Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 3 : இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

பாடச் சுருக்கம்

முதல் உலகப் போர் நடந்தது உட்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இரண்டு பத்தாண்டுகளில் நடந்த நிகழ்வுகள் இந்திய தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

பாடச் சுருக்கம்

• முதல் உலகப் போர் நடந்தது உட்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இரண்டு பத்தாண்டுகளில் நடந்த நிகழ்வுகள் இந்திய தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

• காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு காரணமாக உருவான அரசியல் வெற்றிடம் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் தன்னாட்சி இயக்கம் தோன்ற வழியமைத்தது.

• இந்தியாவிற்குத் தன்னாட்சி வேண்டும் என்று திலகர் மற்றும் பெசண்ட் தலைமையிலான இரு தன்னாட்சி இயக்கங்களும் கோரின.

• போர் காரணமாக காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் வாய்ப்பும் லக்னோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திட்டன.

• போரின் போது ஆங்கிலேய அரசு, சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்தோடு பல அடக்குமுறைச் சட்டங்களை இயற்றியது.

• துருக்கியின் மிகப்பெரும் தோல்வியும் மற்றும் அதன் மீது திணிக்கப்பட்ட அவமானம் தரும் அமைதி ஒப்பந்தமும் கிலாபத் இயக்கத்துக்கு வித்திட்டன. ரஷ்யப் புரட்சி இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் வளர வழி அமைத்தது.

•காந்தியடிகளின் தலைமையில் புதிய வடிவிலான ஆர்ப்பாட்டத்தை தொடங்கும் களத்தை மறைமுகமாக முதல் உலகப்போர் உருவாக்கியது.

Tags : Impact of World War I on Indian Freedom Movement | History இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு.
12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement : Summary Impact of World War I on Indian Freedom Movement | History in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 3 : இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் : பாடச் சுருக்கம் - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 3 : இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்