Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | குறுவினாக்கள் மற்றும் பதில்கள்

இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் | இயற்பியல் - குறுவினாக்கள் மற்றும் பதில்கள் | 11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement

   Posted On :  05.11.2022 10:34 pm

11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

குறுவினாக்கள் மற்றும் பதில்கள்

இயற்பியல் : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் : முக்கியமான கேள்விகள், பதில்கள், தீர்வுகள்: குறுவினாக்கள் மற்றும் புத்தக கேள்விகள் பதில்கள்

இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் | இயற்பியல்

குறுவினாக்கள் 


1) இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி.

இயற்பியல் அளவுகளை இருவகைகளாக வகைப்படுத்தலாம். அவைகள் அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள். 

மற்ற எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். அவைகளாவன :நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு. 

அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகளை வழி அளவுகள் எனலாம். பரப்பு, கன அளவு, திசைவேகம், முடுக்கம், விசை போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.


2) இடமாறு தோற்ற முறையில் சந்திரனின் (Moon) விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?

நிலவுக்கும் புவிக்குமிடையேயான தொலைவு 'D'-யை நிர்ணயித்தோமானால் நிலவின் விட்டம் மற்றும் கோண அளவுகளை இடமாறு தோற்ற முறை மூலம் கணக்கிடலாம்.

புவியில் O என்ற புள்ளியிலிருந்து, தொலைநோக்கி மூலம் நிலவில் முற்றிலும் எதிரெதிரான M மற்றும் N புள்ளிகளை காண வேண்டும். நாம் பார்த்த, அவ்விரு திசைகளிலிருந்து கோணம் α-வை அளந்து கொள்ள வேண்டும். 

O என்ற புள்ளியை மையமாக வைத்து வரையப்பட்ட வில் MN-ன் நீளம் d எனவும் அதன் ஆரம் D எனவும் கருதுவோமானால்

α = d/D

அல்லது d = α D



3) முக்கிய எண்ணுருக்களை கணpக்கிடுவதன் விதிகளைத் தருக.



4) பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

1. எண்கள் 𝜋, e (ஆய்லர் எண்) போன்ற பரிமாணமற்ற மாறிலிகளின் மதிப்பை இம்முறை மூலம் பெற முடியாது.

2. கொடுக்கப்பட்டுள்ள அளவு வெக்டர் அளவா அல்லது ஸ்கேலர் அளவா என்பதை இம்முறை மூலம் தீர்மானிக்க முடியாது.

3. திரிகோணவிதி, அடுக்குக்குறி மற்றும் மடக்கை சார்புகள் உள்ளடங்கிய சமன்பாடுகளின் தொடர்புகளைக் கண்டறிய இம்முறையில் இயலாது.

4. மூன்றுக்கு மேற்பட்ட இயற்பியல் அளவுகள் உள்ளடங்கிய சமன்பாடுகளுக்கு இம்முறையைப் பயன்படுத்த இயலாது.

5. ஒரு சமன்பாடு பரிமாண முறையில் சரியானதா என்றே மெய்ப்பிக்க முடியும். அதன் உண்மையான சமன்பாட்டைக் கண்டறிய முடியாது. எடுத்துக்காட்டாக 

S = ut + 1/3 at2 என்பது பரிமாண முறைப்படி 

சரி. ஆனால் உண்மையான சமன்பாடு

S = ut + 1/3 at2 ஆகும்.


5) நுட்பம் மற்றும் துல்லியத்தன்மை - வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

ஓர் அளவின் உண்மையான மதிப்பிற்கு அருகில் அமையும் அளவீட்டு மதிப்பு துல்லியமான அளவு எனப்படும்.

ஒரு கருவியின் நுட்பத்தன்மை எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் குறிக்கும்.

ஓர் அளவீடு நுட்பமானது எனில் அது துல்லியத்தன்மை கொண்டது என்பது பொருள் அல்ல. எனினும் ஓர் அளவீடு தொடர்ச்சியாகத் துல்லியத்தன்மை கொண்டது எனில் அது நுட்பமான அளவீடு ஆகும்.

ஒரு குளிர்பதனியின் வெப்பநிலையை ஒரு வெப்பநிலைமானியைக் கொண்டு அளவிடுவதாகக் கொள்வோம், அது 10.4° C, 10.2°C, 10.3°C, 10.1° C, 10.2°C, 10.1°C, 10.1°C, 10.1°C ஆகிய அளவுகளைத் தருகின்றது. குளிர் பதனியின் உண்மையான வெப்பநிலை 9°C எனில் அந்த வெப்பநிலைமானி துல்லியத் தன்மை அற்றது ஆனால் அனைத்து அளவிடப்பட்ட அளவுகளும் 10°C -க்கு அருகில் உள்ளதால் அந்த வெப்பநிலைமானி நுட்பமானது.


Tags : Nature of Physical World and Measurement | Physics இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் | இயற்பியல்.
11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement : Short Questions and Answer Nature of Physical World and Measurement | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் : குறுவினாக்கள் மற்றும் பதில்கள் - இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்