Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | புயலின் பாதையை அறிதல்

வானிலை நிலவரைபடம் - புவியியல் - புயலின் பாதையை அறிதல் | 11th Geography : Chapter 12 : Weather Maps

   Posted On :  16.05.2022 01:52 am

11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்

புயலின் பாதையை அறிதல்

வெப்ப மண்டல புயல் முன்னறிவிப்பு ஒரு தொடர்ந்து வளர்ந்து வரும் அறிவியல் ஆகும்.

புயலின் பாதையை அறிதல் (Tracking of cyclone)

வெப்ப மண்டல புயல் முன்னறிவிப்பானது புயலின் பாதைஅதன் தீவிரம்புயலின் விளைவாக ஏற்படும் மழைமற்றும் புயலினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் போன்ற தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது ஆகும். வெப்ப மண்டல புயல் முன்னறிவிப்பு ஒரு தொடர்ந்து வளர்ந்து வரும் அறிவியல் ஆகும்.




           டிசம்பர் 8. 2016


திறமையான வானவியலாளர்கள், செயற்கைக்கோள்கள், ரேடார்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அடிக்கடி மாறக்கூடிய வானிலையைக் கண்டறிந்து கணக்கிட்டு ஒட்டுமொத்த வடிவங்களையும் புள்ளிவிவரங்களையும் ஆராய்ந்து எவ்வாறு புயல் உருவாகும் மற்றும் அது பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மதிப்பிடுகின்றனர். திறமையான வானவியலாளர்களின் நடைமுறைக் கண்காணிப்புகள் வானிலை முன்கணிப்பு தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருக்கின்றன.


           டிசம்பர் 9. 2016


          டிசம்பர் 10. 2016


         டிசம்பர் 11. 2016


          டிசம்பர் 12. 2016


இன்றைய காலக்கட்டத்தில் புயல் பெரும்பாலும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் கண்காணிக்கப்படுகின்றன. செயற்கைக்கோள் படங்கள் சேகரிக்கப்பட்டு, பல மணி நேரங்கள் தருவிக்கப்பட்ட படங்களை ஒழுங்குப்படுத்தி அதில் கிடைக்கும் புள்ளிவிவரங்களை சேகரித்து எவ்வாறு புயல் உருவாகிறது என்று கண்காணிக்கப்படுகிறது. டாப்ளர் ரேடார்கள் (Doppler Radars) புயலுடன் கூடிய மழையளவை கணக்கிட்டு, எங்கு சூறாவளியோடு கூடிய மழைப்பொழிவு ஏற்படும் என்பதை கணிக்கிறது.

இப்புயல் கண்காணிப்பானது வானில் காணப்படும் மேகங்களின் திரட்சியைப் பொறுத்தும் அதன் நகரும் தீவிரத்தைப் பொறுத்தும் செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்நுட்பங்களால் உணரப்படுகிறது. பொதுவாக, திரள்முகில் கார்மேகங்கள் வெளிமுகத்தில் காணப்படும் போது அது எத்திசையில் நகருகிறதோ அத்திசையில் உருவாகும் புயலின் கண் புயல் வேகத்தைக் காட்டுகிறது.

உதாரணமாககீழே வர்தா புயல் எவ்வாறு கண்காணிக்கப்பட்டது என்பதை நாம் கற்றறிவோம்.

 

வர்தா புயல் கண்காணிப்பு, டிசம்பர் 11,வர்தா அதிகபட்ச பலத்துடன். 


 


மிக அதிவேக புயல்வர்தா

மிகக் கடுமையான நான்காம் சூறாவளிப் புயலான வர்தா வட இந்தியப் பெருங்கடலில் 2016ஆம் ஆண்டில் உருவானது. குறைந்த காற்றழுத்தப் பகுதியான மலாய் தீபகற்ப பகுதியில் டிசம்பர் அன்று தோன்றிடிசம்பர் 6ல் புயலாக மாறி பின்னர் டிசம்பர் 8ல் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளைத் தாக்கியது. டிசம்பர் முதல் இது வலுப்பெற்று தீவிரப்புயலாக மாறிடிசம்பர் 11 ல் மணிக்கு 130கி.மீ வேகத்தில் வீசக்கூடிய சூறாவளிப் புயலாக வலுப்பெற்றது. இந்த தீவிரப் புயலுக்கு வர்தா என்ற (சிவப்பு ரோஜா) பெயர் சூட்டப்பட்டது. இந்த வர்தாப் புயல் டிசம்பர் 11ம் தேதி முதல் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் அதிக மழைப்பொழிவு தந்து தொடர்ந்து டிசம்பர் 13ம் தேதி வரை நிலைகொண்டிருந்தது. டிசம்பர் 12ல் இருந்து புயலின் வேகம் மணிக்கு 105 கி.மீ என குறைந்துதாழ்வு அழுத்த நிலை 982 மில்லிபாரில் நிலைகொண்டிருந்தது. இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு படிவர்தா புயல் டிசம்பர் 12 ல் தமிழ்நாட்டில் குறிப்பாகசென்னையில் மழையும்காற்றின் வேகம் மணிக்கு சுமார் 100 முதல் 110 கி.மீ வரை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டது. டிசம்பர் 13ம் தேதி அது மேலும் வலுவிழந்து தாழ்வு நிலையாக மாறி தென் கர்நாடகா பகுதியில் மழைப்பொழிவை தந்துகர்நாடகாவைக் கடந்து டிசம்பர் 13 மாலை அரபிக்கடலை சென்றடைந்தது. இவை அனைத்தும் செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட வானிலை பற்றிய நிலவரைபடங்களை மையமாக வைத்து கணிக்கப்பட்டன.

தற்போது தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் அங்கு பயன்பாட்டில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் போன்ற பல தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் புள்ளிவிவரங்களை புயல் கணிப்புக்கும் முன்னறிவிப்புக்கும் பயன்படுத்துகின்றன. செயற்கைக்கோள்கள் தற்போதைய வானிலை நிலவரங்கள் பற்றிய தகவல்களை தந்து வானிலைக் கூறுகளைபற்றிய தகவல்களை அவ்வப்போது வழங்கிவருகின்றன. இன்று அறிவியலின் வளர்ச்சியால் நாம் வானிலை நிலவரங்களை நமது அலைபேசியிலேயே அறிந்து கொள்கிறோம்.



 

பயிற்சிகள்

I) கீழே உள்ள வினாக்களுக்கு விடையளி

1. கீழ்க்கண்வற்றிற்கான வானிலைக் குறியீடுகளை எழுது

அ. ஆலங்கட்டி மழை

ஆ. தென்றல்

இ. மழை

ஈ. அமைதியான நிலை

உ. மறைக்கப்பட்ட

 

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள காற்று திசைவேகக் குறியீட்டை விளக்குக


 

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலைய மாதிரியில் காணும் வானிலைக் கூறுகளின் பெயரை எழுதுக.


 

4. கொடுக்கப்பட்டுள்ள நிலைய மாதிரியை விவரணம் செய்.


 

5. கொடுக்கப்பட்டுள்ள வானிலைக் குறியீடுகளின் மதிப்புகளை வைத்து நிலைய மாதிரியை தயார் செய்யவும்.

அ. வெப்பநிலை - 22°C

ஆ. பனி நிலை - 18°C

இ. அழுத்தம் - 998 மில்லிபார்

ஈ. மேகமூட்டம் - ஓக்டாக்கள்

 

6. செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் ஓக்கி புயல் தொடர்பான ஒரு சிறிய திட்ட வரைவைத் தயார் செய்க.

 

 

கொடுக்கப்பட்டுள்ள வானிலை நிலவரைபடத்தை விவரணம் செய்க

 

                 வானிலை நிலவரைபடம்



II) பயிற்சி

அ. ஒரு காற்றுமானியை தயார் செய்.

 

தேவையான பொருட்கள்

• 4 சிறிய பேப்பர் கப்புகள் (Small paper cups)

• 4 பிளாஸ்டிக் உறிஞ்சிக்குழாய்கள் (Straw)

• டேப் (Tape)

• கத்தரிகோல் (Scissor)

• ஊசி (Straight Pin)

• பென்சில் மற்றும் அழிப்பான்

• ஸ்டேப்ளர் (Stapler)


செய்முறைகள் 

1. காற்றுமானியில் உள்ள நான்கு கப்புகள் காற்றை பிடித்து காற்றுமானியை சுழற்றுகிறது. உள்நோக்கிய வளைவு காற்றின் பெரும்பாலான சக்தியை பெறுகிறது. அதுதான் கப்புகளை இயக்குகிறது. ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையில் கப்புகள் சுழன்றால்காற்றின் திசைவேகமும் அதிகமாக இருக்கும்.

2. நான்கு உறிஞ்சுக்குழாய்களை குறுக்கே மையப்பகுதியில் ஒன்றாக வைத்து ஒட்டவும்.

3. பேப்பர் கப்புகளின் திறந்தப் பகுதி ஒரே திசையை நோக்கி இருப்பது போல அவற்றை ஒவ்வொன்றாக நான்கு உறிஞ்சிகுழாய்களின் விளிம்பில் வைத்து தைக்கவும்.

4. பென்சிலின் விளிம்பில் உள்ள அழிப்பானுக்குள் உறிஞ்சுக்குழாய்களின் மையப்பகுதி வழியே ஊசியை செருகவும்.

5. ஒரு கப்பில் குறியிடவும். இது காற்றுமானி ஒரு முறை சுழல்வதை அடையாளம் காண உதவும்.

6. காற்றுமானியை சுழற்றி விட்டால் அது சுலபமாக சுற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒரு நிமிடத்தில் காற்றுமானி எத்தனைமுறை சுழலுகிறதுகாற்றுமானி சுழற்சியின் எண்ணிக்கையையும் காற்றின் வேகத்தையும் இணைத்து ஒரு வாக்கியம் அமைக்க முடியுமா?.



Tags : Weather Maps | Geography வானிலை நிலவரைபடம் - புவியியல்.
11th Geography : Chapter 12 : Weather Maps : Tracking of Cyclones Weather Maps | Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம் : புயலின் பாதையை அறிதல் - வானிலை நிலவரைபடம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்