வரலாறு - பாடச் சுருக்கம் - பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures
பாடச் சுருக்கம்
• சிந்து நாகரிகத்தின் சரிவுக்குப் பின்னர்
வட இந்தியப்பகுதி முழுவதிலும் அதிகமான எண்ணிக்கையில் பண்பாடுகள் உருவாயின. செம்பும்
அதனைத் தொடர்ந்து இரும்பும் பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. வேளாண்மை செய்யப்பட்ட நிலங்கள்
விரிவடைந்ததற்கு இரும்பு பெரிதும் உதவியது. இது வேளாண் உபரிக்கு இட்டுச்சென்றது. இது
அதிக மக்களுக்கு உணவளிக்கும் வசதியை நல்கியதால் மக்கள் தொகைப் பெருக்கமும் குடிபெயர்தலும்
பெருமளவில் நடந்தன. சிந்து பண்பாட்டின் சரிவுக்குப் பின்னர், சில குழுக்கள் கிழக்கு
நோக்கி குடிபெயர்ந்ததை முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாடு அறிவுறுத்துகிறது.
•
பழுப்புமஞ்சள் நிற மட்பாண்ட பண்பாடு
இந்தியாவின் பல பகுதிகளில் செழித்தோங்கியது.
•
பொ.ஆ.மு... 1500-ஐ ஒட்டி ஆரியர்கள் இந்தியாவில்
குடியேறினர். வேத நூல்களே இக்கால வரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாகும்.
•
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, காலத்தால்
முந்தைய ரிக்வேதம் வேதகாலச் சமூகத்தையும் பண்பாட்டையும் சித்தரிக்கிறது.
•
யஜூர், சாம, அதர்வ வேதங்களைச் சான்றுகளாகக்
கொண்ட பின் வேதகாலம் சிக்கலான கெடுபிடியானதோர் சமூகமாகப் பரிணமித்தது.