Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5: சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

கற்றலின் நோக்கங்கள் >சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல். >சாலை விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்தல். >வாகனம் ஓட்டும் பொழுது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல். >போக்குவரத்தில் உள்ள ஆபத்துகளை அறிவது எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொளுதல். >சாலையில் தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் செல்லுதல்.

அலகு – 5

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்


 

கற்றலின் நோக்கங்கள்

>சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்.

>சாலை விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்தல்.

>வாகனம் ஓட்டும் பொழுது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல்.

>போக்குவரத்தில் உள்ள ஆபத்துகளை அறிவது எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொளுதல்.

>சாலையில் தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் செல்லுதல்.

 

அறிமுகம்

நமது நாகரிகம் முழுவதும் வேகத்தினையும் இணைப்பினையும் தரக்கூடிய பிரம்மாண்டமான கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் சாலையும் ஒன்று . இன்றைய உலகத்தில் போக்குவரத்தானது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. சாலைகள் தூரத்தைக் குறைக்கின்றன ஆனால் அதே வேளையில் சாலை விபத்துக்களால் லட்சக்கணக்கான மக்கள் காயமடைவதுடன் அதிக உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பு என்பது முதன்மையாக சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும் முதன்மையாகக் குறிக்கிறது.

 

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்

ஒவ்வொரு நாளும், சாலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அடிக்கடி நிகழும் அசம்பாவிதங்கள் பற்றி தினமும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துக்கள் படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழிவகுக்கும் வருந்தத்தக்க நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன. இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன. பிரச்சனை சாலைகளால் அல்ல. அது நம் கவனக்குறைவால் தான். அதனால் தான் இதுபோன்ற விபரீதம் ஏற்படுகின்றது. உயிரிழப்பால் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. இப்பிரச்சனைக்குக் காரணம் மெதுவாக நகரும் வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களைக் கொண்ட பலவகைப்பட்ட சிக்கலான போக்குவரத்து ஆகும்.


விபத்துகளின் நேரடி விளைவுகள்: உயிரிழப்பு , படுகாயம், உடமைகளுக்குச் சேதம் ஆகியனவாகும்.
Tags : Chapter 5 | Civics | 8th Social Science அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations : Road Safety Rules and Regulations Chapter 5 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5: சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் - அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5: சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்