Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் கொள்கைகள் - பகுதி I

அரசியல் கொள்கைகள் - கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் கொள்கைகள் - பகுதி I | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I

   Posted On :  04.10.2023 08:33 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I

கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் கொள்கைகள் - பகுதி I

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I : கலைச்சொற்கள்: Glossary

கலைச்சொற்கள்: Glossary


சுதந்திரமாக விடு (Laissez Faire): பிரெஞ்சு மொழி சொல் ஆகும். சுதந்திரமாக விடு என்பது இதன் பொருளாகும். வாழ்க்கையை விரும்பிய படி அமைத்துகொள்ள அரசு மனிதனை சுதந்திரமாக விட வேண்டும்


சந்தை பொருளாதாரம் : தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் இயங்கும் பொருளாதாரம்


சமூக நலஅரசு : சமூக நல திட்டங்களை அமல்படுத்தும் அரசு 


சீரமைப்பு (Perestroik.: ரஷ்ய மொழி சொல் ஆகும். சீரமைப்பு என்பது இதன் பொருள் ஆகும். சோவியத் ரஷ்யாவின் அதிபர் மைக்கல் கோர்பசேவ் பொருளாதாரத்தை சீரமைக்க கொண்டு வந்த திட்டம் இது ஆகும்


வெளிப்படைத்தன்மை (Glasnost): ரஷ்ய மொழி சொல் ஆகும், வெளிப்படைத்தன்மை என்பது இதன் பொருளாகும். மக்களுக்கான அரசியல் உரிமைகளை சோவியத் ரஷ்யாவின் அதிபர் மைக்கல் கோர்பசேவ் இத்திட்டத்தின் மூலம் கொண்டு வந்தார்


புதிய ஒப்பந்தம் (New Deal) : புதிய ஒப்பந்தம் என்பது இதன் பொருளாகும். உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் இதனை அறிமுப்படுத்தினார்.


மக்களாட்சி மத்தியத்துவம் : இது, பொதுவுடைமைவாத கட்சியின் அமைப்பு கோட்பாடு ஆகும். லெனின் மக்களாட்சி மத்தியத்துவத்தை கொண்டு வந்தார். மக்களாட்சியும் அதிகார குவியலும் இணைந்து இங்கு காணப்படுகிறது


பொதுவுடைமைவாதம் சீனமயமாதல் : ஐரோப்பிய கண்டத்தின் பொதுவுடைமைவாத கொள்கையை சீனாவிற்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்தல்


மேலாதிக்கம் : கிராம்சி என்பவர் மேலாதிக்கம் எனும் கருத்தைக் கொண்டு வந்தார். அரசு தார்மீகம், அறிவு மூலமாக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மயக்குகிறது என்பது இதன் பொருளாகும்


கற்பனை சமதர்மவாதம் : காரல் மார்க்ஸின் காலத்திற்கு முன்பு இருந்த்த சமதர்மவாத்த்தை கற்பனை சமதர்மவாதம் என காரல் மார்க்ஸ் வர்ணித்தார்


ஃபேபியன் சமதர்மவாதம் : பண்டை கால ரோமானிய ஜென்ரலின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சமதர்மவாதம் ஃபேபியன் சமதர்மவாதம் ஆகும். சரியான நேரம் வரும் வரை பொறுத்திருந்து இயங்குவது இதன் கொள்கையாகும்


புதிய மக்களாட்சி : மாவோ புதிய மக்களாட்சி கருத்தை அறிமுகப்படுத்தினார். விவசாயிகள், தொழிலாளிகள், சிறிய முதலாளிகள், பெரிய முதலாளிகள் ஆகியோர்களுக்கான ஆட்சியே புதிய மக்களாட்சி ஆகும்.


ஆதிகால உறவு வாதம் : ஒரு குறிப்பிட்ட மொழி, இன மற்றும் பகுதி மக்கள் ஆதி காலத்தில் இருந்து இணைந்து வாழ்வதால் தேசியவாதம் தோன்றயது என்று இக்கொள்கை கூறுகிறது


கற்பனை சமூகங்கள் : பெனடிக்ட் ஆண்டர்சன், 'தேசம் என்பது மக்களின் கற்பனையில், மனதில் இயங்கும் சமூகம்' என கூறினார்


தொழிலாளர் (Proletariat): காரல் மார்க்ஸ் தொழிலாளர்களை குறிப்பதற்காக பிரஞ்சு மொழிச் சொல்லை பயன்படுத்தினார்


U. S. S. R : "யூனியன் ஆஃப் சோவியத் சோசியலிஸ்ட் ரீபப்ளிக்" என்பது இதன் விரிவாக்கமாகும், இப்பொதுவுடைமைவாத நாடு 1991-ஆம் ஆண்டு மறைந்தது


BREXIT : ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நிகழ்சி. (Britain Exit)


உலகமயமாதல் : பொருளாதார, வர்த்தக, தொழில் நுட்ப தளங்களில் உலகம் ஒன்றினைவது உலகமயமாதல் எனப்படும்


பாசிசம்: இத்தாலிய மொழியில் 'பாசி' என்றால் 'தண்டுகளின் மூட்டை' என்று பொருளாகும். ஒற்றுமை மற்றும் வலிமையை இது குறிக்கின்றது


சித்திரவதை முகாம்கள் : யூத இன மக்களை நாசிச தலைவர் அடால்ஃப் ஹிட்லர் அடைத்து கொடுமை படுத்திய இடங்களே சித்திரவதை

Tags : Political Science அரசியல் கொள்கைகள்.
11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I : Summary and Glossary in Political Ideologies Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I : கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் கொள்கைகள் - பகுதி I - அரசியல் கொள்கைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I