Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

வடிவியல் | இரண்டாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 2 Unit 4 : Geometry

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : வடிவியல்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : வடிவியல் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180°. 

ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமமாகும்

ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் 360°. 

இரு கோட்டுத்துண்டுகளின் நீளங்கள் சமம் எனில் அவை சர்வசமம்

இரண்டு கோணங்களின் கோண அளவுகள் சமம் எனில், அவை சர்வசமக் கோணங்கள் ஆகும்

இரு தள உருவங்களின் ஒத்த பக்கங்களும் ஒத்த கோணங்களும் சமம் எனில் அவை சர்வசமத் தள உருவங்கள் ஆகும்

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்குச் சமம் எனில், அவை சர்வசம முக்கோணங்கள். இது -- கொள்கை என அழைக்கப்படும்

ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களும், அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களுக்கும், அவற்றிற்கிடைப்பட்ட கோணத்திற்கும் சமமாக இருந்தால் அம்முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் எனப்படும். இது -கோ- கொள்கை என அழைக்கப்படும்

ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் கோணங்களைத் தாங்கும் பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்குச் சமம் எனில், அவை சர்வசம முக்கோணங்கள். இது கோ--கோ என அழைக்கப்படும்

ஒரு செங்கோண முக்கோணத்தில், செங்கோணத்திற்கு எதிரே அமையும் பக்கம் மிகப் பெரியதாக அமையும். இது கர்ணம் என அழைக்கப்படும்

ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணமும் மற்ற ஏதேனும் ஒரு பக்கமும் மற்றொரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்திற்கு மற்ற ஏதேனும் ஒரு பக்கத்திற்கும் சமம் எனில், அவை சர்வசம முக்கோணங்கள். இது செ-- கொள்கை என அழைக்கப்படும்.


இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி-1

கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜியோ ஜீப்ரா இணையப் பக்கத்தில்வடிவியல்என்னும் பணித்தாளிற்குச் செல்லவும், "கோணங்களின் கூடுதல் பண்பு" மற்றும் 'சர்வசம முக்கோணம்' என்னும் இரு செயல்பாடுகள் உள்ளன.

படி-2 :

1. கோணங்களின் கூடுதல் பண்புச் செயல்பாட்டில், முனைப்புள்ளிகள் A,B மற்றும் C இழுத்து, கோண வடிவங்களை மாற்றுக, மேலும் கோணங்களின் கூடுதல் பண்பை சரிபார்க்க

2. சர்வசம முக்கோணத்தில் P இழுப்பதன் மூலம் நீலநிற முக்கோணத்தை நகர்த்தியும் நழுவலைப் பயன்படுத்தியும் சுழற்றி முக்கோணங்களைப் பொருத்திப் பார்க்கலாம்.



செயல்பாட்டிற்கான உரலி

வடிவியல் : https://www.geogebra.org/m/f4w7csup#material/gqagexmx 

அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க



Tags : Geometry | Term 2 Chapter 4 | 7th Maths வடிவியல் | இரண்டாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 4 : Geometry : Summary Geometry | Term 2 Chapter 4 | 7th Maths in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : வடிவியல் : பாடச்சுருக்கம் - வடிவியல் | இரண்டாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : வடிவியல்