பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள் - ஒரே தொடராக மாற்றுக.

2. எவையேனும் இரண்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுச் சொற்களைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.

3. தமிழ்த்தென்றல் என்று திரு.வி.. அழைக்கப்படுகிறார் - இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.

4. ஞாயிற்றொளி - புணர்ச்சி விதி கூறுக.

5. எண்ணும்மைத் தொடர்கள் இரண்டினை எடுத்து எழுதுக.

விடைகள்:

1. பொறுமைப் பூண்டு, அதன் ஆற்றலை உணர்ந்து உலகை நோக்குங்கள்.

2. உணருங்கள், நோக்குங்கள் - முன்னிலைப் பன்மை வினைமுற்று.

3. திரு.வி..வைத் தமிழ்த் தென்றல் என்று அழைப்பர்.

4. ஞாயிற்றொளி = ஞாயிறு + ஒளி

விதி : :நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்றுவர இரட்டும்' எனும் விதிப்படி ஞாயிற்று + ஒளி என்றானது.

விதிஉயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் எனும் விதிப்படி, ஞாயிற் + ற் + ஒளி என்றானது

விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' எனும் விதிப்படி (ற் + = றொ) ஞாயிற்றொளி எனப் புணர்ந்தது.

5. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இந்தியாவும் விடுதலையும்.

 

தமிழாக்கம் தருக.

1. An eye for an eye only ends up making the whole world blind.

கண்ணுக்குக் கண் என்ற வழிவாங்கும் எண்ணம் இவ்வுலகம் முழுமையும் குருடாக்கி விடும்.

2. You must be the change you wish to see in the world.

உலகத்தில் நீ எதை மாற்ற விரும்புகிறாயோ, முதலில் உன்னை மாற்றிக்கொள்க.

3. The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.

பலவீனத்தை ஒருபோதும் மன்னிக்க இயலாது. மன்னிப்பு பலசாலியின் பண்பு

4. Nobody can hurt me without my permission.

என்னுடைய அனுமதியின்றி என்னை யாரும் புண்படுத்த முடியாது.

5. You must not lose faith in humanity. Humanity is an ocean; if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.

மனிதநேயத்தில் நாம் வைத்துள்ள நம்பிக்கையை தளரவிடக்கூடாது. மனித நேயம் கடல் போன்றது. அக்கடலில் சில மாசுக்கள் கலந்திருந்தாலும் கடல் முழுமையும் மாசாகி விடாது.

- மகாத்மா காந்தி.

 

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக. கதையில் காணலாகும் எவையேனும் ஐந்து பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிமழ்ச்சொற்களை எழுதுக.

அலுவலகத்துக்குள் நுழைகையில் போன் அடித்தது. எடுத்துப் பேசினாள். மறுமுனையில் உடனே ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு என் ஆபிஸ்க்கு வா கவி. இன்ஷூரன்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடணும். உன் போட்டோவையும் சஞ்சுவின் போட்டாவையும் எடுத்துட்டு வாஎன்று சொல்லி முடித்ததும் போனைத் துண்டித்தாள் செந்தில் ஏற்கெனவே தன் ஆபிஸில் நடக்க இருக்கும் ஆடிட்- நினைத்துக் கொண்டிருந்த அவளுக்குச் செந்திலின் போன் பதற்றத்தையும் குழப்பத்தையும் தந்தது. குழப்பத்துடன் போனை வைக்கையில் மறுபடியும் போன் ஒலித்தது. இம்முறை சஞ்சுவின் பள்ளி நம்பர். ஒரு நொடி பதற்றமாகிவிட்டது. எதற்கு அழைக்கிறார்களோ? என்று பயந்தபடி போனை எடுத்தேன். போனில் சஞ்சுவின் குரல். அம்மா நான்தான்என்றான். உடம்புக்கு எதாவதா?" என்றேன் டென்ஷனை மறைத்தபடி. "அதெல்லாம் ஒன்ணுமில்லைம்மா. மிஸஸ் கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு உனக்கு போன் பண்றேன். காலையிலேயே சொல்ல நினைச்சேன். மறந்திட்டேன். ஸாரிம்மா என்றான். எதுக்குடா சஞ்சு ஸாரி என்றேன். இன்னிக்கு உனக்கு பர்த்டேம்மா. மறந்துட்டியாஎன்றான். அட ஆமாம். ஜூலை பத்து. இப்படியா மறப்பேன். செந்தில்கூட நினைவில் வைத்து வாழ்த்தவில்லை, சஞ்சு கொஞ்சும் ஞாலில் ம்மா நைட்கூட ஞாபகம் இருந்துச்சு காலைல டக்குனு மறந்துட்டேன். சாரிம்மா ஹாப்பி பர்த்டே டூ யூஎன்றான். ஒரு நொடி எதுவும் பேச முடியாமல் திக்கிவிட்டேன். அவனே தொடர்ந்து அம்மா உளக்காக ஒரு சூரியகாந்திப்பூ வரைஞ்சி வச்சிருக்கேன். எவ்னிங் சீக்கிரமா வா தரேன் ஓகேவா?' என்றான். தாங்க்ஸ்டா செல்லம், தாங்க்யூ ஸோ மச்என்றேன். அந்த நாளின் சுமைகள் எல்லாம் கரைந்து மனசு நெகிழ்ந்து உருகியது. ரயில், அலுவலகம், செந்தில் என எல்லாம் மறைந்து போய், நானும் சஞ்சுவும் கைகள் கோர்த்து நடப்பதுபோல இருந்தது.

உரையாடல்:

இடம் : கவியின் (மனைவியின்) அலுவலகம்

பங்குபெறுவோர் : கவி (மனைவி) செந்தில் (கணவன்) சஞ்சு (மகன்)

நேரம் : காலை (கவி அலுவலகத்தில் நுழைந்ததும் போன் அடித்தது)

செந்தில் : உடனே ஆபிசுக்கு லீவு போட்டு வா இன்சூரன்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போடணும். உன் போட்டோ, சஞ்சு போட்டோ எடுத்து வா. (ஏற்கெனவே, ஆபிசில் ஆடிட் குழப்பம், இதில் வேறு செந்தில் குழப்பம், மறுபடியும் போன், இப்போது சஞ்சுவின் பள்ளி நம்பர், ஒரே பதற்றம்)

சஞ்சு : அம்மா நான்தான்.

கவி : என்னடா உடம்புக்கு?

சஞ்சு : அதெல்லாம் ஓண்ணுமில்லேம்மா, மிஸ்கிட்ட பர்மிஷன் வாங்கித்தான் போன் பன்றேன். ஸாரிம்மாகாலையிலே நினைச்சேன். சொல்ல மறந்துட்டேன்.

கவி : எதுக்குடா சாரி

சஞ்சு : இன்னிக்கி உனக்குப் பர்த்டேம்மா.

கவி : ஆமாம். ஜூலை பத்து. இப்படியா மறப்பேன். செந்தில்கூட வாழ்த்தலியா இன்னிக்கு.

சஞ்சு : ஹாப்பி பர்த்டே டூ யூ அம்மா, உனக்கு ஒரு சூரியகாந்திப்பூ வரைஞ்சிவைச்சிருக்கேன் ஈவ்னிங் வந்து தர்றேன்.

கவி : தாங்க்ஸ் டா செல்லம். தேங்க் யூ சோ மச். (அந்த நாளின் சுமைகள் எல்லாம் போயே போச்சு. இரயில், அலுவலகம், செந்தில் எல்லாம் மறைந்து, நானும் சஞ்சுவும் கைகோர்த்து நடப்பது போல் இருந்தது.)


பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களை எழுதுக.


 

உரை எழுதுவோம்

உங்கள் பள்ளியில் திரு. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள கல்லுரியின் மாணவர்கள் திரட்டிய நிதியைக் கொண்டு பள்ளியின் உயர்வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் கையடக்கப் புத்தகம் ஒன்றும் நில வரைபடப் புத்தகம் ஒன்றும் பரிசளிக்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளியின் சார்பாக நன்றி கூற ஒருபக்க அளவில் நன்றியுரை ஒன்றை எழுதுக.

விடை

உரை:

இந்தியாவைப் பொறுத்தமட்டில் சூரியன் கிழக்கே உதிக்கவில்லை.

இதில் எண்ன ஆச்சரியம், நமது அறிவுச்சூரியன் இராமேஸ்வரத்தில் அல்லவா தோன்றினார்.

பள்ளியில் படிக்கும்போது மிதிவண்டியில் வீடு வீடாகச் சென்று நாளிதழ் போட்டு நாட்களை ஓட்டினார்.

மாறாக இன்று அந்த நாளிதழ்களில் அக்னி ஏவுகணை நாயகன் கலாமைப் பற்றிய செய்திகள் இருந்தால்தான் நாளிதழே ஓடும்.

இந்தியாவில் என்ன இருக்கிறது என்று நம்மைத் தவிர்த்த நாடுகள் பல, அக்னி ஏவுகணையைக் கண்டு, அதிசயித்து இன்று உறவாட எத்தனை நாடுகள் காத்திருக்கின்றன.

கலாமின் பிறப்புக்குமுன் இராமேஸ்வரம் இந்தியாவுக்குள் இருந்தது.

கலாமின் பிறப்புக்குப்பின் இராமேஸ்வரத்திற்குள் இந்தியா.

தான் எப்படி இறக்கவேண்டும் என்று கலாம் நினைத்தாரோ, அப்படியே அது நிகழ்ந்தது.

யாருக்கு இது வாய்க்கும்? கலாமுக்கு மட்டும்தான் இந்த முடிவு, இறைவன் தந்தது.

இத்தகைய மாமனிதர் நினைவுநாளில் இளைய சமுதாயம் எழுச்சியற திருக்குறள் கையடக்கப் புத்தகம் நில வரைபடப் புத்தகம் இவற்றினைப் பரிசாக அளித்த கல்லூரி அண்ணன்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இலக்கிய நயம் பாராட்டுக.

சங்கத் தமிழ் அனைத்தும் தா

இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற

மூதாயியைத் தேடியலைந்த களைப்பில் பறவை

ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த

மண்பானையைத்தேடி அல்லலுற்றது.

 

பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன

கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை

ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி

அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக...

 

நீலவண்ணக் கடற்பரப்பில்

அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.

அதன் குஞ்சு பொரிப்பில்

ஆயதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்

அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்.

 

வயல்வெளியெங்கும் சலசலத்துத் திரிந்த

மருதயாழின் ஓசை வழிந்தோட

கால்கள் சுழன்றாடிய விறலிக் கூத்தின்முன்

பிரபஞ்சமே தன்னைப் புனைந்து கொண்டது.

 

பாணனின் கோப்பை

இப்போது காலியாயிருந்தது

தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்த பூவைக்

குழந்தைக்குத் தந்து வலியில் மூழ்கிய

பச்சைத்தாவரத்தின் கண்களில்

ஒருதுளி ரத்தம் தேங்கியிருந்தது.

 

சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து

காக்கைப்பாடினி வெளியேவந்தாள்.

 

ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென

அருகே வந்தவள் முத்தம் தருகையில்

பறவைகள் தொலைந்துபோன பூமியில்

குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து

கணிப்பொறித்திரையில்

என் சின்னமகள்

ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்.

- ஹெச்.ஜி. ரசூல்.

 

விடை

தலைப்பு: சங்கத்தமிழ் அனைத்தும் தா.

திரண்ட கருத்து:

இரண்டாயிரம் ஆண்டு பழமையுள்ள வடைசுட்டபாட்டியைத் தேடியலைந்த காகம் களைப்பால் தாகத்தினை தணிக்க மண்பானையைத் தேடித் துன்பற்றது. இதெல்லாம் பாடப்புத்தகத்தில் படத்தைப் பார்த்துச்சொன்ன கதை. இக்கதைகளில் இருந்து நீரூற்றுகள் எதுவும் பீறிடவில்லை. ஐவகை நிலங்களையும் அலகால் கொத்தி எடுத்ததால் பறவைக்கு முட்டையை அடைகாக்க இடமில்லை. அதனால், கடல்பரப்பின் மணல் திட்டில் கண் பறவையானது முட்டை இட்டு அடை காத்தது. குஞ்சு(கள்) பொரிப்பின்போது தெய்வப்பெண் ஒருத்தி ஒரு கையில் ஆயதம் மற்றொரு கையில் புல்லாங்குழலுடன் தோன்றினாள். வயல் எங்கும் மருதயாழின் ஓசைக் கேட்டு விறலியின் கால்கள் சுழன்று ஆடியது. அக்கூத்தின் முன் இவ்வுலகமே தன்னை ஒப்பனை செய்து கொண்டது. பாணனின் கையிலிருந்த மதுக்கோப்பை காலியாயிற்று. தாவரத்தின் உடலிலிருந்த பூவைக் குழந்தைக்குத் தந்ததால், வலியில் மூழ்கிய பச்சைத் தாவரத்தின் கண்களில் ஒரு துளி ரத்தம் தேங்கியிருந்தது. சங்கக் கவிதைகளின் தமிழ் எழுத்து ஒன்றினைத் திறந்து கொண்டு பெண்பாள் புலவர் காக்கைப்பாடினி வெளியே வந்தாள். ஆறாம் திணையில் துளிர்விட்ட அறிவியல் தமிழி நீயே என்று அருகே வந்து முத்தம் தரும்போது பறவையினம் காணாமல் போயிற்று.

குளிரூட்டப்பெற்ற அறையினுள்ளே கணினியின் திரையில் என் சின்ன மகள் ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தான்.

மோனை நயம்:

குயவனின் வண்ணம் பானையிலே

கவிஞனின் வண்ணம் மோனையிலே

பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து ஒன்றிவருவது மோனை.

சான்று: ஆயதமும் - அணங்கொருத்தி - ஆறாம் நிலத்தில் - அருகே வந்தவள்

எதுகை நயம்:

யானைக்குத் தும்பிக்கை

மனிதனுக்கு நம்பிக்கை

பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை.

சான்று: அருகே - தருகையில்

அணி நயம்:

பிரபஞ்சமே தன்னைப் புனைந்து கொண்டது, தாவரத்தின் கண்களில் ஒரு துளி ரத்தம் தேங்கியிருந்தது என்னும் இவ்விரு அடிகளில் உயர்வான வகையில் கவிதை புனையப்பட்டிருப்பது கண்கூடு. எனவே, உயர்வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது.

கற்பனை நயன்:

பாடல் முழுமையும், நவீன காலங்களில் கதை சொல்ல மூதாட்டிகள் இல்லை என்றும், மண்பானைகளைக் காண முடியாது என்றும் நீருற்றுகள் அற்றுப்போய்விட்டது என்றும், ஐவகை நிலங்கள் தன்மை மாறிவிட்டது என்றும் குல் தனது கற்பனைத் திறத்தின் உச்சத்தைப் பாடல்களில் காட்டியுள்ளார்.

 


மொழியோடு விளையாடு

 

எண்ணங்களை எழுத்தாக்குக.


விடை

ஆசையாய் கொஞ்சி அன்பாய் விளையாடும்

என் எஜமானுக்கு நான் செல்லக்குட்டி

உணவு போடும் உள்ளங்களை மறவேன்

தப்பு செய்தால் தவறாமல் குரைப்பேன்

எனதன்பைக் காட்ட எனதுவாலை ஆட்டுவேன்

ஒருவேளை சோற்றுக்கு வீட்டினைக் காப்பேன்

மிருக ஜாதிதாயென ஒதுக்கும் மனிதனே

நன்றி செய்வதில் உன்னிலும் உயர்ந்தவன்

துப்பறியும் இலாகாவால் துப்புதுலக்காததை

மோப்பச் சக்தியால் தப்பாமல் பிடிப்போம்

 

குறுக்கெழுத்துப் புதிர்


இடமிருந்து வலம்

1. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை (9)

7. தேன் - மற்றொரு சொல் (4)

15. புல்லின் இதழ்கள் - நூலாசிரியர் (4)

16. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடம் (4)

17. சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் (4)

19. ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பக்தி இலக்கியம் (6)

வலமிருந்து இடம்

6. யானை - வேறொரு சொல் (5)

9. வந்தவாசிக்கு அருகில் சமணப்பள்ளி இருந்த ஊர் (3)

12. உமறுப்புலவரை ஆதரித்தவர் (5)

20. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் (4)

மேலிருந்து கீழ்

2. புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை (4)

3. பாரதி நடத்த விரும்பிய கருத்துப்பட இதழ் (6)

4. இளையராஜா உருவாக்கிய இராகம் (5)

5. நற்றிணை 153ஆவது பாடலை இயற்றியவர் (6)

5. அணுவைப்போலச் சிறுத்து நிற்கும் ஆற்றல் (3)

12. இந்தச் சொல்லின் திரிபே சீறா (3)

13.மகாபாரதத்தில் கொடை வீரன் (4)

14. பாரதிதாசன் நடத்திய இதழ் (3)

கீழிருந்து மேல்

7. தவறு - வேறொரு சொல் (2)

8. தருமு சிவராம் என்னும் புனைபெயரிலும் எழுதியவர் (4)

9. மூங்கில் - மற்றொரு சொல் (2)

10. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் (6)

11. ஐங்குறுநூறு பாடும் மவர்களில் ஒன்று (2)

18. மலை என்றும் சொல்லலாம் (2)

19. பத்தாம் திருமுறை (7)

விடை

இடமிருந்து வலம்: 1. பொருண்மொழிக் காஞ்சி (9), 7. பிரசம் (4), 15. விட்மன் (4), 16. மன்றம் (4), 17. எழுத்து (4), 18. திருவாசகம் (B).

மேலிருந்து கீழ்: 2. காஞ்சனை (4), 3. சித்திராவளி (6), 4. பஞ்சமுகி (5), 5. தனிமகனார் (6), 6.குண்டு (3), 12. சீறத் (3), 13. கண்ணன் (4), 14. குயில் (3)

வலமிருந்து இடம்: 6. குஞ்சரம் (5), 9. வேடல் (3), 12. சீதக்காதி (5), 20. அண்ணம் (9). கீழிருந்து மேல்: 7. பிழை (2). 8. பிரமிள் (4), 9. சுழை (2), 10, திருவாதவூர் (6), 11. காயா (2). 18. வரை (2), 19. திருமந்திரம் (7).

 

 நிற்க அதற்குத் தக


மனித இனம் கூடிவாழும் இயல்புடையது. நாம் அன்றாடம் பலருடன் பழகக்கூடிய இன்றைய சூழலில் ஏற்படக்கூடிய சிறிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

சிக்கல் - தீர்வு

1. பக்கத்து வீட்டுக்காரர் மிகச் சத்தமாகப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

விடை

அதிக இரைச்சல் காதைச் செவிடாக்கும். சின்னக் குழந்தை அழுகிறது. தேர்வுக்குப் படிக்கிறார்கள் என வேர்டுகோள் செய்தல்.

 

2. நீங்கள் மட்டைப்பந்து போட்டியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நேரத்தில் உங்கள் தங்கை தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விடை

போட்டியை இன்று மட்டுமே பார்க்கலாம். தொடரை இன்னொரு முறை பார்க்க வாய்ப்புண்டு எனக் கூறுதல், அல்லது விட்டுக் கொடுத்தல்,

 

3. உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் உங்கள் வகுப்பத் தோழர், உங்கள் மேசை மீது உணவினை இறைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

விடை

நாம் படிக்கின்ற இடம் தூய்மை தேவை எனல்,  அவன் இரைத்த உணவினை நாமே சுத்தம் செய்தல்.

 

4. நீங்கள் அடுத்தநாள் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் வகுப்புத் தோழர், பாடத்தில் ஏற்பட்ட ஐயத்திற்காக உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறார்.

விடை

ஐயத்தை விளக்குதல் இரண்டுமுறை படிப்பதற்குச் சமம், 15 நிமிடங்களுக்கு மேல் தொலைபேசியில் பேசுதல் தேர்வு நேரத்திற்கு உகந்ததல்ல.

 

கலைச்சொல் அறிவோம்

நாங்கூழ்ப் புழு – Earthworm

உலகமயமாக்கல் - Globalisation

முனைவர் பட்டம் - Doctor of Philosophy (Ph.D.)

விழிப்புணர்வு - Awareness

கடவுச்சீட்டு - Passport

பொருள்முதல் வாதம் – Materialism

 

அறிவை விரிவு செய்

1. மனைவியின் கடிதம் - இரவீந்திரநாத தாகூரின் சிறுகதைகள் - மொ.பெ - . நா. குமாரசுவாமி

2. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்

3. நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா

 

இணையத்தில் காண்க

http://www.sothebys.com/en/news-video/videos/2015/03/

rabindranath-tagore-indian-art.html - தாகூர் பற்றிய ஆவணப்படம்

http://iagulab.bogspot.in/ - கவிஞர் இன்குவாபின்