கணக்கு - கண மொழி | 9th Maths : UNIT 1 : Set Language

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி

கண மொழி

நமது அன்றாட வாழ்க்கையில், நூல்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேகரிப்பு என பல்வேறு வகையான தொகுப்புகளைப் பயன்படுத்துகிறோம். பொருள்களின் தொகுப்புகளைக் கணித வழியில் குறிக்கும் ஒரு வழியே கணமொழி ஆகும்.

அலகு 1

கண மொழி


பன்மையையும் ஒருமையாகக் காண வைப்பது கணம்

ஜார்ஜ் கேண்டர்

 

ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் கேண்டர் (Georg Cantor) கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார். இன்று அவை கணிதத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கணிதத்தில் அனைத்துக் கணிதக்கட்டமைப்புகளையும்  கணங்களாகவே கருதலாம்.


 

கற்றல் விளைவுகள்

கணம் மற்றும் கணத்தைக் குறிக்கும் முறைகளை விவரித்தல்.

கணங்களின் வகைகளை அறிதல்.

கணத்தின் செயல்பாடுகளை அறிந்து, கணச் செயல்களை நிகழ்த்துதல் மற்றும் வென்படத்தில் குறித்தல்.

கணச் செயல்களில் பரிமாற்று, சேர்ப்பு மற்றும் பங்கீட்டுப் பண்புகளை அறிதல்.

டி மார்கன் விதிகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் சரிபார்த்தல்.

கணமொழியைப் பயன்படுத்தி வாழ்க்கைப் பயன்பாட்டுக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.

 

அறிமுகம்

நமது அன்றாட வாழ்க்கையில், நூல்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேகரிப்பு என பல்வேறு வகையான தொகுப்புகளைப் பயன்படுத்துகிறோம். பொருள்களின் தொகுப்புகளைக் கணித வழியில் குறிக்கும் ஒரு வழியே கணமொழி ஆகும்.

பின்வரும் படங்களைப் பார்க்கவும். அவை எதனைக் குறிப்பிடுகின்றன?

படம் 1.1 பழங்களின் தொகுப்பையும், படம் 1.2 வீட்டு உபயோகப் பொருள்களின் தொகுப்பையும் குறிக்கின்றன.

படத்தில் (1.1 மற்றும் 1.2) உள்ளவற்றின் சிறப்பியல்புகளை உற்று நோக்கினால் நம் கவனம் தனிப்பட்ட ஒரு பொருளிலிருந்து அவற்றின் தொகுப்பின் மேல் திசை மாறுவதை உணரலாம். அவ்வாறான எந்தவொரு தொகுப்பும் கணம் என அழைக்கப்படும்.


Tags : Maths கணக்கு.
9th Maths : UNIT 1 : Set Language : Set Language Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி : கண மொழி - கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : கண மொழி