Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil

   Posted On :  16.08.2023 09:41 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 3

பீடு பெற நில்

நம்மை அளப்போம்


பலவுள் தெரிக

1. கூற்று : "கோடு" என்பது தமிழ்ச்சொல் ஆகும்.

விளக்கம் : கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.

) கூற்று சரி, விளக்கம் தவறு ) கூற்று தவறு, விளக்கம் சரி

) கூற்றும் சரி, விளக்கமும் சரி

) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு

[விடை: ) கூற்றும் சரி, விளக்கமும் சரி]

 

2. காவடிச் சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

) பாரதிதாசன்

) அண்ணாமலையார்

) முருகன்

) பாரதியார்

[விடை: ) அண்ணாமலையார்]

 

3. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. வெள்ளிவீதியார் - ) புறநானூறு

2. அண்ணாமலையார் - ) சி. சு. செல்லப்பா

3. வாடிவாசல் - ) குறுந்தொகை

4. இளம்பெருவழுதி - ) காவடிச்சிந்து

1) , , ,

ii) , , ,

iii) , , ,

iv) , , ,

[விடை: iii) , , , ]

 

4.இனிதென' - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.

) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே, தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

[விடை: ) உயிர்வரின் உக்குறளி மெய்விட்டோடும், உடலிமேல் உயிர் வந்து ஒன்றுவது இயலிபே]

 

5. பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?

) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்

) பகுதி, இடைநிலை, சாரியை

) பகுதி, சந்தி, விகாரம்

) பகுதி, விகுதி

[விடை: ) பகுதி, விகுதி]

 

குறுவினா

1. "கோட்டை" என்னும் இச்சொல்லில் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

விடை

தமிழ் - கோட்டை, கோடு

மலையாளம் - கோட்ட, கோடு

கன்னடம் - கோட்டே, கோண்டே

தெலுங்கு - கோட்ட

துளு - கோட்டே

தோடா - க்வாட்

 

2. காவடிச்சிந்து என்பது யாது?

விடை

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச்சிந்து எனலாம்.

முருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர்.

ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செய்வர்.

அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச்சிந்து என்னும் பாவடிவம் தோன்றியது.

 

3. குறுந்தொகை குறித்து நிங்கள் அறியும் செய்தியாது?

விடை

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை உடையது.

நல்ல குறுந்தொகை எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது.

உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.

ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.

நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ,

கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.

 

4. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

விடை

தமிழர்கள் புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள்.

உலகம் முழுவதும் கிடைப்பதாயிருந்தாலும் பழிவரும் செயல்களைச் செய்யார்.

 

சிறுவினா

1. மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது' - என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

விடை

திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள்.

திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைக்கிறார் கமில் சுவலபில்

'சேயோன் மேய மைவரை உலகம்' என்று உரைக்கிறது தொல்காப்பியம்.

"விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ' என்கிறது திருமுருகாற்றுப்படை

பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையேழு வள்ளல்கள் எழுவருமே மலைப்பகுதிகளின் தலைவர்கள். இவ்வாறு மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

 

2. தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் காவிடிச்சிந்து என்பதை விளக்குக.

விடை

காவடியும் தமிழரும்

காவடி தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கம்.

காவடிச்சிந்து - இசை மரபு:

 தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல்தமிழ் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச்சிந்து.

முருகனின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர் ஆடல். பாடல்களுடன் ஆலயம் நோக்கிச் செல்வர்.

அவ்வழி நடைப் பாடல்களே காவடிச் சிந்து.

 

3. பகுபத உறுப்பிலக்கணம் கூறுக.

) வருகின்றாள் ) வாழ்வான் ) காண்பிப்பார் ) பிரிந்த

விடை

) வருகின்றாள் - வா(வரு) + கின்று + ஆள்

வா - பகுதி, வரு ஆனது விகாரம், கின்று - நிகழ்கால இடைநிலை, ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதி.

) வாழ்வான் - வாழ் + வ் + ஆன்

வாழ் - பகுதி, வ் - எதிர்கால இடைநிலை, ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

) காண்பிப்பார் - காண்பி + ப் + ப் + ஆர்

காண்பி - பகுதி ப் - சந்தி, ப் - எதிர்கால இடைநிலை, ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

) பிரிந்த - பிரி + த்(ந்) + த் +

பிரி - பகுதி, த் - சந்தி, ‘ந்ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, பெயரெச்ச விகுதிட

 

4. சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளி வீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை ஒப்பீட்டு விளக்குக.

விடை

இன்றைய மணப்பரிசு பற்றிய தோழியின் கூற்று:

தலைவன் ஊர் மக்கள் அவையில் அனுப்பப்பட்ட பரிசுப்பொருட்கள் போதவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டன.

ஆனால் இன்றோ தலைப்பாகை அணிந்து, கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாக பரிசுப் பொருட்கள் அனுப்புகிறான் தலைவன்.

போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து அவை முன் வைத்துள்ளான்.

பரிசுப் பொருட்களை அவையில் இருந்த தலைவியின் உறவினரும் கண்டு நன்று நன்று என்று கூறி மகிழ்ந்தனர்.

இக்கால சமூக நிகழ்வுகள்:

இக்காலச் சமூக நிகழ்வுகள் பெண் வீட்டாரிடம் கட்டாயப்படுத்தி பரிசுப் பொருட்கள் (வரதட்சணை) வாங்கும் பழக்கம் உள்ளது.

திருமண நிகழ்வுகள், செலவுகள் பெண் வீட்டரிடம் ஒப்படைக்கும் சூழல் சில இடங்களில் அமைகிறது.

போதுமான பரிசுப் பொருட்கள், சரியாக நிகழ்ச்சிகள் அமையவில்லை என்றால் மனமுறிவு ஏற்பட்டு வழக்கு, நீதிமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.

 

5. புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.

விடை

புறநானூறு

i) உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே.

ii) பிறர் அஞ்சுவது அஞ்சிப்.

iii) துஞ்சலும் இலர்.

குறட்பா

i) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.

ii) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.

iii) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.

 

நெடுவினா

1. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க.

விடை

முன்னுரை:

மலை மனித சமூகத்தின் ஆதிநிலமாகும். மலை மற்றும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி ஆகும்.

அகத்திணையியல்:

குறிஞ்சி நிலம் சார்ந்த சங்கப்பாடல்கள் மலையோடு இயைந்த தமிழர்தம் சீரிய வாழ்வினைப் பேசின. திராவிடர்கள் அடிப்படையில் மலை வாழ் மக்கள் அல்லது மலை நில மனிதர்கள் என்பார் கமில் சுவல்பில்.

இனக்குழுப் பெயர்கள்

இந்தியாவில் தற்போது வாழும் பல்வேறு திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள் அப்பழங்குடியினரின் மலை சார்ந்த மானுடப் புவிச் சூழலை வெளிப்படுத்துகின்றன.

.கா:

கோட்டி - நீலகிரி, தமிழ்நாடு, கொர்டா தோரா - ஆந்திரப் பிரதேசம், கோண்டு, கொய்ட்டெர் - ஒடிசா போன்ற திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்களும் மலை, குன்று எனப் பொருள் தரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை.

பழங்குடியினரின் இயல்புகள்:

பழங்குடியினர் ஓடும் நீரையே குடிநீராகப் பயன்படுத்தினர். அதன் காரணமாகத் தங்கள் குடியிருப்பு பகுதியை உயரமான இடத்தில் அமைத்து ஓடும் சிற்றாறு. ஓடைகளில் நீர் எடுத்தனர்.

நீலகிரி தோடர் இனத்தவர் பால் எருமைக் கொட்டில்களைப் புனிதமாகக் கருதினர். அதனைச் சுற்றி அமைத்த மதில்சுவரும் வீடுகளில் திண்டுகளும் முக்கிய இடம்பெறுகின்றன.

குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் மெட்டு என்ற சொல் அதன் உயரமான மேடான அமைப்பை விளக்குகின்றது.

பழங்குடியினரும் உயரமான இடங்களும்:

ஆந்திராவிலும் ஓடிசாவிலும் ஐதாப்பு பழங்குடியினரின் குடியிருப்புகள் பெரும்பாலும் மலை உச்சிகளில் அமைந்துள்ளன. உயரமான மேடை, திண்ணை, சுற்றுச்சுவர்கள், மேலோடை நீர் ஆகியவை திராவிடப் பழங்குடியினரின் வாழ்விட வடிவமைப்பிலும் வாழ்வியலிலும் உயரமான இடங்கள் தாக்கத்தைக் காட்டுகின்றன.

 

2. காவடிச்சிந்து ஒரு வழிநடைப் பாடல் - இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க.

விடை

காவடிச்சிந்துதோற்றம்:

காவடி, தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று.

தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கம்.

காவடி எடுத்துச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல், பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்கள் இயற்றப்பட்டன.

காவடிச்சிந்து - பா வடிவம்:

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபு காவடிச்சிந்து,

முருகனின் வழிபாட்டிற்காகப் பால் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வர்.

அவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயம் நோக்கிச் செல்வர்.

அவர்களின் வழிநடைப் பாடல்களிலிருந்து காவடிச் சிந்து என்னும் பா வடிவம் தோன்றியது.

அண்ணாமலையாரின் பாடல் - பொருள்:

உலகம் போற்றும் அண்ணாமலைதாசனின் மதுரகவிட

சென்னிகுளம் அண்ணாமலைதாசன் பாடிய உலகம் போற்றும் காவடிச்சிந்து என்னும் மதுரமான கவிமாலையைத் தன் மலை போன்ற அகன்ற தோள்களில் சாத்திக் கொள்கிறான் முருகன்.

கழுகுமலைக் கோவில் வளம்:

கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவமைப்புகள் கொண்ட கொடிகள் சிறக்க, முருகன் கோயில் திகழ்கிறது.

திருப்புகழ் முழுக்கம் செல்லும் இடம்:

காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது அமராவதி பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவியைச் சென்று அடைகிறது.

அருள் பெறும் பக்தர்கள்:

நெஞ்சம் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கிக் கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கி வரும் பக்தர்கள் முருகன் அருளைப் பெறுவர். இன்பம் அடைவர்.

 

3. வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக.

விடை

முன்னுரை:

சி.சு. செல்லப்பா வாடிவாசலில் நேரடியாக நடைபெறும் நிகழ்வினை தன்னுடைய குறும்புதினத்தில் வட்டார வழக்கு மாறாமல் அப்படியே எழுதியுள்ளார். அப்புதினத்தில் சீறிப்பாயும் காளைகளையும் எதிர்த்து அடக்கும் இளம் வீரர்களையும் பற்றி இங்குக் கார்போம்.

அம்புலியின் மகனும் - ஜமீனின் காரியும்:

வாடிப்புரம் காளையை அடக்குவதற்கு உசிலனூரைச் சேர்ந்த அம்புலியின் மகன் பிச்சி என்ற இளைஞளவாடிவாசலுக்கு வந்திருந்தான். அதே ஊர் ஜமீன்தாருடைய காளைதான் காரி காரியை அடக்குபவருக்கு இரண்டு பவன் தங்கமும், பட்டும் பரிசு.

பழிக்குப்பழி

இதே காளை காரி, இளைஞன் பிச்சியினுடைய அப்பனை, இதே வாடிவாசலில், அடக்க வந்த போது முட்டிக் கொன்றது. அப்பனைக் கொன்ற கொடூரம் பிச்சியின் மனதில் ஆறாத் தழும்பாக இருந்தது. அதே காளை காரியை அடக்கிக் காட்ட வேண்டும் என்பது பிச்சியின் சபதமாக இருந்தது.

வாடிவாசலில் காரியும் பிச்சியும் நேருக்கு நேர்:

திட்டி வாசலில் காரிக்காளை ராஜாங்கமாக வந்து நின்றது. காரியின் பருத்த திமில் பளீரென்று இருந்தது. அதன் மூச்சு பட்ட இடம் மணி சிதறியது. பிச்சி ஒரு தனிப்பிறவி. எது மேலே எப்படி விழணும் என்பது அவனது சுபாவத்தில் ஊறிப்போய் இருந்தது.

கிழக்கத்தியான்காரிய பிடிக்கவா போறான்? பய இன்னிக்கு செத்தான். காரிசும்மா ராஜாளிமாதிரி வந்து நிக்குது பாரு - என்று மக்களின் குரல் ஒலித்தது. இதற்கிடைய மாடுபிடிவீரன் பிச்சியின் பார்வையும் வாடிபுரம் ஜமீன்தார் பார்வையும் ஒரு முறை சந்தித்தன. ஊம்ம். பிடி பார்க்கலாம் என்ற ஜாடை ஜமீனின் பார்வையில் தெரிந்தது.

பிச்சி காரியை அடக்குதல்:

பிச்சிக்கு நேர் எதிரில் காரி வந்து நின்றது. காளையின் முன்டபுறம் காரி நின்றான். வால் புறத்தில் நண்பன் மருதன் நின்றான். பிச்சி நண்பன் மருதனுக்கு சமிக்ஞை செய்தான். மருதன் டுர்ரீரீ" என்று வாடிவாசல் எதிரொலிக்குமாறு கத்தினான். காளை மீது மருதன் கைபடவும், மருதன் பக்கம் காரி திரும்பியது. அவ்வளவுதான் சில்வண்டு போல அட்டத்தில் பாய்ந்து, திமிலில் இடதுகையைப் போட்டு நெஞ்சோடு இறுக்கினாள். உடனே சுாரி நான்கு கால்களோடும் மேலெழும்பியது. கொம்பை அலைதத்துக் குத்தப் பார்த்தது. ஒரு தரம் ஆள் உயரம் மேல் எழும்பி அந்தரத்தில் முதுகு குவித்துத் தவ்வியது.

ஒரு தவ்வுக்குப் பிடி விடாமல் நின்னுட்டான் காரி. காரி இரண்டாவது தவ்வுதவ்வியது. இப்போ பாக்கலாம் என்றனர் மக்கள். இரண்டு, மூன்று தவ்வுக்குப் பிடியை விடல பிச்சி. விட்டுடாதே என்றனர் மக்கள். காளையின் மூன்றாவது தவ்வுல (துள்ளல்) உரமில்ல (வலிமையில்லை).

மாடு பிடிபட்டது:

பிச்சி பிடிபட்டுவிட்டது. கிழக்கத்தியான். வெண்டெடுத்திட்டான் (வென்றுவிட்டான்) காரியின் (காளை)நெற்றியில் கட்டியிருந்த உருமாப்பட்டைக்கு அடியில் கையை விட்டு இழுத்தான் பிச்சி தங்கச் சங்கிலியும் பட்டும் கைக்கு வந்தது.

முடிவுரை:

வெற்றி முழக்கத்தின் கிழவர் ஒருவர் உசிலனூர் அம்பிலியின் பேரைக் காப்பாத்திட்ட நீ மனுசனுக்குப் பொறக்கயடா. புலிக்குப் பொறந்த பய என்றார் சத்தமாக. பிச்சியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்து, வெற்றியினை அப்பனுக்கு சமர்ப்பணம் செய்தான் பிச்சி.

 


மொழியை ஆள்வோம்

 

சான்றோர் சித்திரம்:


தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படும் சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து. தம் இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர்க் கலித்தொகை இறையனார் அகப்பொருள், வீரசோழியம் சி.வை. தாமோதரனார் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாது. கட்டளைக் கலித்துறை, நட்சத்திரம் மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். ஆறாம் வாசகப் பத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாடநூல்களையும் எழுதினார்.

அவருடைய தமிழ்ப்பணியைக் கண்ட பெர்சிவல் பாதிரியார், அவரைத் தாம் நடத்திய தினவர்த்தமானி' என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசாங்கத்தாரால், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். பிறகு, பி.எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாமோதனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.

வினாக்கள்:

1. மாநிலக்கல்லூரி - புணர்ச்சி விதி கூறுக.

2. ஆசிரியராக்கினார் - இதன் பகுதி:

) ஆசு ) ஆசிரி ) ஆசிரியராக்கு ) ஆசி

3. சிறு சிறு தொடர்களாக மாற்றி எழுதுக.

தாமோதரனார் நீதிநெறி விளக்கம் என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டுக் கலித்தொகை வீரசோழிய உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்துக் கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை சூளாமணி வசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

4. பெரும்புகழ் - இலக்கணக்குறிப்பத் தருக.

5. கல்லூரி, உயர்நீதிமன்றம், வரலாறு, பணி ஆகியவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்களை எழுதுக.

விடைகள்:

1. மாநிலம் + கல்லூரி - மாநில + க் + கல்லூரி - மாநிலக்கல்லூரி

விதி : மவ்வீறு ஒற்றொழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.

2. ) ஆசு

3. தாமோதரனார் நீதிநெறி விளக்கம் என்ற நூலைப் பதிப்பித்தார்.

அந்நூலை வெளியிட்டார்.

கலித்தொகை, வீரசோழியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார்.

கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணிவசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

4. பண்பத்தொகை.

5. கல்லூரி - College;

உயர்நீதிமன்றம் - High Court;

வரலாறு - History;

பணி - Work / Job.

 

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

1. குமரனை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.

விடை

குமரனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகை தாருங்கள். என் வீட்டிற்குப் பக்கத்து வீடுதான் குமரனது வீடு.

 

2. அனைத்துத்துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெறவேண்டும்.

விடை

அனைத்துத்துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியைப் பெறவேண்டும்.

 

3. கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்.

விடை

கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மை தீமைகளைப் புரிந்து பேசுவர்.

 

4. தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

விடை

தமிழர் ஆற்றுத் தண்ணீரைத் தேக்கிச் சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

 

5. சான்றோர் மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்.

விடை

சான்றோர் மிகுந்த பொறுப்புடன் சிறப்பான சேவை புரிந்து கொள்கையை நிலைநாட்டச் செய்தனர்.

 

தமிழாக்கம் தருக.

1. Education is the most powerful weapon, which you can use to change the world.

கல்வி ஒரு சக்தி வாய்ந்த கருவி. அதைக் கொண்டு உலகை மாற்றியமைக்கலாம்.

2. Looking at beauty in the world is the first step of purifying the mind.

உலகத்தில் உள்ள அழகை ரசிப்பது மனதைத் தூய்மைப்படுத்துகின்ற முதல் படியாகும்.

3. Culture does not make people. People make culture.

கலாச்சாரம் மக்களை உருவாக்கவில்லை, மக்களே கலாச்சாரத்தை உருவாக்குகின்றார்கள்.

4. A people without the knowledge of their past history and culture is like a tree without roots.

மக்கள் கடந்த கால வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அறியாமல் இருப்பது வேரில்லாத மரத்திற்கு ஒப்பாகும்.

5. Anation's culture resides in the hearts and in the soul of its people.

ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது மக்களின் மனதிலும் ஆன்மாவிலும்தான் இருக்கிறது.

 

கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.

தமிழ்ப்பணிபாட்டுக் கருத்தரங்கு

ஜனவரி - 10, மதுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், பண்பாடு குறித்தான தேடலின் தேவை குறித்தும் சிறகுகள் சமூக அமைப்பின் சார்பாக ஒருநாள் கருத்தாங்கம் நடைபெற உள்ளது.

மதுரையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சமூகநல அமைப்பான சிறகுகள் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் தெப்பக்குளம் அருகில், பாரதி கலைக்கூட அரங்கில் ஜனவரி 13ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும் தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தும் "பண்பாடுகளால் வாழும் தமிழர்" என்னும் தலைப்பில் சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி பேசவிருக்கிறார். இதன் இறுதிப்பகுதியாகக் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இனியன் தெரிவித்துள்ளார்.

விடை

நாள்:10.01.2019“நமது பண்பாடு” “நமது பாசறை"

நிகழிடம் : மதுரை தெப்பக்குளம் - பாரதி கலைக்கூடம்.

சிறப்புரை : கவிஞர் அன்பரசி (சமூக ஆர்வலர்)

தலைப்பு : பண்பாடுகளால் வாழும் தமிழர்

விழைவு : சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து உரையாட வருக!

தொலைத்த பண்பாட்டை மீட்டெடுக்க வாரீர்!

இப்படிக்கு,

இனியன், ஒருங்கிணைப்பாளர்,

சிறகுகள் அமைப்பு, மதுரை

 

 

மொழியோடு விளையாடு

 

கட்டுரை எழுதுக.

பண்பாட்டைப் பாதுகாப்போம்

பகுத்தறிவு போற்றுவோம்" - என்னும் பொருள்பட ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.

விடை

முன்னுரை:

பண்புடையார்ப் பட்டுர்டு உலகு - என்னும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க பண்புகளின் உறைவிடமாக நமது தாயகம் திகழ்கிறது. நம்மை வாழவைத்த சான்றோர்கள் அளித்துச் சென்ற கொள்கைகள், வாழ்வியல் நெறிகள் யாவும் உயர்நோக்கம் கொண்டவை. மனதில் குற்றமில்லாமல் இருப்பதே அறம் ஆகும். சிறிதளவு, தீமையும் தராத சொற்களைப் பேசுவதே வாய்மை என்றும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் எம்மொழியிலும் எந்நாட்டிலும் காண முடியாத பண்புகளைச் சான்றோர்கள் நம் மனங்களில் புகுத்திச் சென்றனர்.

ஒருவனுக்கு ஒருத்தி என்றும், பிறன்மனை நோக்காததே பேராண்மை என்றும், இல்லறம் இன்புற வள்ளுவம் வகுத்தளித்த வழியை யாரே இயம்ப இயலும். எனவே, நிலையின் திரியாது அடங்கி அமரருள் நிலைப்போம்.

பகுத்தறிவு பெறுவோம்:

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு' - என்னும் தமிழ் வேதப்படி சகுனம், சாத்திரம், சம்பிரதாயம் என்னும் கேடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உலகத்தோடு ஒட்ட ஒழுகுவோம். ஆணுக்கு இணையாகப் பெண்ணை அனைத்துத் துறைகளிலும் வாய்ப்பளித்து வாழ்வில் வளம் பெறச் செய்வோம். மண்ணிலிருந்து விண்ணுலகுவரை பெண்கள் ஆதிக்கம் செலுத்துவதே பெருமையாகும். சாதி இரண்டுதான் ஆனால் சமத்துவமுடையது. இது நம்முடையது, இது பிறருடையது, இது தேவை, இது தேவையற்றது என்று பேதைமை தவிர்ப்போம்!

முடிவுரை:

பிறருக்கு ஒருபோதும் தீமை செய்யோம்! அறிவியல் உலகில், அவசர வாழ்வில் பதுமை காண்கின்ற இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவோம்!!

 

சித்திரகவி

தமிழ்க் கவிதைகளுள் சித்திரகவி அமைப்பும் ஒன்றாகும். சித்திரகவியில் பல வகைகள் உள்ளன. சித்திரகவி என்பது ஏதேனும் ஒரு பொருளை காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும்.

 

மாலைமாற்று:

மாலைமாற்று சித்திரகவி வகைகளுள் எளிமையானது. (மாலை - பூக்களால் வரிசையாகத் தொடுத்து) மாலையின் தொடக்கத்தில் உள்ள இரண்டு முனைகளிலிருந்து கீழ்நோக்கினாலும் மாலையின் முடிபாக உள்ள ஒரு முனையிலிருந்து மேல்நோக்கிச் சென்றாலும் அம்மாலை ஒரே தன்மை உடையதாகத் தோன்றும். அதுபோல ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடலாக மாலைமாற்று அமையும். ஆங்கிலத்தில் PALINDROME என்னும் வடிவமும் இத்தகையது என்று ஒருவாறு கூறலாம்.

எழுதிப்பழகுக.


தேரு வருதே நீ வா பாப்பா

பாப்பா வா நீ தேரு வருதே

விடை

மாமா நீ வா மாமா

மாமா வா நீ மாமா

 

உடன்பட்டும் மறுத்தும் பேசுக.

ஆங்கிலேயர் வருகை (உடன்படல்)

ஆங்கிலேயர் வருகையால் இந்தியா முழுவதும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு வசதி அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டின் மிகப்பெரிய அலுவலகக் கட்டங்கள் அவர்கள் கட்டுமானத்தால் ஆனவையே. மேலும் நமது தொழில்துறையை மேம்படுத்தியதும் அவர்களே. அவர்களின் காலம், வளர்ச்சிப் படிநிலையின் விடியற்காலம்.

ஆங்கிலேயர் வருகை (மறுத்தல்)

ஆங்கிலேயர் இந்தியாவில் இரயில் பாதைகளைத் துறைமுகங்களோடு இணைத்து அதன் வழியாக நமது அரிய செல்வங்களையும் உற்பத்திப் பொருள்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்றது அவர்கள்வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்காகவே. தொலைத்தொடர்புவசதிகளையும் பெரிய கட்டங்களையும் இந்தியர்களுக்காகச் செய்துகொடுக்கவில்லை. அவர்களின் ஆட்சிமுறைத் தேவைகளுக்காகவே செய்து கொண்டனர். எனவே, ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்த காலம் நம்மை நாமே தொலைத்திருந்த இருள்காலம்.

மேலும்,

தொழில்நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே/வீழ்ச்சியை

தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது / குறைக்கிறது

தமிழர்கள் பண்பாட்டை தக்க வைத்திருக்கிறார்கள் / தள்ளி வைத்திருக்கிறார்கள்

ஆகிய தலைப்புகளில் பேசவும் எழுதவும் செய்க.

விடை

உடன்படல்

தொழில்நுட்ப வளர்ச்சியால் அலுவலகம், இல்லம், மருத்துவம், பேருந்து, வானூர்தி  வளர்ச்சி பெற்று மக்களின் சுமையைக் குறைக்கிறது.

உணவு, முறையில் சரிவிகிதச் சத்துள்ள பொருள்கள் இருப்பதால் மக்கள் விரும்புகின்றனர். தயாரிப்பு நிறுவனம் சுகாதார முறைப்படி தயாரிக்கின்றன.

உடை உடுத்துவதிலும், உண்ணும் உணவிலும், இறை வழிபாட்டிலும் தமிழர்கள் பழமையைக் கைக்கொண்டு மகிழ்கின்றனர். மேலும் மூலிகை மருத்துவம், பாட்டி வைத்தியம் கை கொடுக்கின்றது. விருந்தோம்பல் உபசரிப்பும் நடந்தேறுகிறது.

மறுத்தல்

தொழில்நுட்பத்தால் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வரும் நச்சுவாயுவால் ஓசோன் ஓட்டை, இயற்கை விவசாயம் அழிதல், மண்வளம் குன்றல், நெகிழியால் நீர் வளம் குன்றல் ஏற்படுதல்.

உணவுப்பொருளில் பலவித சத்துப் பொருட்களைச் சேர்ப்பதால் உணவு, நீண்ட நாள் வராமல் உடனே நச்சுத்தன்மை ஆகிறது; உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.

உடை உடுத்துவதிலும், உண்ணும் உணவிலும் மேலைநாடுகளின் விரும்பிகளாக மாறியுள்ளனர். பாரம்பரிய விவசாயம் மறைந்து தொழில்களிலே ஆர்வம் கொண்டுள்ளனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கை மறைந்து தனிக்குடித்தமாகி உறவுகள் நலிந்துவிட்டன.

 

நிற்க அதற்குத் தக


 


கலைச்சொல் அறிவோம்

இனக்குழு - Ethnic Group

புவிச்சூழல் – Earth Environment

வேர்ச்சொல் அகராதி – Etymological Dictionary

முன்னொட்டு - Prefix

பின்னொட்டு - Suffix

பண்பாட்டுக்கூறுகள் - Cultural Elements

 

அறிவை விரிவு செய்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர். பாலகிருஷ்ணன்.

காவடிச் சிந்து - அண்ணாமலையார்.

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா.

எழுத்து இதழ்த் தொகுப்பு - தொகுப்பாசிரியர் - கி.. சச்சிதானந்தன்.

 

இணையச் செயல்பாடு

பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள் அறிவோம்!


படிகள்

. கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி tamilvu என்னும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.

பகுபத உறுப்புகள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை அறிந்து கொள்க.

விளக்கத்தின் முடிவில் 'தன் மதிப்பீடு' என்று வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றிக்கான விடைகளைக் கண்டறிந்த பின் 'விடை' என்பதைச் சொடுக்கி விடையைச் சரி பார்க்க.

செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :


செயல்பாட்டிற்கான உரலி

http://www.tamilvu.org/courses/degree/

c031/co212/html/c0212513-htm#qi1

படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

 

Tags : Chapter 3 | 11th Tamil இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 3 : Pedu pera nil : Questions and Answers Chapter 3 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்