புவியியல் - நிலைய மாதிரிகள் - வானிலை நிலவரைபடம் | 11th Geography : Chapter 12 : Weather Maps
நிலைய மாதிரிகள்
வானிலை மையங்கள் வானிலை பற்றிய அனைத்து புள்ளிவிவரங்களையும் பதிவு செய்து மதிப்பீடு செய்து தொகுத்து வைக்கின்றன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வானிலைக் குறியீடுகளைப் பயன்படுத்தி நிலைய மாதிரிகள் ஒவ்வொரு வானிலை மையத்திலும் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, கொடுக்கப்பட்டுள்ள வானிலை நிலைய மாதிரி எவ்வாறு வானிலைக் குறியீடுகளைப் பயன்படுத்தி வானிலைப் பற்றிய புள்ளிவிவரங்களை தருகின்றன என்று பார்ப்போம்.
இந்த வானிலை நிலைய மாதிரியில் இடது புற மேற்புறத்தில் வெப்பநிலை செல்சியஸ் அளவுகளில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தில் அவ்வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகும். இடது புறத்தின் கீழ்புறத்தில் பனிநிலை 5 டிகிரி செல்சியஸ் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மையத்தில் காணும் உருவம் மேகமூட்டத்தை குறிக்கிறது. வானம் 8 ல் 7 பங்கு மேகமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. வலதுபுற மேற்புறத்தில் வளிமண்டல அழுத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளிமண்டல அழுத்தம் மில்லிபார் என்ற அளவில் கடல் மட்ட அழுத்தக் குறியீட்டில் கணக்கிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. வளிமண்டல அழுத்தம் கடல் மட்டத்திற்கு மேல் 105 மில்லிபார் ஆகும். மேகமூட்டத்தை குறிக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள திசையையும் குறிப்பிடுகிறது. இக்குறியீடு காற்று வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசைநோக்கி 15 நாட் (K not) வேகத்தில் வீசுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.