வானிலை நிலவரைபடம் - புவியியல் - வானிலை முன்னறிவிப்பு | 11th Geography : Chapter 12 : Weather Maps
வானிலை முன்னறிவிப்பு
வானிலை முன்னறிவிப்பு
வருங்கால வானிலையை கணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வருங்கால வானிலை நிலவரங்களை
முன்கூட்டியே கணக்கிடுவது மிகவும் ஒரு சவாலான செயலாகும். தற்போது நிலவும்
வானிலையையும் எதிர்கால வானிலையைக் கணிப்பதையையும் தொடர்புபடுத்த உதவும்
பழக்கப்பட்ட முன்னறிவிப்பிற்கு வானிலையியல் பற்றிய
முழுமையான அறிவு அவசியமாகும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான வானிலை
முன்னறிவிப்பு 24 மணிநேரம் முதல் 48
மணிநேரம்
வரையிலான கால அளவிற்கானதாகும்.
இவ்வானிலை முன்னறிவிப்பு
அண்மைக்கால அறிவிப்பு, குறுகிய எல்லைக்குட்பட்ட அறிவிப்பு,
நடுத்தர
எல்லைக்குட்பட்ட அறிவிப்பு, நீண்ட எல்லைக்குட்பட்ட அறிவிப்பு என்று
வகைப்படுத்தப்படுகிறது. அண்மைக் கால அறிவிப்பானது தற்போதைய வானிலை விவரங்களையும்,
சில
மணிநேரங்களுக்கு முன்பான வானிலை புள்ளிவிவரங்களை ரேடார் கருவிகளின் உதவியுடன்
முன்னறிவிப்பதாகும்.
குறுகிய
எல்லைக்குட்பட்ட அறிவிப்பானது ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்குட்பட்ட வானிலையை 24
மணிநேர
இடைவெளியில் தொகுத்து மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலையை முன்னறிவிப்பதாகும்.
இது முழுமையாக வானிலை பொது விவரப்படங்களையும் அதற்கான அமைப்புகளையும் சார்ந்து
செயல்படுகிறது.
நடுத்தர
எல்லைக்குட்பட்ட அறிவிப்பானது எண்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட வானிலைப்
புள்ளிவிவரங்களை மையப்படுத்தி, நான்கு அல்லது பத்து நாட்களுக்கான முன்னறிவிப்பு
வெளியிடுவதாகும்.
நீண்ட எல்லைக்குட்பட்ட
அறிவிப்பானது பத்து நாட்களுக்கும் முன்னதாகவே ஒரு காலநிலையைக் குறிப்பிட்டு
சொல்வதாகும். இது ஒரு மாதாந்திர அல்லது பருவநிலை மாற்றம் குறித்த
முன்னறிவிப்பாகும். உள்ளூர் வானிலை முன்னறிவிப்பானது அவ்விடத்தின் வானிலை மையத்தைச்
சுற்றி சுமார் 50 கி.மீட்டர் பரப்பளவுக்குரிய
காலநிலையை முன்னறிவிப்பு செய்வது ஆகும்.
தொடர்
வானிலை முன்னறிவிப்பு என்பது தற்போதைய வானிலை சூழலே எதிர்காலத்திலும் இருக்கும்
என்று கணிப்பது ஆகும் . நடைமுறை (Analog forecasting)
வானிலை
முன்னறிவிப்பானது வரலாற்றுப்பூர்வமான வானிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அதே
கோணத்தில் தற்போதைய வானிலையைக் கணித்து கூறுவதாகும். புள்ளி விவர வானிலை
முன்னறிவிப்பானது முந்தய கணினி மாதிரிகளின் வானிலைக் கூறுகளை ஆராய்ந்து
கணிப்பதாகும். போக்கு வானிலை முன்னறிவிப்பு என்பது புவி மேற்பரப்பு வானிலை
அமைப்புகள் அதே திசையில் அதே வேகத்தில் தொடர்ந்து நகர்வதாக கணிக்கப்படுவதாகும்.
வானிலை முன்னறிவிப்பில் தற்போதைய சூழல்
தற்போது
செயல்படும் வானிலை செயற்கைக்கோள்கள் வானிலைக் குறித்தான தெளிவானப் புகைப்படங்களை
எடுத்து அனுப்புவதால் துல்லியமான வானிலை விவரங்களை கணக்கிட முடிகிறது. காற்று,
மழை,
கடல்
மேற்பரப்பு வெப்பநிலை ஆகிய வானிலைக் கூறுகளை புவியின் வெவ்வேறு அலைவரிசைகளில்
உணரிகள் மூலம் செயற்கைக்கோள்கள் படம்பிடித்து செயற்கைக்கோள் படங்களாகத் தருகிறது.
புவியின் மேற்பரப்பு
வானிலைவிவரங்களை ரேடார்கள் மூலம் கூர்ந்து நோக்குவதால் வானிலை
முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. எண்கள் அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்பானது
தற்போதைய சூழலையும் கடந்தகால சூழலையும் ஒப்பிட்டு,
எதிர்காலத்தில்
எவ்வாறு வானிலை புள்ளி விவரங்கள் இருக்கும் என்று முன்கூட்டியே தீர்மானிப்பதாகும்.
இவ்வண்ணமாக, (AWIPS) மேம்பட்ட
வானிலை தொடர்பு செயலாக்க அமைப்புகள் செயற்கைக்கோள்கள், ரேடார்கள். புவிமேற்பரப்பை கூர்ந்து நோக்குதல்,
மற்றும்
வானிலை முன்னறிவிப்பு மாதிரிகள் ஆகியவற்றை பயன்படுத்துகிறது.