வரலாறு - பாடச் சுருக்கம் - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire
பாடச் சுருக்கம்
•
கண் - சங்கங்கள் காலப்போக்கில் பெரிய மகாஜனபதங்களாகவும், 16 அரசுகளாகவும் மாறின. மகதம் நாளடைவில் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறியது.
• மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர் பிம்பிசாரர். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் அஜாதசத்ரு ஆட்சி செய்தார். மஹாபத்ம நந்தர் நந்தவம்சத்தை உருவாக்கினார்.
• பொ.ஆ.மு. 326 இல் வடமேற்கு இந்தியா மீதான அலெக்சாண்டரின் படையெடுப்பு மேற்குலகின் வணிகத்தைத் திறந்துவிட்டது. அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பிறகு, சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார்.
• மௌரியப் பேரரசர்களில் குறிப்பிடத்தகுந்த மூவரான சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் மையப்படுத்தப்பட்ட அரசை நிறுவினார்கள். அர்த்த சாஸ்திரம், இண்டிகா ஆகிய நூல்கள் மூலம் மௌரிய நிர்வாக அமைப்பு பற்றித் தெரிய வருகிறது.
• இக்காலகட்டத்தில் வணிகம் பன்மடங்கு வளர்ந்ததால், மௌரியப் பேரரசு இந்திய வரலாற்றில் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கியது எனலாம்.
• மௌரியப் பேரரசு நாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல் ஆகிய பழைய மரபுகளைத் தொடர்ந்தது. அப்போது மேற்கொள்ளப்பட்ட புரட்சிகர மாற்றத்திற்கான முயற்சி யாதெனில், அசோகர் தனது அதிகாரிகளையும், மக்களையும் தம்மத்தைப் பின்பற்றுமாறும், வன்முறையைத் தவிர்த்து ஒழுக்கமான வாழ்க்கை வாழுமாறும் கேட்டுக் கொண்டதாகும்.
• தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, மையத்திலிருந்து நிர்வகிக்கப்பட்ட, ஒரு பெரிய நவீன அரசை உருவாக்கியது. இதன் காரணமாக மௌரியப் பேரரசு இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.