வரலாறு - பாடச் சுருக்கம் - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி | 11th History : Chapter 9 : Cultural Development in South India
முடிவுரை
இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சி வடஇந்திய தென்னிந்திய மரபுகள் ஒன்றிணைவதற்கு உதவியதோடு ஒரு கலப்பிந்தியப் பண்பாடு உருவாவதற்கும் வழிவகுத்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் உணர்ச்சிகரமான வெளிப்பாடு தமிழகத்தின் பக்தி இயக்கத்திலிருந்தே தொடங்கின. இது துணைக் கண்டத்தின் பல பகுதிகளில் ஒத்த இயல்புகளுடைய பெரும்பான்மையோர் ஒருங்கிணையத் தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டியது. எம்.ஜி.எஸ். நாராயணன், கேசவன் வேலுதாட் ஆகியோரின் சொற்களில் பக்திக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்வதென்றால் “பக்தியெனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதிய அமைப்பைக் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது.”
பாடச் சுருக்கம்
I. சாளுக்கியர், பல்லவர் சாளுக்கியர்
• வாதாபி சாளுக்கியர், குறிப்பாக இரண்டாம் புலிகேசி, வடக்கே ஹர்சரையும் தெற்கே பல்லவரையும் அவர்கள் தக்காணத்தில் கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் அதிகாரத்தை நிறுவுவதிலிருந்து தடுத்தனர்.
• கலை, கட்டடக்கலை ஆகியவற்றிற்கு அவர்களின் பங்களிப்பிற்கு ஐஹோல், வாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களே சாட்சியாகும்.
பல்லவர்
• தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவர்கள் அரசை நிறுவினர்.
• முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ அரசர்கள் வடக்கில் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள் சாளுக்கியரோடு நீடித்தப் போர்களுக்கு இட்டுச் சென்றது.
• கடற்கரைக் கோவில் கட்டுமானத்திற்காகப் பல்லவராட்சி நன்கு அறியப்படுகிறது. அதற்கு மாமல்லபுரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
III. எல்லோரா, அஜந்தா, மாமல்லபுரம் எல்லோரா
• ஆசீவகம், சமணம், பௌத்தம், பிராமணியம் ஆகிய அனைத்து மதப் பிரிவுகளையும் பிரிதிநித்துவப்படுத்தும்
சிற்பங்களுக்கு எல்லோரா
பெயர்பெற்றது.
• கைலாசநாதர் குகையிலுள்ள தொடர்
சிற்பங்கள் புராண
இதிகாச நிகழ்ச்சிகளைக்
கொண்டுள்ளன.
அஜந்தா
• அஜந்தாவில் முப்பது குகை
கள் உள்ளன.
ஐந்து குகைகளில் சுவரோவியங்கள்
உள்ளன. ஜாதகக் கதைகளிலுள்ள காட்சிகளும் புத்தருடைய வரலாற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
• புத்தர் சிலையைத் தவிர
போதிசத்துவரின் சிலைகள்
கவனத்தை ஈர்க்கும்
வகையில் சைத்தியாக்களிலும் விகாரைகளிலும் இடம் பெற்றுள்ளன.
மாமல்லபுரம்
• பல்லவர்களின் கட்டடக்கலைக்கு மாமல்லபுரம்
கடற்கரைக் கோவில்
உன்னதமான எடுத்துக்காட்டாகும்.
• ஆகாய கங்கை, அர்சுனன்
தவம் ஆகிய
தனிச்சிறப்பு மிக்க
சிற்பங்கள் சிற்பக்கலைக்குப் புகழ்மிக்க எடுத்துக்காட்டுகளாகும்.
III
பக்தி இயக்கம்
• ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்கள்
தமிழ்நாட்டில் பக்தி
மரபைத் தொடங்கி
வைத்தன.
• பல்லவரும் பாண்டியரும் பக்தி
இயக்கத்தை ஆதரித்தனர்.
பக்தி ஒரு
சித்தாந்தமாக சமுதாயத்தின்
அனைத்துப் பிரிவினரையும்
மதம் என்னும்
குடையின் கீழ்
ஒருங்கிணைத்தது.
• இக்காலத்தில் வடஇந்திய - தென்இந்திய மரபுகளின் கலப்பு ஏற்பட்டது.