அறிமுகம் - புவியியல் - வானிலை நிலவரைபடம் | 11th Geography : Chapter 12 : Weather Maps
வானிலை நிலவரைபடம்
அத்தியாயக் கட்டகம்
12.1 அறிமுகம்
12.2 வானிலை கூறுகளை அளவிடும் கருவிகள்
12.3 வானிலைக் கூறுகளை அளவிடுதலில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றம் 12.4 வானிலை குறியீடுகள்
12.5 நிலைய மாதிரிகள்
12.6 வானிலை நிலவரைபடத்தை படித்தறிதல்
12.7 வானிலை நிலவரை படத்தை விவரணம் செய்தல்
12.8 வானிலை முன்னறிவிப்பு
12.9 புயலின் பாதையை அறிதல்
கற்றல் நோக்கங்கள்
• வானிலையை அளவிடும் கருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பெறுதல்.
• வானிலை குறியீடுகளைக் கண்டறிதல்.
• வானிலை நிலைய மாதிரியை வரையும் திறனை வளர்த்தல்.
• வானிலை நிலவரைபடத்தை விவரணம் செய்தல்.
• வானிலை முன்னறிவிப்பு மற்றும் புயலின் பாதையைக் கண்டறிதலின் அறிவை மேம்படுத்துதல்.
அறிமுகம்
ஒரு
குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பரப்பின் மேல் நிலவும் வானிலை
மூலக்கூறுகளாகிய வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம்,
காற்றின்
வேகம், ஈரப்பதம்,
மேகமூட்டம்,
மழை,
பனிமூட்டம்,
பார்வை
நிலை போன்றவைகளின் தன்மையை குறியீடுகளாக வெளிப்படுத்துவதே வானிலை நிலவரைபடம்
ஆகும். வானிலை ஆராய்ச்சி நிலையங்களிலுள்ள பயிற்சி பெற்ற வல்லுநர்கள் ஒரு இடத்தின்
வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் வேகம்,
மேகம்
மற்றும் மழையளவு, போன்றவற்றை கணக்கிட்டு குறியீடுகளின் மூலம்
வானிலை நிலவரைபடத்தில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு,
வானிலை
நிலவரைபடம் வானிலை முன்னறிவிப்பிற்கான முதன்மை கருவியாகத் திகழ்ந்து குறிப்பிட்ட
இடத்தின் வானிலை மூலக்கூறுகளை குறியீடுகளின் வாயிலாகத் தெரிவிக்கிறது.