Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | வானிலை நிலவரை படத்தை விவரணம் செய்தல்

புவியியல் - வானிலை நிலவரை படத்தை விவரணம் செய்தல் | 11th Geography : Chapter 12 : Weather Maps

   Posted On :  15.05.2022 09:25 pm

11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்

வானிலை நிலவரை படத்தை விவரணம் செய்தல்

வானிலை நிலவரைபடம் வளிமண்டலத்தில் நிலவும் வானிலைக் கூறுகளை குறியீடுகளால் குறிப்பிடுவதாகும்.

வானிலை நிலவரை படத்தை விவரணம் செய்தல்

வானிலை நிலவரைபடம் வளிமண்டலத்தில் நிலவும் வானிலைக் கூறுகளை குறியீடுகளால் குறிப்பிடுவதாகும். ஒரு வானிலை நிலவரைபடம், சமஅழுத்தக் கோடுகள், வெப்பம், காற்றின் திசை மற்றும் வேகம், மேகமூட்டம், மழையளவு, கடல் நிலைப்பாடு ஆகியவற்றின் குறியீடுகள் ஒரு அரசியல் நிலவரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 





வானிலை நிலவரைபடம் இவ்வாறு வானிலை மையங்களில் பதிவு செய்யப்பட்ட வானிலை விவரங்களை உள்ளடக்கியது. வானிலைக் குறியீடுகள் அடங்கிய வானிலை பொதுவிவரப்படம் ஒவ்வொரு இந்திய வானிலை மையத்திலும் தயார் செய்யப்படுகின்றன. அவ்விவரப்படத்தில் கீழ்க்காணும் முக்கிய வானிலைக் கூறுகளான வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், மேகமூட்டம், மழையளவு, மற்றும் கடல்நிலை ஆகியவை குறியீடுகளின் உதவியுடன் விளக்கப்படுள்ளன.

வானிலைக் கூறுகளை வானிலை நிலவரைபடம் மூலமாக புள்ளிவிவரங்களை மதிப்பீடு செய்து வானிலை மையங்கள் வானிலையைப் பற்றிய முன்னறிவிப்பை தருகின்றன. வானிலை வரைபடமானது ஒரு நாளுக்குரிய, ஒருவாரத்திற்குரிய மேலும் ஒரு மாதத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை முன்னறிவித்து, முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத் துணைபுரிவதில் முக்கியப்பங்காற்றுகிறது. வானிலை அறிக்கை முன்னறிவிப்பானது விவசாயிகள், மீனவர்கள், மற்றும் மாலுமிகள் போன்றோருக்கு வானிலைப் பற்றிய தகவல்களை முன்னறிவிக்கிறது. இது வானூர்திகள் சில மணி நேரத்திற்கு முன்னதாகவே வானிலையை கணிக்க உதவுகிறது.

வானிலை நில வரைபட விவரணம்

இந்திய வானிலை நில வரைபடங்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனாவின் மேற்குப்பகுதி, நேபாளம், பூடான், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்திய அரசியலமைப்பு நிலவரைபடமாகும். இதில் பதிவு செய்யப்பட்ட வானிலை புள்ளிவிவரங்கள், சம அழுத்த கோடுகள் மற்றும் குறியீடுகளுக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளன.

 

இந்திய வானிலை நிலவரைபட விவரணம் பருவ மழைக்காலம். மாதிரி 1

வானிலை நிலவரைபடமானது அனைத்து வானிலைக் கூறுகளையும் உள்ளடக்கியது. கொடுக்கப்பட்டுள்ள வானிலை வரைபடமானது 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி திங்கள் கிழமை இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கும், கிரின்வீச் நேரப்படி 3.00 மணியளவில் காணப்பட்ட வானிலையை இது விளக்குகிறது. பொதுவாக, இது தென்மேற்கு பருவக்காற்று மழை பொழியும் காலமாகும். இவ்வானிலை\ நிலவரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வானிலை கூறுகளாவன: 

1. சமஅழுத்தக் கோடுகள்

சமஅழுத்தக் கோடுகள் குறைந்த பட்சமாக 1002 மில்லிபார் அளவிலும், அதிகபட்சமாக 1010 மில்லிபார் அளவிலும் காணப்படுகிறது. குறைந்தபட்ச மதிப்புடைய 1002 மில்லிபார் சமஅழுத்தக்கோடுகள் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. அதிகபட்ச மதிப்புடைய சமஅழுத்தக்கோடுகள் அரேபியக் கடலின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் காணப்படுகிறது.

2. தாழ்வழுத்த பகுதிகள்

இந்த வானிலை நிலவரைபடத்தில் நான்கு தாழ்வழுத்தப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பீகார், மேற்கு வங்கம், வடமேற்கு பாகிஸ்தான், அஸ்ஸாம், இந்தியாவின் கிழக்குப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப்பகுதிகளில் தாழ்வழுத்தப் பகுதிகள் காணப்படுகின்றன.

3. உயரழுத்தப் பகுதிகள்

ஆப்கானிஸ்தானில் வளிமண்டல அழுத்தம் (1008 மில்லிபார்) ஆகவும்தென்மேற்கு அரேபியக் கடல் பகுதியில் (1010 மில்லிபார்) ஆகவும் உள்ளது.

4. அழுத்தச்சரிவுப் பகுதிகள்

அதிக அழுத்தச்சரிவு மேற்கு கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது.

5. காற்றின் திசையும் வேகமும்

காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறிப்பாக தென்னிந்தியாவின் கடைகோடிப் பகுதியை நோக்கி நகருகிறது. காற்று வடமேற்கு திசையிலிருந்து தென்கிழக்குப் பகுதிகளுக்கு குறிப்பாக பீடபூமி பகுதியை நோக்கி வீசுகிறது. காற்றின் வேகம் குறைந்த பட்சம் நாட் அளவிலிருந்து அதிகபட்சமாக 15 நாட் அளவில் வீசுகிறது. இந்தக் காற்று வடபகுதியில் பலமாக வீசவில்லை . ஆனால் தென்பகுதியில் பலமாக வீசுகிறது.

6. மேகமூட்டங்கள்

இவ்வானிலை நிலவரைபடத்தின்படி, இந்தியாவின் வட மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தெளிவான வானமும், கிழக்கு கடற்கரை மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் அதிக மேகமூட்டத்துடனும் நிறைந்து காணப்படுகிறது.

7. கடல்நிலை

பருவக்காற்றின் வடக்கு எல்லையானது அந்தமான் கடல்மீது நிலை கொண்டுள்ளது.

8. மழை அளவு

அஸ்ஸாம்கர்நாடகாவின் தென்பகுதிகேரளா மற்றும் இலட்சதீவுப் பகுதிகளில் தாழ்வழுத்த மண்டலம் நிலவுவதால் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் மழை காணப்படுகிறது.

9. குறைந்த மற்றும் அதிகபட்ச வெப்பநிலை

கர்நாடகாவின் மேற்குப் பகுதி மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவும்இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பைவிட குறைவாக காணப்படுகிறது.

 



முடிவு

தென்மேற்கு பருவக்காற்றின் பொதுவான நிலைநிலத்தின் மீது காணப்படும் தாழ்வழுத்த மண்டலம்,கடல் மீது காணப்படும் உயர் அழுத்த மண்டலம்இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்யும் மழைபொழிவு போன்றவை பொதுவான தன்மைகளாகும். இது பருவ காற்றுகாலமாக அறியப்படுகிறது.

 

வானிலை நிலவரைபட விவரணம் - மாதிரி 2. பருவக் காற்று காலம்

மாதிரி இந்திய வானிலை நிலவரைபடம் - பருவக்காற்று மழைக்காலம்

கொடுக்கப்பட்டுள்ள வானிலை நிலவரைபடம் 1991ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதிசெவ்வாய் கிழமைஇந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கும் கிரீன்விச் நேரப்படி 3.00 மணிக்கும் எடுக்கப்பட்ட வானிலை விளக்க படமாகும்.

 

அழுத்தப் பரவல்

1. தாழ்வழுத்தம்

வங்காள விரிகுடாவின் வட மற்றும் தென்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் (1012 மில்லிபார்) தாழ்வழுத்த மண்டலம் காணப்படுகிறது.

 

2. உயரழுத்தம்

உயரழுத்தம் இந்தியாவின் மத்தியப் பகுதிகளிலும் பீடபூமி பகுதிகளிலும் காணப்படுகிறது. இது குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பகுதிகளில் நிலவுகிறது. பிற உயரழுத்தப் பகுதிகள் ஆப்கானிஸ்தானில் 1014 மில்லிபார் அளவிலும் மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் நிலவுகிறது. இந்தியா முழுவதும் சீரான வளிமண்டல அழுத்த நிலை உள்ளது.

 

3. காற்று

ஓடிஷாவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியில் அமைதியான வானிலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் காற்று வடக்கு நோக்கியும் குஜராத்தில் தெற்கு நோக்கியும் வீசுகிறது. மத்திய இந்தியாவில் இது வடகிழக்கிலிருந்து வீசுகிறது.

 

4. வானம்

வடக்கில் வானம் தெளிவாகக் காணப்படுகிறது. தெற்கில் சற்று மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடலின் நிலை மிதமாக காணப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு அருகில் வானம் தெளிவற்று காணப்படுகிறது.

 

5. மழைபொழிவு

ஆந்திர கடற்கரைதமிழ்நாடுமற்றும் கர்நாடகத்தின் தென்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுகிறது. தெலுங்கானாவில் ஓரிரு இடங்களிலும்ராயலசீமா மற்றும் கேரளாவிலும் மழை காணப்படுகிறது.

 

6. இயல்பு நிலையிலிருந்து வெளியேறும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை

வடமேற்கு ராஜஸ்தானை விடுத்து மற்றப் பகுதிகளான தென்மேற்குப்பகுதிகள் இயல்பான வெப்பநிலையையும், கிழக்குப் பகுதிகள் இயல்புநிலையை விட குறைவான வெப்பநிலையையும் பதிவு செய்கிறது.

முடிவாகதாழ்வழுத்த நிலையானது கடலிலும்உயரழுத்த நிலையானது உட்பகுதிகளிலும் நிலவுவதால்இது வடகிழக்குப் பருவ மழைப்பொழிவைக் குறிக்கிறது.

Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 12 : Weather Maps : Weather Map Interpretation Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம் : வானிலை நிலவரை படத்தை விவரணம் செய்தல் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்