வானிலை நிலவரைபடம் - புவியியல் - வானிலைக் குறியீடுகள் | 11th Geography : Chapter 12 : Weather Maps
வானிலைக் குறியீடுகள்
குறியீடுகள்
என்பது உருவகங்களின் பிரதிபலிப்புடன் ஒரு பொருளைக் குறிப்பதாகும். வானிலை
வரைபடத்தில் வானிலைக் கூறுகள் வானிலைக் குறியீடுகளால் குறிப்பிடப்படுகின்றன. உலகம் முழுவதற்கும்
ஏற்ற பலக் குறியீடுகளை சர்வதேச அளவில் உலக வானிலை மையம் மற்றும் இயற்கை வானிலை
பணியகம் (World Meteorological Organization and Natural Weather Bureaus) வானிலைக் குறியீடுகளாகப் பயன்படுத்துகிறது.
வானிலை வரைபடத்தை விளக்குவதற்கு வானிலைக் குறியீடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
வானிலையின் மூலக்கூறுகளான மழை, காற்றின் வேகம்,
மேகமூட்டம்,
மற்றும்
கடல் நிலை ஆகியவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் வானிலைக்குறியீடுகளைக் கீழே
காணலாம். வானிலை வரைபடத்தில் பயன்படுத்தப்படும் இக்குறியீடுகள் வானிலை
முன்னறிவுப்புக்கும் பயன்படுகிறது.