தாவரவியல் - ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சிறப்பியல்புகள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சிறப்பியல்புகள்
• வாஸ்குலத்திசு (சைலம் மற்றும் ஃபுளோயம்) நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
• கூம்புகளுக்குப் பதிலாக மலர்கள் தோற்றுவிக்கின்றன.
• சூல் சூலகத்தினால் சூழப்பட்டுள்ளது.
• மகரந்தச் சேர்க்கைக்கு மகரந்த குழல் உதவி செய்கிறது. ஆகையால் கருவுறுதலுக்கு நீர் அவசியமில்லை.
• இரட்டைக் கருவுறுதல் காணப்படுகிறது. கருவூண் திசு மும்மடியத்தில் உள்ளது.
• ஆஞ்சியோஸ்பெர்ம்கள் இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலைத் தாவரங்கள் எனும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.