வளிமண்டல அழுத்தம் - புவியியல் - வானிலை நிலவரைபடத்தை படித்தறிதல் | 11th Geography : Chapter 12 : Weather Maps
வானிலை
நிலவரைபடத்தை படித்தறிதல்
கொடுக்கப்பட்ட
தொடர் விளக்கப்படத்தின் அடிப்படையில் வானிலை கூறுகள் குறித்துக்
காட்டப்பட்டுள்ளது. வானிலை நிலவரைபடத்தை படிக்கும் போது கீழ்க்காணும்
கருத்துகள் விளக்கப்படவேண்டும்.
1. வளிமண்டல அழுத்தம்
வானிலை
பொதுவிவரப்படங்களின் உதவியால் வளிமண்டல அழுத்தம் கணக்கிடப்பட்டு உயர் வளிமண்டல
அழுத்தம் 'H' என்று
வானிலை வரைபடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதே வண்ணம் குறைந்த 'L'
என்ற
குறியீட்டில் காட்டப்படுகிறது. ஒரே வளிமண்டல அழுத்தம் நிலவும் பகுதிகளை இணைத்து சமஅழுத்தக்கோடு
உருவாக்கப்படுகிறது. இந்த சமஅழுத்தக்கோட்டை
அடிப்படையாகக் கொண்டு, வளிமண்டல அழுத்தம் எங்கு மிதமாகவும்
எப்பகுதிகளில் அதிகமான அழுத்தச் சரிவாகவும் நிலவுகிறது என்பதை அறிந்திட முடியும்.
சம அழுத்தக் கோடுகள் நெருக்கமாக காணப்பட்டால் அதிகமான அழுத்தச்சரிவுடையது. சம
அழுத்தக் கோடுகள் விலகிக் காணப்பட்டால் குறைவான அழுத்தச்சரிவுடையது.
2. காற்றின் வேகம் மற்றும் திசை
வானிலை
வரைபடத்தில் காற்றின் வேகத்தையும் திசையையும் அம்பு போன்ற காற்று வேகக் குறியீடு
காட்டுகிறது. அம்பு போன்ற காற்று வேகக் குறியீட்டில் இறகுகள் போன்று
நீண்டிருக்கும் குறியீடுகள் அதன் வேகத்தைக் காட்டுகிறது.
3. வானத்தின் மேமூட்டங்கள்
வானத்தின் மேகமூட்டங்கள் மேக
மூட்டத்தின் அடிப்படையில் முழுவதுமாகவோ, பாதியாகவோ
நிழல் வண்ணத்தால் குறிப்பிடப்படுகிறது. முழுவதும் நிழல் வண்ணமிட்டுக்
காட்டப்பட்டால் மேக மூட்டங்களால் சூழ்ந்துள்ளது எனவும் நிழல் வண்ணமிடவில்லையெனில்
தெளிவான வானம் நிலவுகிறது என அறிந்து கொள்ளலாம்.
4. கடல் நிலைப்பாடு
கடல்
நிலைப்பாடு, உதாரணமாக,
கொந்தளிப்பு
என்பது Ro என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறாக
மழை மற்றும் வெப்பநிலை அதற்கான குறியீடுகளால் தினசரி இந்திய வானிலை
நிலவரைபடத்துடன் இணைத்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.